ஆப்கானிஸ்தானில் 11 ஆண்டுகளில் 2000 அமெரிக்க இராணுவத்தினர் பலி
ஆப்கானிஸ்தானில், 11 ஆண்டுகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, 2,000 ஆயிரம் அமெரிக்க வீரர்கள், கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். வரும் 2014ம் ஆண்டுக்குள், அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானிலிருந்து, "வாபஸ்' பெற ஒப்புக்கொண்டுள்ளன.
ஆட்சியை இழந்த தலிபான்கள், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரை, அடிக்கடி தற்கொலை படையினர் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த வகையில், ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர். ராணுவ உடைகளிலும், போலீஸ் உடைகளிலும் வந்து தாக்குதல் நடத்துவதால் பல குழப்பங்கள் நிலவுகின்றன. சையத் அபாத் மாவட்டத்தில், ஆப்கன் வீரர்கள், அமெரிக்க வீரர்களை நோக்கி நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அமெரிக்க வீரர்கள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானில், 2,000 அமெரிக்க வீரர்கள் பலியானதாக, அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
உலக போலீஸ்காரனின் அடாத செயல் அவர்களின் 2000 உயிர் காவு கொள்ளப்பட காரணமாய் இருப்பினும் எத்தனை பல்லாயிரம் ஆப்கானிய அப்பாவி உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது? இனியாவது உலக போலீஸ்காரன் பாடம் கற்றுகொள்வானா ......?
ReplyDelete