Header Ads



உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள்

தமிழகத்திலும், இந்தியாவின் ஏனைய சில பகுதிகளிலும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்துள்ளார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் புள்ளி விபரங்களுக்கு அமைய தென்னிந்தியாவின் தமிழகத்தில் மாத்திரம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில் 68 பேர் வரை இந்திய மத்திய அரசினால் நிர்வகிக்கப்படும் 112 முகாம்களில் தங்கியுள்ளனர். 32 ஆயிரம் பேர் வரை வெளிமாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீண்டும் நாடுதிரும்பிய இலங்கை அதிகளின் எண்ணிக்கை 5 ஆயிரம் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, உலகின் 65 நாடுகளில் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் இருப்பதாக அந்த ஆணையகத்தின் புள்ளிவிபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..

No comments

Powered by Blogger.