Header Ads



பின்லாந்தில் 260 அடி ஆழத்தில் சுரங்க உணவு விடுதி

பின்லாந்தில் லோக்ஜா என்ற இடத்தில் சுண்ணாம்பு கல் சுரங்கம் உள்ளது. 115 ஆண்டு பழமையான இந்த சுரங்கம் 1250 அடி ஆழம் உள்ளது. இன்னும் இங்கு சுண்ணாம்பு கல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சுரங்கத்தில் 260 அடி ஆழத்தில் ஒரு உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. அதை பின்லாந்தின் சிறந்த சமையல் சுவை நிபுணர் பட்டம் வென்ற லின்னாமகி என்பவர் தொடங்கியுள்ளார்.
 
இங்கு நன்னீரில் வளர்க்கப்பட்ட மீன்கள் மற்றும் நத்தைகள் வறுவல் உணவு பரிமாறப்படுகிறது. அத்துடன் ஆப்பிள் ஜூஸ், குளிர்பானங்கள் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. சுரங்கத்துக்குள் சென்று வரும் கட்டணமும் இதில் அடங்கும்.
 
இந்த உணவு விடுதிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சுரங்கத்துக்குள் உணவு வகைகளை சமைத்து பரிமாறுவது தனக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது என சமையல் கலை நிபுணர் லின்னாமகி தெரிவித்துள்ளார்.
 
 

No comments

Powered by Blogger.