இலங்கை 2090 இல் முஸ்லிம் நாடாகும் - தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜிஹாதிய தொட்டில்
உதவி - நவமணி
* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.
* எம்.எச்.முஹம்மத், ஹாபிஸ் நஸீர் அஹ்மத், பாகீர் மாகார், ஏ.ஸீ.எஸ் ஹமீட், ஹகீம், அஷ்ரப் ஆகியோர் முஸ்லிம் அடிப்படைவாதிகளாவர்.
* தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.
* முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை, நாளாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி, 5,000 பிக்குகளை கொன்றான்.
* மலேசியா, இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.
* புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
* இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை இலங்கையிலிருந்து துரத்திய பிரேமதாச முஸ்லிம் அடிப்படைவாதிகளது சதியில் சிக்கியவராவார்.
* வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம் அகதிகள் புத்தளத்திலும் கல்பிட்டியிலுமுள்ள சிங்களவர்களது சொத்துக்களைப் பிடித்துக் கொண்டார்கள்.
* இலங்கையிலுள்ள மத்ரஸாக்களில் முஸ்லிம் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்டவை சம்பிக ரணவகவின் கருத்துக்களாகும்.
ஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள "அல்கைதா அல்ஜிஹாத்' என்ற தனது நூலில் மேலுள்ள கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (அல்ஜிஹாத் அல்கைதா இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் பாட்டலி சம்பிக ரணவக) மேற்படி நூலிலிருந்து பெறப்பட்ட முக்கிய கருத்துக்களை பக்கங்களுடன் அவரது வார்த்தைகளிலேயே வரிக்கு வரி அப்படியே மொழிபெயர்த்துத் தருகிறோம். அவர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி எவ்வளவு மோசமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார் என்பதை இதிலிருந்து புரியலாம். அவர் துவேஷம், பொறாமை, வைராக்கியம் , வெறி என்பனவற்றை கக்குகிறார்.
அல்கைதா அல்ஜிஹாத் என்ற நூலின் பிரதானமான கருத்துக்கள் வருமாறு;
சர்வதேச முஸ்லிம் அடிப்படைவாதம்
உலகில் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்து போனதற்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்பு தான் காரணமாகும். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வரையிலும் இதுதான் பகிரங்க உண்மையாகும். இப்போதுள்ள ஈரான், ஈராக், மக்கா மற்றும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஒரு காலத்தில் பௌத்த வழிபாடுகள் நடந்துள்ளன. (முகவுரையில்)
தற்போது முழு உலகத்திலும் இஸ்லாத்தின் பரவலுக்கும் அடிப்படைவாதத்துக்கும் பணம் கொடுக்கும் நாடாக சவூதி அரேபியா மாறியிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படை வாதம் உலகம் பூராவும் பரவுவதற்கும், ஷரீஆ சட்டத்தை பரப்புவதற்கும் ஈரானும் அடிப்படையாக அமைந்திருக்கிறது. இலங்கையின் அடிப்படைவாதக் குழுக்க ளுக்கு பண மற்றும் யுத்த உதவிகளைச் செய்யும் நாடாக ஈரானைக் காணலாம். அல்ஜீரியா, மொரோக்கோ, சிரியா, ஜோர்தான், லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கிறது. (பக்:78)
கடாபி இலங்கை வந்தவேளை முஸ்லிம்கள் அவருக்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது தனது பேரப்பிள்ளை இலங்கைக்கு வரும் போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு சகலரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்று கூறினார். கடாபி மனதால் இஸ்லாமிய அடிப்படைவாதிதான். இலங்கையிலுள்ள சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் அமெரிக்காவை போலியாக எதிர்ப்ப வர் களுக்கும் அவர் அடிப்படையான பல உதவிகளைச் செய்வது இரகசியமல்ல. சதாம் ஹுஸைன் மேற்குலக எதிரிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத கட்சிகளுக்கும் பண ரீதியான மற்றும் ஆயுத ரீதியான பல உதவிகளைச் செய்திருக்கிறார். (பக்:111, 116)
"இஹ்வானுல் முஸ்லிமூன்' இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் சவூதி அரேபியாவின் ஸலபீக்களும் அடிப்படைவாதிகளாவர். இவர்கள் தான் உஸாமா பின்லாடினை உருவாக்கினார்கள். சவுதி அரேபியாவுக்குள் அல்காயிதாவுக்கு பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. இதற்காக IIRO, ISCAG, IWWWM போன்ற நிறுவனங்கள் பயன்படுத் தப்படுகின்றன. உலகெங்கும் பள்ளிவாசல் களை, மத்ரஸாக்களை, பாடசாலைகளைக் கட்டுவதற்கும் சேமநலத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் சவூதி அதிக பணத்தை வழங்குகின்றது. இலங்கையிலும் இது இப்படித்தான் நடக்கின்றது. அந்தவகையில், பயங்கரவாதத்தின் ஆணி வேராக சவூதியின் ரியால்தான் இருக்கிறது. (பக்:228)
இந்தியாவுக்கு வந்த முஹம்மத் பின் காஸிம், காஷ்மீரின் பௌத்த அரசை தாக்கினான். உலகின் மிகப் பெரிய பௌத்த பல்கலைக்கழகமாக இருந்த நாலந்தாவுக்கு தீயிட்டுக் கொழுத்தி 5000 பிக்குகளைக் கொன்று குவித்தான். பிக்குகள் உணவருந்திக் கொண்டிருந்த வேளையில் தான் காஸிம் நாலந்தாவுக்குள் நுழைந்தான். அந்தப் பிக்குகள் எந்த எதிர்நடவடிக்கையிலும் ஈடுபடாததினால் இந்தக் கொலையையும் தீயிடலையும் அவனால் செய்ய முடிந்தது. தெய்வத்தில், வாழ்க்கைக்கோர் குறிக்கோளில் நம்பிக்கை வைக்காத பௌத்தர்கள் பிசாசுகளைப் போன்று அவனுக்குத் தென்பட் டார்கள். பௌத்தர்கள் தமது அரசை ஆயுத பலத்தால் ஆளவில்லை. எனவே, பௌத்த சாம்ராஜ்யத்தின் வடமேல் பகுதி சரிந்து விழுந்தது. பௌத்த ராஜ்யத்தின் சிதைவுகளின் மீது கட்டி யெழுப்பப்பட்ட இஸ்லாமிய அரசு கி.பி 808 வரை இந்தியா வின் சிந்துப் பிரதேசத்தில் நிலைத்தது. (பக்:52)
மலேசியா மிகவேகமாக முஸ்லிம் அடிப் படைவாதத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்தோனேசியாவிலிருந்த கோத்திரங்களது தலைவர்களுக்கு அரேபிய வியாபாரிகள் பணம் (சந்தோஷம்) கொடுத்துத்தான். இஸ்லாத்தைப் பரப்பியிருக்கிறார்கள். தற்காலத்தில் அங்கு அதிதீவிரவாதிகளது கட்சியானது ஷரீஆ சட்டத்தை நடைமுறைப் படுத்தும்படி ஆர்ப்பாட்டம் செய்து தேர்தல்களில் கூட முன்னணி வகிக்கிறது. உலகி லேயே அதிக எண்ணிக்கையிலான அங்கத்தவர்களைக் கொண்ட முஸ்லிம் அடிப்படை வாதக் கட்சி இந்தோனேசியாவிலேயே உள்ளது. (பக்:120)
மலாயா, சுமாத்தரா, ஜாவா ஆகிய தீவுக ளும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளும் ஏற்கனவே பௌத்த இராஜ்யங்களாக இருந்தன. அப்பகுதிகளுக்கு அரபு வர்த்தகர்கள் வந்தார்கள். அப்பிரதேசங்களி லிருந்த கோத்திரத் தலைவர்கள், பிராந்திய ஆட்சியா ளர்கள், இராஜாக்கள், இளவரசர்கள் ஆகி யோருடன் வியாபார தொடர்புகளை வைத்து வியாபாரப் பண்டங்க ளைக் கொடுத்து அவர்களை வசீகரித்தார்கள். சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துள் இணை வதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுகம்பெற பௌத்த மதம் தடையாக இருந்ததால் அவன் இஸ்லாத்திற்குச் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது. (பக்:55)
முஸ்லிம்கள் தமக்கிடையிலுள்ள பிரிவுகளை மறந்து ஐக்கியப்பட்டு ஒரே சர்வதேச சமூகமாக மாற வேண்டும் என ஆப்கானி விரும்பினார். அவருக்கு 100 வருடங்க ளுக்குப் பிறகு அவரது கருத்தை உஸாமா பின் லாதின் நடைமுறைப்படுத்துகிறார். ஆப்கானியைப் போலவே முஹம்மத் அப்துஹவும் முக்கியமானவராக இருக் கிறார். ஸெய்யித் குத்ப், முஹம்மத் குத்ப் போன்றவர்களும் எகிப்திலே மேற்குலகுக்கெதிரான அடிப்படைவாதத்தை போதித்திருக் கிறார்கள். (பக்:65)
புலிகளும் முஸ்லிம் பயங்கரவாதிகளும்
தமிழ் பிரிவினை வாதத்தை தோற்க டிக்க முஸ்லிம் அடிப்ப டைவாதிகள் சிங்களவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. இது அவர்களது தந்திரமாகும். சிதைந்துபோன நாட்டில் கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தானையும் சபிஸ்தானையும் (கிழக்கில் தனியான முஸ்லிம் ஆட்சியை) உருவாக்குவதே இவர்களது நோக்கமாகும். (முகவுரையில்)
அல்கைதாவுக்கும் புலிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. புலிகளுக்கு பிலிப்பைன்ஸிலுள்ள மேரோ முஸ்லிம் விடுதலை இராணுவத்துடன் தொடர்பிருக் கிறது. புலிகள் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அல்காயிதாவிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் முஸ்லிம் கெரில்லாக் களுக்கும் தமிழ் நாட்டிலுள்ள அல்உம்மா எனப்படும் குழுவினருக்கும் புலிகள் ஆயுதப் பயிற்சியளித் திருக்கிறார்கள். புலிகள் அல்கைதாவின் ஆயுதங்களை கடல் மார்க்க மாக இடத்துக்கிடம் நகர்த்துவதற்கு உதவி செய்திருக்கிறார்கள். கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தை தாக்க வந்த புலிகள் அல் கைதாவிடம் பயிற்சி எடுத்தவர்கள் தான். (பக்:248,249)
அஷ்ரப், சேகு இஸ்ஸதீன், ஒஸ்மான் ஆகியோர் உருவாக்கிய முஸ்லிம் அடிப் படைவாதத்துக் கெதிராக நான் போர் தொடுக்க முனைந்த மைக்கு அவர்கள் தீகவாபியை திட்ட மிட்டு அழித்ததுதான் காரணமாகும். (முகவுரையில்)
2003ஆம் ஆண்டு முஸ்லிம்கள் "அல் லாஹு அக்பர்' என கோஷமிட்டு ஒலுவில் பிரகடனத்தை செய்தார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நெருப்புப் பந்தமாக மாறியிருக்கும் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் தான் அதற்குத் தலைமை வகித்தது. அதன் மூலம் முஸ்லிம் கள் இந்நாட்டின் தனியான சாதியினர் என்றும் அவர்களுக்கு வரலாற்று ரீதியான பூர்வீக பூமியிருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு சுயாதிபத்தியமிக்க அதிகாரம் வேண்டுமென்றும் பிரகடனம் செய்யப்பட்டது. இது எத்தனை உயிர்களது அழிவில் முடியுமோ தெரியாது. (பக்:252)
1976இல் வட்டுக்கோட்டையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கருத்தரங்கை நடாத்தி சுதந்திரமான தமிழீழத்தைப் பிரகடனம் செய்தார்கள். அதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோசமெழுப்பி ஆசீர்வதித் தார்கள். இதன் பின்னர் தான் 46000 பேரின் மரணத்திற்குக் காரணமான புலிகளது பிரிவி னைவாத யுத்தம் வெடித்தது. இதுபோன்று தான் ஒலுவில் பிரகடனத்தையும் நாம் பார்க்கிறோம். (பக்:253)
வரலாறு இல்லாத முஸ்லிம்கள்
இலங்கை அரசின் பணத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் கலாசார திணைக்களத் தினால் நடாத்தப்படும் மீலாத் விழாக்களில் வெளியிடப்படும் நூற்களில் இலங்கை முஸ்லிம்களது வரலாறு கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென நிறுவப்பார்க்கி றார்கள். இது பொய்யான கருத்தாகும். ஆனால், முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கைக்குமான தொடர்பு 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான் ஓரளவு ஏற்பட்டது. அதற்கு முன்னரான முஸ்லிம் களது வரலாறு பற்றிக்கூறப்படும் கதைகள் மத அடிப்படைவாதிகளது வதந்திகளாகும். அதற்கு மார்க்கத்திலுள்ள குருட்டு நம்பிக்கை தான் காரணமாகும். இதற்கு புதைபொருளா ராய்ச்சி ஆதாரங்கள் எதுவும் இல்லை. கி.பி.
16ஆம் நூற்றாண்டிலிருந்து தான் இலங்கை யில் இஸ்லாம் பரவியிருக்கின்றது. அது 19ஆம் நூற்றாண்டில்தான் ஸ்திரமாகப் பரவியதென முடிவு செய்ய முடியும். (பக்:256)
முஸ்லிம்களின் சுயநலமும் துரோகமும்
இலங்கையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும் 21 பேரில் 17 பேர் இலங்கை முஸ்லிம்களாவர். (பக்:92)
போர்த்துக்கேயரது காலத்தில் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேய ருக்கும் இடையே 1517ல் மோதல் ஏற்பட்டது. இங்கு சமாதானம் செய்யச் சென்ற கோட்டை அரசன் தர்மபராக்கிரமபாகுவிற்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் யுத்தம் மூண்டது. முஸ்லிம்கள் கோள் சொன்னதனால் தான் சிங்கள அரசன் தம்மை எதிர்த்தான் என இதற்கு போர்த்துக்கேயர் காரணம் கூறினார்கள். (பக்:263)
போர்த்துக்கேயரால் கொழும்பிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு சிங்கள அரசர்கள் தான் புகலிடம் கொடுத்தார்கள். ஆனால், முஸ்லிம்களது நாட்டுப்பற்று ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது. முஸ்லிம்களை போர்த்துக்கேய தாக்குதல்களிலிருந்து பாதுகாத்த செனரத் அரசன் அந்த போர்த்துக்கேயர்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்கு முஸ்லிம்களை அழைத்தான். 4000 பேரில் 1500 பேர் மட்டுமே முன்வந்தார்கள். அந்தவகையில், முஸ்லிம்கள் தமது இருப்பைப் பற்றி மட்டுமே யோசித்தார்களே தவிர நன்றிக் கடன் தெரிவிக்கவில்லை. கண்டி இராச்சியம் பற்றிய இரகசியத் தகவல்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவர்களும் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்களுடன் இணைந்து ஆங்கிலேயர் கண்டி அரசுக்கெதிராக 1802ல் யுத்தம் தொடுத்தார்கள். அந்த யுத்தத்தில் மலே, ஜாவா, முஸ்லிம் படைவீரர்களும் இருந்தார் கள். ஊவாவெல்லஸ்ஸ கிளர்ச்சியும் இதுபோன்ற காரணத்தால் ஏற்பட்டதாகும். சிங்களவருக்கெதிரான பல யுத்தங்களுக்கு முஸ்லிம்கள் காரணகர்த்தாக்களாவர். 1915ம் ஆண்டு முஸ்லிம் சிங்கள மோதல் சிங்கள எழுச்சிக்கு வித்திட்டது. பெரும்பான்மை சிங்களவரை ஆத்திரமூட்டச் செய்வது முஸ்லிம்க ளுக்கு பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் எனும் பாடத்தை முஸ்லிம்கள் படித்துக் கொண்டார்கள். (பக்: 263)
அரசியலில் முஸ்லிம் அடிப்படைவாதம்
இலங்கையின் நவீனகால இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எகிப்தின் அடிப் படைவாதியான ஒராபிபாஷாதான் அடித்தளமிட்டார். அதனை தேசிய ரீதியில் சித்திலெப்பை பிரசாரம் செய்தார். 1899ல் கிண்ணியாவில் மத்ரசதுல் சைதிய்யா என்ற மத அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை உருவாக்கப்பட்டதுடன் நவீன கால அடிப்படைவாதம் ஆரம்பமாகிறது. (பக்:270)
சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியல் செய்தது போல முஸ்லிம்களுக்கு மத்தியிலும் காரியப்பர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ரீ.பி. ஜாயா போன்ற வர்களும் மேட்டுக்குடிகளாயினர். இவர்கள் அரசியலுக்கு வருவதற்காக ஆங்கிலேயருக்கு சேவகம் செய்தார்கள். உள்நாட்டவர்களை கஷ்டத்தில் வீழ்துவதே இவர்களது ஒரே அரசியல் தகைமையாக இருந்தது. (பக்:272)
பதியுதீன் "ஜிஹாத்' என்ற சஞ்சிகையை வெளியிட்டதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவியது.
இறுதியில் இந்த ஜிஹாத் அடிப்படை வாதத்துக்கு ஐ.தே.க. தான் உதவி செய்தது. 1970 தேர்தலில் நாடுபூராகவும் சமதர்மக் கட்சி வென்றபோது பொத்துவில், நிந்தவூர் தொகுதிகளில் ஐ.தே.க.வின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதிலிருந்து அடிப்படைவாதம் எவ்வளவு பலமானது என்பதைப் புரியலாம். முஸ்லிம் அடிப்படைவாதத்தை கட்டியெழுப்பும் நோக்கில் பதியுதீன் மஹ்மூத் படித்த பரம்பரையை கொழும்புக்கு வெளியே அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளில் உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்படடவர்கள் தான் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார்கள். (பக்:273)
ஐ.தே.க.வின் எம்.எச். மொஹமட், பாக்கிர் மார்க்கார், ஏ.ஸி.எஸ். ஹமீட், அப்துல் மஜீட் போன்ற தலைவர்கள் ஊடாக இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்ந்தது. அவர்கள் பள்ளிகளைக் கட்டினார்கள், திட்டமிட்ட அடிப்படையில் தன்னார்வ நிறுவனங்களை ஏற்படுத்தினார்கள். 1984ல் இஸ்ரேலுடன் ஜே.ஆர். ஜயவர்தனவும் அத்துலத்முதலியும் தொடர்பினை ஏற்படுத்தியபோது புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அடிப்படைவாதிகளும் பொதுவாக அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்தார்கள். (பக்:275)
முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் அடிப்படை வாத கட்சியாகும். ஜே.ஆர். முஸ்லிம் அடிப்படை வாதத்தின் எழுச்சியை அறிந்து அதனை கவனமாக அணுகினார். முஸ்லிம் பெண்களுக்கான ஹிஜாப், ஷரீஆ சட்டம் என்ப வற்றை அனுமதித்தார். இந்தச் சலுகைகளை வழங்கினால் முஸ்லிம்களை வளைக்கலாம் என நினைத்தார், ஆனால், பதிலாக முஸ்லிம் அடிப்படைவாதம் மேலும் பலமடைந்து வளர்ச்சியடைந்தது. (பக்:276)
பிரேமதாஸ யுகம்தான் (19891993) முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு வளமான காலமாகியது. அவர் முஸ்லிம் அடிப்படை வாதத்துடன் இணைந்தார். இஸ்ரவேலை வெளியேற்றினார். பயங்கரவாதத்தை அடக்கும் உபாயங்களை ஈரானிலிருந்து பெற்றார். 1989இல் ஜே.வி.பி. கிளர்ச்சியால் நாடு பலவீனமுற்ற வேளையில் அவரது உதவிக்கு இஸ்லாமிய வங்கி வந்தது. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை
அரசின் பணத்தையும் பொருட் சந்தையையும்
முஸ்லிம் அடிப்படைவாதம் தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இந்தியாவை பிரேம தாஸ எதிர்த்ததால் அவருடன் பாகிஸ்தான் நெருங்கி வந்தது. அதன் விளைவாக பாகிஸ்தானிலுள்ள அடிப்படைவாத கலாசாலை களுக்கு இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுவதற்கு வழிசமைக்கப்பட்டது. (பக்: 277)
1994இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மு.கா. 7 ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியின் பின்னணியில் தேசிய, சர்வதேச சக்திகள் உள்ளன. நன்றாக மோப்பம் பிடிக்கும் சக்திகொண்ட அஷ்ரப் சந்திரிக்காவுடன் இணைந்தார். அன்றிலிருந்து முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தேன்நிலவு ஆரம்பமானது. துறைமுகத்தை ஸ்தாபிக்க எந்தவகை யிலும் பொருத்தமற்ற இடமான ஒலுவிலில் துறைமுகம் ஸ்தாபிக்க ஏற்பாடாகியது. அடுத்த இலக்கு ஒரு விமான நிலையம் தான். முஸ்லிம்களுக்கு மட்டுமான பல்கலைக் கழகத்தை தென்கிழக்கில் கட்டினார்கள்.
இது பதியுதீன் ஏற்படுத்திய முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சியை மேலும் பலப்படுத்தும் முயற்சியாகும். துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட கல்விக் கூடங்களுக்குள் தடைசெய்யப்பட்ட பர்தாவும் முஸ்லிம்களது தொப்பியும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் கட்டாயமாக்கப்பட்டது.
பள்ளிகளைப் பராமரிக்க சவூதியிலிருந்து 6.6 பில்லியன் ரூபாய்கள் பெறப்பட்டது. நாடுபூராகவும் 700 அடிப்படைவாத மத்ரஸாக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. போதைவஸ் துக்களை இறக்குமதி செய்வது, கள்ளச் சாமான்களை விற்பது, பாதாள உலகக் கோஷ்டிகளது செயற்பாடுகள், கறுப்புப் பணத்தை கையாள்வது என்பவற்றை முஸ்லிம் அடிப்படைவாதமே செய்கிறது. இந்த அடிப்படைவாதிகள் தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பலவற்றை நிர்வகிக்கிறார்கள். (பக்:279)
முஸ்லிம்களது பகல் கொள்ளை
வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண் டது போல், தப்பிவந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும், கற்பிட்டியிலும் உள்ள சிங்க ளவர்களது சொத்து செல்வங்களை கைப் பற்றிக் கொண்டார்கள். (பக்:278)
அஷ்ரஃப் தனது பேரம் பேசும் பலத்தை பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமையும் இலங்கையின் உயர்ந்த கட்டடமான இஸ்லாமிய தகவல் நிலையத்தையும் கட்டியிருக் கின்றார். அஷ்ரபுக்கு சவுதி நிதியிலிருந்து கோடிக் கணக்கில் பணம் கிடைத்ததாகவும் இதன் மூலவேலைத்திட்டத்தை சவுதியில் அடிப்படைவாதத்தைப் பயின்ற ஹாபிஸ் நஸீர் அஹ்மத் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஷ்ரப் அகால மரணமாகாவிட்டால் அவர் உருவாக்கிய நுஆ 2012 இல் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் தனது திட்டத்தை அடைந்திருக்கும். (பக்:280)
முஹம்மத்தின் மரணத்தின் பின்னர் அடுத்த தலைவர் யார் என்ற பிரச்சினை வந்ததுபோல அஷ்ரபின் மரணத்தின் பின்பும் அதே பிரச்சினை வந்தது. பேரியல், ஹகீம், ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அப்பதவிக்கு போட்டி போட்டார்கள். எதிர்காலத்தில் ஹகீம், அதாவுள்ளாவுக்கிடையிலன்றி பாராளுமன்றமுறைக்கும் ஜிஹாத் ஆயுதப் போராட்டத்துக்குமிடையில் தான் மோதல் நடக்கும். பிரபாகரனுக்கு வடக்கு, கிழக்கு தாரை வார்க்கப்பட்டதன் அபாயகரமான முடிவுகளில் ஒன்றாக உஸாமா பின் லாதினை கிழக்குக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அமையும்.
அபாயகரமான நிலை
முஸ்லிம்களது மிக விரைவான சனத் தொகைப் பெருக்கம் புதிய கல்வி மாற்றம், தமிழ் பாசிச யுத்தத்தாலும் ஐ.தே.க.வுக்கும் ஐ.ம.சு.கூ.க்கும் இடையிலான மோதலாலும் ஏற்பட்ட பலவீனம், எண்ணெய் பணத்தின் குமுறல் இவை அனைத்தினதும் முடிவு இலங்கையின் முஸ்லிம் அடிப்படைவாதத்தை, வெடிப்பதற்கு தயார்நிலையிலுள்ள எரிமலையைப் போன்றாக்கிவிட்டது. இலங்கை உளவுப் பிரிவின் தகவலின்படி தமக்கிடையில் மோதிக் கொள்ளும் 4 முஸ்லிம் ஆயுதக் குழுக்கள்
(11ஆம் பக்கம் பார்க்க...)
(முஜாஹிதீன், ஒஸாமா, ஜெட், பீம்)) இலங்கையில்; இருப்பதாகவும் அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் அறிய முடிகிறது. ஒலுவில் பிரகடனம் என்பது அர்மில்லாததொன்றல்ல. அது இந்தோனேஸியாவையும் இலங்கையையும் சேர்த்துத் தீயிட்டுக் கொழுத்தி விடும். (பக்:281)
அடிப்படைவாதக் கலாசாலைகள்
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதமானது மக்தப்கள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய முன்பள்ளிகள், முஸ்லிம் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் போதிக்கப்படுகின்றது. மத்ரஸாக்களைப் பொறுத்தவரையில் மக்கிய்யா, பாரீ, பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, கிண்ணியா சஹதிய்யா, மாதர அன்மின்னதுல் பாஸியா, மைதுல் அரபுப் பாடசாலை (தர்ஹாநகர்), காஸிமிய்யா, கபூரிய்யா என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவை வெளிநாட்டு பணத்தால் வேகமாக நவீனமயப்பட்டு வருகின்றன. அங்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆசிரியர்கள் கூட போதிக்கிறார்கள். 20032010ற்கும் இடையில் 700 மத்ரஸாக்களை நிர்மானிக்க சவுதி வாக்குறுதியளித்துள்ளது. பாடத்திட்டம் முழுக்க முழுக்க இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. நளீம் ஹாஜியாரால் 1973ல் பேருவலையில் ஸ்தாபிக்கப்பட்ட ஜாமியா நளீமிய்யா அடிப்படைவாத கலாசாலை இங்கு மைல்கல்லாகும். வெளிநாடுகளைச் சேர்ந்த அடிப்படைவாத ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்தி, நவீன தொழினுட்பத்தை போதிக்கும் இடமாக அது மாறியுள்ளது. (பக்: 284,285)
1996ல் 111 அடிப்படைவாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் 5 பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய நாகரிகத்துக்கான தனியான துறைகள்கள் உள்ளன. அஷ்ரப் 1995ல் தனியான முஸ்லிம் பல்கலைக்கழத்தை ஆரம்பித்ததுடன் இந்நிலை இன்னும் வேகமடைந்துள்ளது. நாட்டின் ஏனை பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட சபரகமுவ, ரஜரட, ஊவா, வடமேல் பல்கலைக்கழகங்கள் இறுதி மூச்சுவாங்கும் போது இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மடைதிறந்த வெள்ளமாக வெளிநாட்டு உதவிகள் வந்து சேர்வதால் அது சீக்கிரமாக நவீன பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இந்திய சுதந்திரப் போருக்கு அலிகார் பல்கலைக்கழகம் செய்த பங்களிப்பை விட கிழக்கின் சுய ராஜ்ய உருவாக்கத்திற்கு அதிகமான பங்களிப்பை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் செய்யும் என்பதை 20030129 அன்று தென்கிழக்குப் பல்கலைக்கழக பூமியில் ஒலுவில் பிரகடனம் வெளியிடப்பட்ட நாளில் பேச்சாளர்கள் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது. அந்தவகையில் அது இன்று முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டில் என்பது தெளிவாகிறது. (பக்: 310)
வேகமாகப் பரவும் முஸ்லிம் சனத்தொகை
முஸ்லிம்களது சனத்தொகை அண்மைக்காலத்தில் அதிவேமாகப் பரவி வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு அவர்கள் செல்வதாலும் அதிகமாகத் திருமணங்கள் நடைபெறுவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. சிங்களவர்களது வளர்ச்சி 1& ஆகும். அதேவேளை முஸ்லிம்களது வளர்ச்சி 2.8 & ஆக இருக்கின்றது. 2090 ம் ஆண்டு முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பன்மையினராக மாறுவார்கள். சிங்கள சமூகத்தில் இளைஞர்களது விதிசாரம் 16 & ஆகும். அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் இளைஞர்களது விகிதாசாரம் 29 & ஆகும். எனவே, பொதுவாக புரட்சிகளுக்கு இளைஞர்களே காரணமாக அமைகின்றனர் என்ற வகையில், முஸ்லிம் சமூகத்திலும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளது புரட்சி பலமடைவதற்கு இது வழிவகுக்கும். இலங்கையின் மொத்த சனத்தொகையில் பெண்களது தொகை ஆண்களது தொகையை விடவும் 1,77,961 மேலதிகமாக இருக்கிறது. இவர்களுள் 1,35,251 பேர் சிங்களப் பெண்களாவர். ஆனால் இந்தப் பெண்களை எதிர்காலத்தில் திருமணம் செய்வது யார்?. இவர்கள் ஒன்றில் முஸ்லிம் அல்லது வெளிநாட்டு ஆண்களையே முடிக்க வேண்டும். கடந்த காலத்தில் பலதார மணத்தின் மூலமே இஸ்லாம் இலங்கையில் பரவியது. (பக்:317)
பௌதர்களிடம் சிங்களத்தன்மை பற்றிய உணர்வில்லாமலுமிருப்பதனால் தான் அவர்கள் திட்டமிட்டுச் செயற்பாடாமல் இருக்கிறார்கள். இதனால் தான் சிறுபான்மை தீவிரவாதம் வளர்கிறது. சிங்களத்தன்மையைக் கொலை செய்கிறவர்கள் தான் இந்த சிறுபான்மைத் தீவிரவாதத்தின் வளர்ச்சிக்கு வழி சமைப்பவர்கள் என்பதை மறக்கலாகாது. அடுத்த தசாப்தங்களில் சிங்களவர்கள் தமது சிங்களத் தன்மையிலிருந்து எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இலங்கையின் தலைவிதி தீர்மானிக்கப்படும். மகாத்மா காந்தி இலங்கையனின் மரணம் எம்மால் தாங்க முடியுமான கவலை. மாறாக இலங்கையின் மரணம் எம்மால் தாங்க முடியாத கவலை. என்று குறிப்பிட்டார். (பக்: 312)
இவரது நெகனஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள பூர்வீகம்)2002 எனும் நூலிலும் இது போன்ற கருத்துக்கள் உள்ளன.
இலங்கை முஸ்லிம்களது எதிர்காலம் பயங்கரமாக அமையும் சாத்தியக்கூறுகள் உள்ளன. என்ற நூலில் எந்த அடிப்படைகளுமற்ற, திரிபுபடுத்தப்பட்ட, வரலாற்று ஆதாரங்களற்ற, மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் மாத்திரமே இருக்கின்றன. எனவே, இந்த நூல் சிங்கள சமூகத்திலுள்ள படித்தர்வர்கள், பல்கலைக்கழக மட்டதத்திலுள்ளவர்களாலும் படிக்கப்பட்டு வருவதால் முஸ்லிம்களைப் பற்றிய நல்லபிப்பிராயம் அவர்களது மனங்களிலிருந்து முற்றாக எடுபட்டு விட்டது. அத்துடன் அது வரலாற்று ஆவணமாகவும் மாறி எதிர்கால சிங்கள மக்களது உள்ளத்தில் நச்சு விதைகள் விதைக்கப்படுவதற்கும் காரணமாக அமையும்.
எனவே, இதுபோன்ற நூல்களுக்கு மறுப்பு எழுதப்பட வேண்டும். மற்றும் ஜாதிக ஹெல உருமய அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் விழிப்பார்களா? இந்தத் தகவல்களை முஸ்லிம்களுக்கு மத்தியில் பரப்பும்படி அல்லாஹ்வுக்காக எதிர்பார்க்கிறோம்.. அல்லாஹ் எதிரிகளது சூழ்ச்சிகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பானாக.
தரமானதொரு பதிவு, அனைவராலும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள். எமது அலட்சியங்கேள எதிர்காலத்தில் எமக்கான பாரிய சவால்களாக முன் நிற்கும் எம்பதில் எந்த ஐயமும் இல்லை.
ReplyDeleteகண்டிப்பாக இவைகளுக்கு தகுந்த முறையில் பதில் அழிப்பது எம் அனைவர் மீதும் கடமையாகும்.
Islamiya iyakkankal thamadu dawwa(alaipu)paniyay ivatritku tahundha badhil nadavadikkaihal moolamum seyyalam.
ReplyDeleteவெறுப்பெனும் நோய் சிங்களவர்கள் மத்தியில் வெகுவாக பரவ இந்நூல் காரணமாக அமைந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரும் தேவை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கடந்தகால வரலாற்று தவறுகளை மைய்யப்படுத்தி நல்லினக்கத்திட்கு புறம்பாக அமையாமல் சரியான விளக்கமூலம் இந்நூலுக்கு கிடைக்கவேண்டும் என்பது என் சார்பு மக்களின் எதிர்பார்ப்பு. கால்புனர்சிகள் களையப்பட வேண்டும் நம்மவர்களின் சரியான நடவடிக்கைகள் மூலம். வன்முறை, அடக்குமுறை குற்றச்செயல்களின் அத்திவாரம் என பெயர் பெற்றிருக்கும் முஸ்லிம்கள் இதிலிருந்து தூர விலக திட சங்கற்பம் பூலவேண்டும்.
ReplyDeleteஎத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் முஸ்லிம்களின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த எண்ணம், கட்டளைகள் மதிக்கப்பட்ட விதம், குறிக்கோள், எழுச்சி அனைத்துக்கும் மூல ஆதாரமும் வழிகாட்டல்களும் நமது அடிப்படை கல்வியிலேயே முழுமையாக அடங்கப்பெற்றிருக்கிறது என்பது நம் உம்மத்திட்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி. இதை நாம் எப்போது சரிவர உணர்ந்து செயட்படப்போகிறோம்? ஏன் நம்மவர்கள் இத்துனை பிரிவுகளாக பிரிந்து ஆளாளுக்கு ஒருதிசையில் நின்று நம்மளை நாமே தாழ்த்திக்கொள்கிறோம் அத்தோடு நின்றுவிடாமல் சண்டை சச்சரவுகள் வேற. நமக்குள் நாமே அடித்துகொல்வதை பார்க்கும் முஸ்லிமல்லாதவர்கள் நம்மை எப்படி எண்ணிக்கொள்வார்கள் என்பதை இந்நூல் தெளிவாக சொல்ல எத்தநித்திருக்கிறது . நாம் இஸ்லாத்தை விட்டு விட்டோம் ஒருசில சம்பிரதாயங்கள் சில சடங்குகள் புதிய குழுக்களின் தோற்றமும் எழுச்சியும் என நாம் அதற்குள் நம்மை மழுங்கடித்து விட்டோம் முழுமையாக நாம் மாரிவிட்டிருக்கிறோம். கழிவை மிதித்து விட்டேன் கழுவ தண்ணீரில்லை துடைத்து போகவா போகிறது?
izatku shariyana padhiladi kodukkap padavidin miha mosamana vilaivukalai edhirkolla neridum.
ReplyDeletewe are trying much better to against the producer who made a utter wasted film against prophet muhammad sallallahu alaihi wasallam....alhamdulillah still we are in Imanic value..
ReplyDeleteBut same as this minister champika is doing against Islam and Muslims...but we and our muslim named politicians are hand shaking with this cruel mannered minister without shyness!!!!! isn't it???
a lots of people try to show their fingers against jamiyyathul ulama and other islamic movements/organizations only..but as a politician who has political authority..??? these politicians should aware against like these ministers' sentences???????
Dear brothers and sisters, please pass the message about this novel edition (not to make it popular, but to keep our eyes open and to save us and our children from this racists). We should act on this without provoking irritation and not to collapse or damage the existing peace in the country. We must taught them a lesson through literary and our history. As stated in this article, please write your disclaimer articles and other historical records to tear their masks and veils.But we should not add fuel to fire.
ReplyDeleteசம்பிக்க எழுதியிருப்பது விஷக் கருத்துகள்தான்.இலங்கை என்ன உலகமே இஸ்லாமிய உலகமாகாமல் உலகம்
ReplyDeleteஅழியாது.இது அல்லாஹ்வின் எழுத்தில் உள்ளது.2090 இலங்கை முஸ்லிம் நாடாகும் என்று எழுதியிருக்கிறார்
.துவேசங்கள் அதிகரித்துக் கொண்டு போவதைப் பார்த்தால் மாற்று மதத்தவர்கள் குரானையும்,ஹதீசையும் படித்து அதில் என்ன இருக்கிறதென ஆராய நினைத்தால் இஸ்லாத்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
அனேகமாக சம்பிக்கவின் பேரனின் காலத்தில் இஸ்லாமிய நாடாக மாறினாலும் ஆச்சரியப்படுவதுகில்லை.
சிங்கள மொழி குரானும்(புத்தகம்),ஒலி வடிவில் மொழி பெயர்ப்புடனும் இருக்கிறது.அவைகளை வாங்கி சதக்கா
செய்யுங்கள்
Almost all his facts are wrong...it is important to give a well referenced reply for his lies...
ReplyDeleteமுஸ்லிம்கள் மத்தியில் உள்ள சில சொற்கள், அறிவாளிகள் பெயர், அரசியல்வாதிகள் பெயர், இன்னோரன்ன சொற்களை வைத்து தனது கருத்தைப் பரப்பி தான் அறிவாளி, சிங்கள மக்களைக் காக்க வந்தவர் என்று காட்டிக் கொள்வதில் இவருக்கு அவ்வளவு சந்தோசம். "வீரவிதான" இயக்கத்தை ஆரம்பித்த காலத்திலிருந்தே கண்டி, மாவனல்ல... போன்ற மலையகப் பிரதேசத்தில் இது போன்ற நச்சுக் கருத்துக்களை துண்டுப் பிரசுரம் மூலம் வெளியிட்டதை அங்கு வாழ் மக்கள் மறந்து இருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteஆனால் சில இடங்களில் "கிறிஸ்தவர்கள்" செய்யும் வேலையே நாம் செய்வதை சுட்டிக் காட்டும் இந்த அறிவிலி மக்களை இஸ்லாத்துக்கு எடுக்க சில idea க்களை வலிந்து வந்து சொல்லித் தருகிறார். "அழைப்புப் பணியில் " உள்ள அன்பர்கள் இவரது இவ்வாலோசனைகளைக் கருத்தில் கொள்ளலாம்.
ඇමති පාඨලි මැතිතුමනි, ඉතා දීර්ඝ ගවේෂණයකින් පසුව ශ්රී ලංකාවේ සිදුවීමට යනවා යයි ඔබ අනුමාන කරන එක්තරා නිගමනයක් ඉදිරිපත්කිරීම පිළිබදව අප හදපතුලෙන්ම අපගේ අවංක ප්රණාමය ඔබට පිරිනමමු. එනම් ඔබ කියන අනාවැකිය ප්රකාරව 2090 දී රටේ මහ ජාතීන් බවට පත්වන්නේ මුස්ලිම් ජනතාව බව ඔබම සද්භාවයෙන් පිළිගැනීම පිළිබඳව සැබැවින්ම අපි සතුටුවෙමු. කෙසේවෙතත් ඔබ එය කියන්නේ සද්භාවයෙන්ද නැතහොත් කුහකකමින්දැයි අපි නොදනිමු. එසේවූවත් එම විප්ලවකාරී වෙනස 2090 නොව 2019 දී සිදුවෙනවා නම් ඔබවැනි අඳුරේ අතපතගාන අයටත් යම් ආලෝකයක් ඔබ ජීවිතයේ යම් දීප්තියක් ගෙනදීමේ අවකාසයක් මින් ලැබෙනු ඇතැයි අපි තරයේ විශ්වාස කරමු. එහෙත් මෙසේ ඔබ ප්රකාශයට පත්කිරීමෙන් ඔබට මෙතෙක් නොපෙනුනු ඔබට ලබාගන්න අපොහොසත්වූ යහමග නොහොත් සත්ය මග ඔබගේ දූදරුවන් හෝ මුණුබුරන් තෝරාගන්නාවිට ඔබ සම්බන්ධයෙන් ඔවුන් ලැජ්ජාවට පත්වීම නොඅනුමානයි. දැනට හ්රී ලංකාවේ ජන සංඛ්යා ලේඛණය අනුව පිරිමින්ට වඩා කාන්තාවන් බහුලව සිටින බව ඔබම කියා සිටියි. එයට යෝජනාවක්ද ඔබම කියා ඇත. ඔබගේ යෝජනාවට වඩා ඉදිරියෙන් සිටින අවුරුදු 1400කට වඩා පැරණි විසදුම තිබෙන්නේත් ඉස්ලාමයේ බව ඔබ නොකියාම පිළිගෙන ඇත. එය එසේ තිබියදී අපි ඔබගෙන් පැහැදිලි කරගත යුතු කරුණක් තිබෙනවා. එනම් ඔබ ඔබටම කියාගන්නා මූලධර්මවාදීන් පිළිබදව දොඩවන මනඃකල්පිත දර්ශනයයි. අපගේ ජාතික තලයේ සමහර දේශපාලන නායකයන් පවා එම මූලධර්මවාදීන් බව ඔබ කියයි. එසමගම අප දහම් පාසල්වල සහ අරාබි විද්යාලවල මූලධර්මවාදය උගන්වනු ලබන බව ඔබ මැසිවිලි නගයි. බෞද්ධ පාසැලක බුදු දහම උගන්වනවිට බෞද්ධ මූලාශ්රයෙන් උගන්වනවද නැතිනම් කාල්මාක්ස්ගේ චින්තනය උගන්වනවද ? ඔබටම අපැහැදිලි මූලධර්මවාදයක් ගැන ඔබ නිතරම දොඩවන්නේ ඇයි? ප්රථමයෙන්ම මූලධර්මවාදය කියන්නේ කුමක්ද? සිංහල හෝ මුස්ලිම්වීම මූලධර්මවාදයද ? නැතිනම් මුස්ලිම්වීම පමණක් මූලධර්මවාදයද ? බෞද්ධාගමිකයින් බෞද්ධාගමට ලැදි බව කියනවා නම් එය ඔබ හදුන්වන්නේ මොන වාදය කියලද ? මුස්ලිම් අය ඉස්ලාමයට ලැදි නම් එය හදුන්වන්නේ කුමන වාදය කියලද? ආගම් දෙකම පිළිපදින අයවළුන් එක හා සමාන මුලධර්මවාදීන් යැයි කියෙනවාද ? නැතිනම් මුස්ලිම්වරු පමණක් මූලධර්මවාදීන් කියා හංවඩු ගහන්නද ඔබ අදහස කරන්නේ? එහෙම නම් මේසා හඩ නගන ඔබ අයත්වන්නේ කුමන වාදී රැල්ලටද ? ඔබත් අනිවාර්යෙන්ම බෞද්ධ මූලධර්මවාදියෙකු විය යුතුයි. එසේවීමෙන් කිසිදු වරදක් නැත. මොකද තම ආගම වෙනුවෙන් කථාකරන තම ඇදහීම් පිළිබද ආඩම්බරවෙන සියළු දෙනාම මූලධර්මවාදීන් නොව වෙන කවුරුන්ද ?
ReplyDeletecontinued........
ReplyDeleteඔබ ඔබගේ ජාතිය පිළිබදව කථා කිරීම හෝ බෞද්ධාගමේ ආරක්ෂාව පිළිබදව උනන්දුවීම කිසිසේත් මූලධර්මවාදයක් නොවන අපි තරයේ විශ්වාස කරමු. එසේ නම් අප නායකයන් හෝ සංවිධානයන් අප දහම පිළිබදව හෝ මුස්ලිම් ජනතාව ගැන කථා කිරීම පමණක් මූලධර්මයවාදයවන්නේ කෙසේද ? අනෙක් අතට මූලධර්මයක් නැතිනම් වාදයක් ජනිතවන්නේ කෙසේද ? තම දහම පිළිබද දැඩි විශ්වාසයක් නැති පුද්ගලයෙකුට හොද පුරවැසියෙකුවන්නට බැරිය කියන ස්ථාවරයේ අපි සිටිමු. අප රටේ මුස්ලිම් නායකයින් පොදුවේ විශාල වශයෙන් මෙරටටත් සුළුවෙන් හෝ මුස්ලිම් ජනතාවටත් සේවයක් කර ඇතිනම් එය අඩු තක්සේරුවකට නැතිනම් එය පාච්චල් කිරීම සාධාරණද ? ඔබ පෙන්වාදී ඇති සමහර මුස්ලිම් දේශපාලන නායකයින් මේ රටට කළ සේවයත් මූලධර්මවාදයද? අපගේ නිගමනය අනුව මුස්ලිම්වරුන් කෙරෙහි ඔබට තිබෙන්නේ ඊර්ෂ්යාව හෝ කුහකකම පමණයි. ඉස්ලාමය ලංකාවේ පැතිර යෑමට මූලික හේතුව මුදල් බලය හෝ වෙනත් සම්පත් කාම ආශාවන් නොව ඉස්ලාමයේ තිබෙන යථාර්තවාදී ප්රයෝගික සහ සත්යවාදී දෙසුම නිසා බව ඔබ නොදන්නවා වියනොහැක. එය පුහු ප්රතිමා වන්දනය ප්රතික්ෂේප කරන බොරු ඇදහිලීන් හෙලා දකී.
අනෙක ලංකාවේ නීතිවිරොධී ච්යාපාරයන් මුස්ලිම්වරුන් සිදුකරන බව ඔබ චෝදනා කරයි. රජයක වැදගත් තනතුරක් දරන ඔබ මෙවැනි බොළද ප්රකාශයන් කිරීම වටිනවාදැයි අපට සිතෙයි. නීතිය අකුරටම පිළිපදින රටක් නම් මේ අපරාධ සියල්ල මැඩපැවැත්වීමට ඔබලාට බැරි ඇයි. අල්ලසට පගාවට රාජකාරි කරන්නේ සිංහල නිලධාරීන් නම් මෙවැනි අපරාධ මැඩපවත්වන්න ඔබලාට පුළුවන් බව අපි නොසිතමු. නීතිවිරෝධී ජාවාරම්කරුවන් මොකෙක්වූවත් උපරිම දඩුවම් දිය යුතුයි. එසේ නොකර ඔවුන් ආරක්ෂා කරන්නේ බෞද්ධ පසුබිමක් ඇති රජයේම සිංහල නිලධාරීන්ම නම් දැන් ආඩපාලි කීමෙන් පලක් තිබෙනවද ?
තවත් අතකින් ඔබ දහම කියා අන්ධ විශ්වාසයක් ඇතිකරගෙන තිබෙන්නේ දහම නම් එහි පුරාවස්තු නිධන්වස්තු සංස්කෘතියක් තිබිය යුතු බව යන්නය. අපගේ දහම ඔය මැරිච්ච මිනිසුන්ගේ ඇටකටුවලට නැතිනම් හිස් කබල්වලට හිමිකම් කියන්න හෝ ඕවා සම්බන්ධයෙන් කාලය ධනය නාස්තිකරමින් ගවේෂණ පවත්වන්න හෝ පැමිණ තිබෙන දහමක් නොව මහපොලොවේ අඩිය තබා ජීවත්වන මිනිසුන්හට යහමග පෙන්වීමට සහ යම්කිසි දිනක විනාශවෙන තාවකාලික මෙලොව අපගේ ඉලක්කයක් නොකරගෙන සදාකාලිකවූත් සුන්දරවූත් ජීවිතයක් අපට ප්රදානය කිරීමට පොරොන්දුවී සිටින එකම සර්වබලධාරී අල්ලාහ් දෙවිදුන් විසින් පෙන්වාදී ඇති යහ මග යමින් ජීවත්වීම තමා අපගේ එකම ඉලක්කයවනුයේ. මෙයට මූලධර්මවාදය හෝ කුමන නමක් තබාගත්තත් අපට ප්රශ්නයක් නැත.
I think Champika ranawaka is MUslim,cos he is believing Quran and Sunnah, y i am teling this, according the holy Quran, as a muslim we r believes that the whole world comes under one muslim leader at the end,so the same thing is clearly mentioned in Ramawaka's book.Therefore the final result is Champika Ranawaka Is A True Muslim.
ReplyDeleteMohamed Ikram,
அல்லஹு அக்பர் எங்கு இஸ்லாம் எதிர்க்கப்படுகிரதோ அங்கு மிக வேகமாக வழர்ச்சி அடையும் இதை அவரே ஆரம்பித்து வைத்துள்ளார் குரிப்பு:முஸ்லிம் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இல்லாதிருந்தால் புலிகளைக்கூட வெற்றி பெற்று இருக்க முடியாது.
ReplyDeleteMay Allah guide and protect whole muslim ummah!
ReplyDeleteஉங்களை வச்சு தமிழனுக்கு செய்ய வேண்டிய எல்லாம் செய்தாயிற்று
ReplyDeleteஇனி நீங்க தேவையில்லை அவனுக்கு
ஆரம்பிக்கபோகுது ஆப்பு உங்களுக்கு
புலிக்கு பயந்து சிங்கத்திடம் தலையை குடுதீர்கள்
ரெண்டுமே ஒரே இனத்தை சேர்ந்தது எண்டு மறந்துவிட்டீர்கள் ...
குறி வச்சிட்டான் இனி கொண்டாட்டம்தான்
அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் கொடுப்பானஹா... !
ReplyDeletethe great comments i read cheris thank you by this book whole majority will comes to understand the islam better than before and in qur aan said that whole world will comes in a one relligion that islam not only sri lanka but also the whole world and
ReplyDeletethanks you for Mr. chambika ranavake that we was strangle to teach & brief the islam to non muslim but by your book that i believe every one will try to undesrtand and will try to learn qur aan soon.
May allah include you also in that muslim group which you explain us by your book.
Thanks allah the buddish people going to understand what is islam we will see most will joins hand with islam
Mr. chambika ranaweka books will give opportunity to increase the muslim umma very fast in sri lanka and hope they all will joins with us in paradise.
Asslamu alaikum warahmathullahi wabarakaathuhu.
A must watch vedio:-
ReplyDeleteDambar Amila thero:- About a Good Buddist.
http://www.youtube.com/watch?v=V7xhNvDcayo