Header Ads



பாகிஸ்தானில் இருவேறு விமான விபத்துக்களிலிருந்து 244 பயணிகள் உயிர் தப்பினர்

 
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று, லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்படத் தயாராக இருந்தது. பயணம் செய்ய வேண்டிய 48 பயணிகளும் விமானத்தில் ஏறியதும், விமானம் புறப்பட்டது.

அப்போது மழை பெய்து ஓடுபாதை ஈரமாக இருந்தது. இதனால் நிலைதடுமாறி சறுக்கியபடியே சென்ற விமானம், ஓடுபாதையைவிட்டு விலகி தரையில் மோதி நின்றது. இதனால் விமானம் சேதமடைந்தது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.

விபத்தினால் பாதிக்கப்பட்ட ஓடுபாதை உடனடியாக மூடப்பட்டது. இதனால் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அவசர காலத்தில் பயன்படுத்தக்கூடிய மற்றொரு ஓடுபாதை வழியாக விமானங்கள் சென்றன.

மழை பெய்தது ஒரு காரணமாக இருந்தாலும், ஓடுபாதையின் முனையில் விமானத்தை நிறுத்த விமானி முயன்றதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் குவைத்தில் இருந்து லாகூர் நோக்கி வந்துகொண்டிருந்த பாகிஸ்தான் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக குவெட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் வந்த 196 பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர். விமானங்களை சரியாக பராமரிக்காததால், பல நேரங்களில் விமானங்கள் தாமதமாக புறப்படுவது, ரத்து செய்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.