Header Ads



அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிராக மேலும் 2 திரைப்படங்கள்..!


அமெரிக்காவில் முகம்மது நபி பற்றி மேலும் இரு படங்கள் தயாராக உள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முகம்மது நபி பற்றிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ள இருவரில் ஒருவர், மொசாப் ஹசன் யூசுப். பிறப்பால் இவர் பாலஸ்தீனியர். நீண்ட காலத்துக்கு முன், அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்கப் பிரஜை. இவர் முகம்மது நபி பற்றி 30 மில்லியன் டாலர் செலவில் படம் தயாரிக்கிறார். இவரது படத்தின் டைட்டில் மொஹாமட்.

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மொசாப் ஹசன் யூசுப், “பிரபல ஹாலிவூட் நடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். மெல் கிப்சன் நடித்த The Passion of the Christ திரைப்படத்தின் சாயலில், இஸ்லாமைப் பற்றி படம் எடுக்கவுள்ளேன்” என்று கூறியுள்ளார்

இந்த மொசாப் ஹசன் யூசுப் என்பவர் பற்றி தெரியவந்துள்ள மற்றொரு தகவல், இவர் எகிப்திய கிறித்துவர் ஜகாரியா போத்ரொஸ் ஹெனியின்னின் போதனைகளை பின்பற்றுபவர். 

இஸ்லாம் பற்றிய படம் எடுக்கும் இருவரில் மற்றையவர், கனடா நாட்டவர். பெயர் அலி சினா. ஈரானில் பிறந்து, அங்கேயே இஸ்லாமியராக வளர்ந்தவர். அதன்பின் கனடாவுக்கு வந்து மதம் மாறியவர். இவரது படத்துக்கான பட்ஜெட், 10 மில்லியன் டாலர்.

மேற்படி இருவரும் திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளமையானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம் மறுபக்கம் இவர்கள் இருவரும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவுமே திரைப்படம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆம், எல்லாவற்றுக்கும் போதுமானவன் அல்லாஹ்வே..!!

1 comment:

  1. மத்திய கிழக்கு நாடுகளில்உள்ளவர்களை,புலம் பெயந்தவர்களை பெயர்களை வைத்து மதங்களை அடையாளப்படுத்த முடியாது.முஸ்லிம் பெயர் தாங்கிகளை வைத்து எதுவும் செய்யக்கூடிய உலகத்தில்வாழ்கிறோம்.உணர்ச்சிவசப்படாமல் புத்தி சாதுரியமாக முடிவுகள் எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.