Header Ads



யாழ்ப்பாணத்திற்கு 3200 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் (படங்கள் இணைப்பு)


 தேசிய மின்சாரத்தை யாழ்.குடாநாட்டிற்கு வழங்கும் திட்டம் இன்றைய தினம் 10.45 மணியளவில் கிளிநொச்சியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  ஜப்பான் நாட்டின் கடன் உதவியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் 3200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் யாழ்.குடாநாட்டுக்கு 132 கிலோவோட் தேசிய மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.

இம்மின்சாரம் 238 மின்கம்பங்கள் மூலம் வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு பரிமாற்றச் செய்யப்பட்டே விநியோகிக்கப்படுகின்றது.





No comments

Powered by Blogger.