கிழக்கு தேர்தலில் மு.கா. க்கு 2 ஆசனங்களே கிடைக்கும் - அதாவுல்லா கணிப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெற்று எக்கட்சியின் உதவியுமின்றி தனியாக ஆட்சி அமைக்கும் என அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நிம்மதி வாழ்வுக்கு வழியமைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிழக்கு மக்கள் மீண்டும் நன்றி தெரிவிக்க தேர்தலை எதிர்பார்த்துள்ளனர்.
2008 கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது 65 ஆயிரமாக இருந்த, தேசிய காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி இன்று கணிசமானளவு அதிகரித்துள்ளது. அட்டாளைச்சேனை, நிந்தவூர், மருதமுனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் போன்ற ஊர்களில் அன்றிருந்த நிலை இன்றில்லை. இன்று தேசிய காங்கிரஸ் கட்சியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு திகாமடுல்ல மாவட்டத்தில் இரு ஆசனங்கள் கிடைக்கும். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் எதுவித ஆசனங்களும் கிடைக்காது. அந்தளவுக்கு அக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கில் ஒன்றையும், வடக்கில் ஒன்றையும், வடக்கு, கிழக்குக்கு வெளியில் ஒன்றையும் கூறிவருகின்றார். அவரிடம் நிலையான கொள்கையில்லை. இது கட்சித் தலைவருக்குரிய பண்பல்ல.
கிழக்கு முஸ்லிம்களுக்காக தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பகற் கனவு காண்கின்றார். வடக்குடன் கிழக்கை இணைக்கும் ஈனச் செயலுக்கு துணை போகின்றார். இதற்கு நாமும், கிழக்கு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.
தலைவர் ஹக்கீமின் கடந்தகால பத்திரிகைச் செய்திகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு உண்மை நிலை தெரியும். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்குவதாகக் கூறி, பின்னர் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார். தற்போது இனவாதத்தைத் தூண்டி ஆதரவு தேடுகின்றார்.
நாம் அன்று பேசியதற்கும் இன்று பேசுவதற்கும் எந்தவித வேறுபாடுகளும் கிடையாது. மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தத் தேவைப்பாடும் எமக்குக் கிடையாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Sometimes Maths teachers fail in exams. But if they copy in exams they can easily pass. Perhaps he is going to copy in the exam this time again.
ReplyDeleteஅமைச்சர் அதாஉல்லா அவர்களே!
ReplyDeleteகிழக்கு மாகாண சபைத் தேர்தல் 2012 - அம்பாறை மாவட்டத்தின் கட்சிகளின் ஆசனப் பகிர்வு தொடர்பான என்னுடைய ஆருடத்தை இங்கே பதிவு செய்கின்றேன்.
மு.கா. 7 ஆசனங்கள்
ஐ.ம.சு.கூ. 4 ஆசனங்கள்
த.தே.கூ. 2 ஆசனங்கள்
ஐ.தே.க. 1 ஆசனம்
முன்னொரு சந்தர்ப்பத்தில் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பிரதேச சபை ஒன்றிலாவது தோல்வி கண்டால் தனது பா.உ. பதவியை இராஜினாமா செய்வதாகச் சூளுரைத்து அதனைச் செய்தும் காட்டினார் அல்லவா!
அதுபோல மு.கா. வுக்கு 2 ஆசனங்கள் மட்டுமே திகாமடுல்லவில் கிடைக்கும், ஜ.ம.சு.கூ. அமோக வெற்றியீட்டும் எனும் உங்களது ஆருடம் நடக்காது போனால் உங்களது பா.உ. பதவியை இராஜினாமாச் செய்ய முடியுமா? உங்களது நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள்.
தேர்தலுக்குப் பின்னர் சந்திப்போம்.
Onge kanna mulichukonge Mr Athaullah vidinjirichu..
ReplyDeleteஇது அதாஉல்லாவின் கணிப்பு அல்ல.
ReplyDeleteஆளும் தரப்பின் பணிப்பு.
இருந்து பாருங்கள்.
your not good educated you just teacher you dont have any good brain ,
ReplyDeleteDear Hawwa Adam, You will also fail in the exam. Your party (SLMC) will not have 7 seats in the Ampara District. To get 7 seats SLMC should poll atleast 130,000 votes. This is impossible. My prediction is UPFA 7,SLMC 4 UNP 2 TNA 1. In all thrree disticts SLMC will get not more than 8 seats.
ReplyDeleteகிழக்குமகானசபைத் தேர்தலிலே
ReplyDeleteஅம்பாறையிலே ஆறு ஆசனங்களையும் ,திருகோணமலையிலே மூன்று ஆசனங்களையும் ,
மட்டக்கிளப்பிலே மூன்று ஆசனங்களையும் பெரும் .