ஆண் துணையின்றி ஹஜ்ஜுக்கு சென்ற 400 நைஜீரியா பெண்கள் சவூதியில் தடுத்துவைப்பு
tn
ஹஜ் யாத்திரைக்கு சென்ற சுமார் 400 நைஜீரிய பெண்களை சவூதி நிர்வாகம் தடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜித்தா நகரை சென்றடைந்த ஹஜ் யாத்திரிகர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹஜ் யாத்திரைக்கு சென்ற சுமார் 400 நைஜீரிய பெண்களை சவூதி நிர்வாகம் தடுத்து வைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜித்தா நகரை சென்றடைந்த ஹஜ் யாத்திரிகர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நெருங்கிய ஆண் துணை (மஹ்ரம்) இன்றி ஹஜ் கடமைக்கு வந்த 398 நைஜீரிய நாட்டு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் நைஜீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுத்து வைக்கப்படவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதற்கு மாத்திரமே அனுமதிக்கப்படுவதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் பயணத்திற்கு முன்னர் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் இவ்வாறு பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு நைஜீரிய ஹஜ் குழுவுக்கான தலைவர் முஹம்ம சாத் கண்டனம் வெளியிட்டுள்ளார். “ஹஜ் குழுவின் தலைவர் என்ற வகையில் சவூதி எம்மிடமான பேச்சுவார்த்தையின் போது இது குறித்து எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது எமக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார். tn
இது சரியான முடிவுதான். மஹ்ரம் இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குக் கூட செல்ல முடியாது. வரவேற்கத் தக்க முடிவு. இலங்கையிலிருந்தும் சில பெண்கள், அடுத்த வீட்டாருடனும், மஹ்ரம் என்ற
ReplyDeleteவரையறைக்குள் வராத தூரத்துச் சொந்தங்களுடனும் ஹஜ்ஜுக்கு செல்கின்றனர். மஹ்ரம் துணை இன்றி வீட்டை விட்டு பெண்கள் வெளியே செல்லுவது தடுக்கப் பட்டுள்ள நிலையில், எப்படி ஹஜ்ஜுக்குச் செல்ல முடியும்?
எல்லாம் சரிதான், தன்னந் தனியாக வந்து அந்நிய அரபியனின் வீட்டில் இம்சைகளுக்கு மத்தியில் வேலை செய்யும் பணிப்பெண்கள் எல்லாம் மஹ்ரம் துணையுடன்தான் வருகின்றார்களா? ஹஜ்ஜுக்கு வருபவர்கள் மீது பாவித்துள்ள மேற்படி சட்டத்தை, சவுதிக்காரனுக்கு வேலை செய்ய வரும் பெண்கள் விடயத்தில் ஏன் கடைப்பிடிப்பதில்லை?
சரியான முடிவு இஸ்லாம் கூறும் முடிவு மிகச்சரியானதாக இருக்கும்,அத்துடன் பணிப்பெண்கள் விடயத்திலும் பின்பற்றப்படவேண்டும்,வீட்டுக்கு பணிப்பெண் தேவையெனில் அவர்களின் முழுக்குடும்பத்தையும் எடுக்க வேண்டும் அத்துடன் முஸ்லிம்கள் மாத்திரம் தான் எடுக்கப்படவும் வேண்டும்.சவுதி அரசு சிந்தித்தால் நான் சொல்வதிலுள்ள உண்மை விளங்கும்.
ReplyDeletelavoix ,ahlas அசலாமு அழைக்கும் சகோதரர்களே! அரபிகள் வீட்டு பணிப்பெண்களையும்,பணியாளர்களையும் வேலைக்கு எடுக்கும் போது அடிமைகளாக நினைத்துதான் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.காரணம் அவர்களை துன்புறுத்தப்படும்போது அரபு அரசுகள் கண்டு கொள்வதே இல்லை.இவர்களும் கஷ்டத்தின் நிமித்தம் ஏஜண்டுகள் சொல்லும் இடத்தில் கையெழுத்தும்போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.எனவே நமது பெண்கள் வெளிநாடு செல்வதை பெற்றோர்களும்,கணவர்மார்களும்,தடுக்க வேண்டும்
ReplyDeleteநம் நாட்டு உம்ராஹ்,ஹஜ் வியாபாரிகளும் இதைத்தானே செய்கிறார்கள்.ஆள் பிடித்துக் கொடுத்தால் Free Ticket
ReplyDeleteகத்தம்,பாத்திஹா ஓத வீடுகளை தட்டிய மௌலவிமார்கள் ஆள் பிடிக்க நாயா,பேயா அலைவதை பார்க்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்காது.அரபிகளுக்கு மகரம் சட்டம் செல்லாது.அது அஜமிகளுக்கு மட்டும்தான்.நபி பிறந்த மண்ணாகவும்,மக்காவும்,மதீனாவும் இருப்பதனால் தப்பிக்கொண்டு போகிறார்கள்.
SAUDIYILA ULLA ELLAH VELINATTAVERKALUM( WORKER) ALAIKKAPPADUWADU (AMMAAL OR AAMIL)SO ITHINK THATS MEANING ADIMAI
ReplyDeletemohammad ali யின் புரிதலில் தவறுள்ளது.
ReplyDelete(عامل) ஆமில் என்றால் தொழிலாளி/ வேலையாள் என்று அர்த்தம், இதில் உத்தியோகத்தவர்கள் அடங்க மாட்டார்கள்.
عبد(அப்து) என்றால் தான் அடிமை என்று அர்த்தம்.
வீட்டுப் பணிப் பெண்களை குறிக்க, அடிமை என்பதனைக் குறிக்கும் பெண்பாற் சொல்லான அமத் என்பது பயன்படுத்தப் படுவதில்லை.
மாறாக الخادمة(கத்தாமா) என்ற சொல்லே பயன்படுத்தப் படுகின்றது.
La Voix அவர்களின் மொழிபெயர்ப்பு சரியானது தான் ஆனால் இன்று வளைகுடா நாடுகளில் உள்ள அநேக தொழில் வழங்குனர்களின் மனோபாவத்திலும் அவர்களது நடவடிக்கைகளிலும் (عامل)தொழிலாளி / (موظف)உத்தியோகத்தர் என்ற வேறுபாட்டை பார்க்க முடிவதில்லை. இவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் மொழிரீதியாக வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றனவே தவிர இன்றைய அரபுகளின் பார்வையில், எல்லாம் எம்மிடம் வேலைசெய்கின்ற வேலைக்காரர்கள் அவ்வளவு தான்.
ReplyDeleteஇன்னும் சொல்லப்போனால், படித்த ஒரு ஆசிய நாட்டுக்காரர் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பதைக்கண்டால் சிலருக்கு நெஞ்சு பொறுக்காது. இதைப் பெரும் அநியாயமாக எண்ணி சிலர் தமக்குள் தம் நாட்டு ஆட்சியாளர்களையே திட்டிகொள்வதை பார்க்கலாம். இத்தனைக்கும் அவர்களில் பலருக்கு அரபு மொழியை தம் நாட்டு வழக்கில் பேசுவதைத்தவிர வேறொன்றும் தெரிந்திருக்காது.
இஸ்லாத்தின் காவலர்கள் நாங்கள்தான்... எங்களைவிட்டால் இஸ்லாத்தை சிறப்பாக பின்பற்றுபவர்கள் யாருமில்லை என்ற தோரணையில் பீற்றுவார்கள், இதே நேரம் ஒரு அஜ்னபி (அரபி அல்லாதவன்) இஸ்லாம் பேசிவிட்டால் ஏளனமாகப் பார்ப்பார்கள். சுருக்கமாகச்சொன்னால் அவர்கள் பார்வையில் நாம் அவர்களுக்கு ஊழியம் செய்ய வந்த ஒருவகை அடிமைகள் தாம்.
எனவே இன்றைய நடைமுறைக்கும் Mohammad Ali போன்றவர்களின் புரிதலுக்கும் இடையில் பெருந்தவரிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
(இதில் சில மனிதப் பழங்கள் அடங்க மாட்டார்கள்-அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக)