அமெரிக்க திரைப்பட எதிர்ப்பு போராட்டம் - பாகிஸ்தானில் 6000 பேர் மீது வழங்கு
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பெஷாவர் நகரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பெரிய பேரணி நடத்தினர். பேரணி முடித்து திரும்பிய அவர்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை சூறையாடி அதற்கு தீ வைத்தனர். இதில் தேவாலயம் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அதனையொட்டி இருந்த பள்ளியும் தீக்கிரையாக்கப்பட்டது. அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கூறுகையில், ‘கடந்த வாரம் முதலே நாங்கள் தாக்குதல் அபாயத்தில்தான் இருந்தோம். நாங்கள் கேட்டுக் கொண்டதால் உள்ளூர் நிர்வாகம் எங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. ஆனால் நூற்றுக்கணக்கானோர் கையில் மண்ணெண்ணெய் மற்றும் துப்பாக்கிகளுடன் வந்ததால் போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. ஆலயத்துக்கு தீ வைக்கப்பட்டதும், தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தோம். தீயணைப்பு வண்டிகளை அனுமதிக்காமல் மறித்து விட்டனர்’ என்றனர்.
தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை சேதப்படுத்துவது இஸ்லாமுக்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அமெரிக்க திரைப்படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 6 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முட்டாள்கள்.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்திய இந்து வெறியர்கள் போல் காட்டுமிராண்டித்தனமாக
ReplyDeleteநடந்திருக்கிறார்கள்.சில வேலைகளை பெயர் தாங்கி முஸ்லிம்களைக் வைத்து CIA யும் செய்திருக்கலாம்.விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் உண்மை வெளி வரும்