Header Ads



65 வயது மூதாட்டியின் 'தில்'


tu

“இஸ்ரேல் உலகத்திற்கு அச்சுறுத்தலாகும்! அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவுக்கும் அவர்கள் வழங்குகின்றார்கள்! அவர்களுக்கு சமாதானம் தேவையில்லை! கூட்டுப் படுகொலைகள்தாம் தேவை!” – உலகின் முதல் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் முன்னால் ஐந்தடி மட்டுமே உயரம் கொண்ட65 வயது பெண்மணி கோபத்துடன் கூறுகிறார்.

அணு ஆயுதங்களுக்கு எதிராகவும், உலக சமாதானத்திற்காகவும் கன்ஸப்ஸியன் பிசியோட்டா (Concepcion Picciotto) என்ற பெண்மணி கடந்த 30 ஆண்டுகளாக தீரமிக்க போராட்டத்தை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் இருந்து வெள்ளை மாளிகையை காணவரும் பார்வையாளர்களிடம் அவர் பேசுகிறார். உலக சமூகத்திற்கு அச்சுறுத்தலான அணு ஆயுதங்கள் குறித்து பேசுகிறார். அருகில் அதிபர் மாளிகையின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் நிற்கும்பொழுது அதற்கெல்லாம் அஞ்சாமல் தனது கருத்தை வெளியிடுகிறார். வெள்ளை மாளிகையில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் பிசியோட்டாவின் கூடாரம் அமைந்துள்ளது. உள்ளே படுக்கவும், இருக்கவும் வசதிகொண்ட கூடாரத்தின் உள்ளேயும், வெளியேயும் அணு ஆயுதத்திற்கு எதிரான போர்டுகள், அட்டைகள், நோட்டீஸ்கள் உள்ளன.

“யூதக்கொள்கை தேவை! சியோனிஷம் வேண்டாம்! ஹோலோகாஸ்ட் (ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை கூட்டாக படுகொலை செய்ததாக கூறப்படும் சம்பவம்) என்பது மனிதர்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு சியோனிஸ்டுகள் உபயோகிக்கு வார்த்தை” என்ற அட்டையை உயர்த்திப் பிடித்துள்ளார் பிசியோட்டோ.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு நூலையும் அவர் வைத்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னால் போராட்டம் நடத்திய வேளைகளில் கைது செய்யப்பட்டு கொடுமைகளை அனுபவித்துள்ளார். ஆனால், அவர் சளைக்காமல் போராட்டத்தை தொடருகிறார். 1981-ஆம் ஆண்டு முதல் அவர் போராடத் துவங்கினார். தற்பொழுது அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஸ்பெயினில் பிறந்த பிசியோட்டோ சிறு வயதிலேயே அநாதையானவர். ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக பதவி வகுக்கும் பொழுது வெள்ளை மாளிகையின் முன்னால் போராடத் துவங்கினார்.



2 comments:

  1. வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று பேசும் இந்தம்மாவுக்கு இருக்கும் "தில்" கடல் தாண்டி இருக்கும் முஸ்லிம் "மன்னர்களுக்கும்", "ஆட்சியாளர்களுக்கும்" இல்லையே !!!

    ReplyDelete
  2. முஸ்லிம் அல்லாத பெண்தானே, அதுதான் யூத அமெரிக்கா விட்டு வைத்திருகிறது.நபியை கேவலப்படுதுவதையே
    கருத்து சுதந்திரம் என்று சொல்லும் உலகின் ஒழுக்கமான?நாடல்லவா?இதெல்லாம் வேஷம் நம்பி ஏமாற வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.