'கார்ட் தேவையில்லை' - கைரேகை பதிவு செய்து ATM இல் பணம் எடுக்கலாம்
ஏ.டி.எம். எந்திரங்களில் அதற்குரிய கார்டை சொருகி பணம் எடுக்கும் வசதி உள்ளது. ஆனால் இனி பணம் எடுக்க கார்டு தேவைப்படாது. ஏ.டி.எம். எந்திரத்தில் கைநீட்டினாலே போதும், அதன்மூலம் நமக்கு தேவையான பணத்தை பெற முடியும். அது எப்படி சாத்தியமாகும் என கருத வேண்டாம்.
இந்த புதிய முறையில் கைரேகைகளை ஸ்கேன் செய்து வங்கியில் பதிவு செய்யப்படும். பிறந்தநாள் மற்றும் ஏ.டி.எம்.கார்டு பின் நம்பர் (ரகசிய நம்பர்) உள்ளிட்டவைகளையும் வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து கார்டு இன்றி ஏ.டி.எம். மையத்தில் கைரேகையை பதிவு செய்து பணம் எடுக்கலாம். இவை தவிர பணம் இருப்பு விவரம் உள்ளிட்ட மற்ற சேவைகளையும் பெற முடியும்.
இந்த சேவை ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிபு மாகாணத்தில் ஓசாகி கியோரிட்சு வங்கியில் இது தொடங்கபபட்டுள்ளது. விரைவில் இம்முறை ஆச்சி, மியி, ஷிகா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைமுறைக்கு வர உள்ளது.
இதேபோன்ற நடைமுறை படிப்படியாக உலகம் முழுவதும் பின்பற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே ஏ.டி.எம். கார்டு தொலைந்து போனது அல்லது வீட்டில் மறந்து வைத்து விட்டோம் என்ற கவலை இனி வேண்டாம்.
ஜப்பானில் பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. அப்போது வங்கி வாடிக்கையாளர்கள் கார்டு இன்றி பணம் எடுக்க வசதியாக இம்முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment