Header Ads



அமைச்சர் உதுமாலெப்பை 2 ஆம் திகதி பதவியேற்கிறார்


ஸமட்

மாகாண அமைச்சுப் பொறுப்புக்களை எதிர்வரும் 2ஆம் திகதி ஏற்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை குறிப்பிட்டார். கிழக்கு மாகான சபையின் அமைச்சு பொறுப்பை ஏற்பது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

இது குறிதது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த மாகாண சபையில் வகித்த அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் தனக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது. தனக்கு மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் கிடைத்தை இந்த அமானிதப் பொறுப்பை கிழக்கில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவருக்கும் எவ்வித வேறுபாடுகளுமன்றி நிறைவேற்ற இறைவன் துணை புரிய வேண்டும். எவ்வித வேறுபாடுகளுமின்றி மக்களின் தேவை, பிரதேசங்களின் தேவை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, எமது தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் விழிகாட்டல்களுக்கு அமைவாக கிழக்கில் எனது அமைச்சு ஊடாக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.; இதற்கு ஆளுனர், முதலமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவர் என எதிர்பார்வதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கான உத்தியோகபூர்வ அமைர்வு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் தகிதி இடம் பெறவுள்ளது. இதன்போது கிழக்கு மாகாண சபைக்குத்  தெரிவு செயய்ப்பட்ட உறுப்பினர்கள் 37 பேரும் தங்களது உறுப்பினர் பதவிக்கான பொறுக்களை ஏற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்களது.

No comments

Powered by Blogger.