அமைச்சர் றிசாத் நீதிமன்றம் செல்லவில்லை - வழக்கு 4 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
மன்னார் நீதிமன்றம் தாக்குதல் சம்பவம் மற்றும் மன்னார் நீதவானுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரனை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை மேலதிக நீதவான் ஆர்.திஸாநாயக்க முன்னிலையில் மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்படி இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 43 சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் 43 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஆர்.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் றிஸாட் பதீயுதின் மன்றிற்கு சமுகமளிக்கவில்லை. இதனால் குறித்த வழக்கு விசாரணையினை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்.
இதேவேளை அமைச்சர் றிஸாட் பதியுதீனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை அவதானிப்பதற் காக ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தனது பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்ததுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment