குழந்தைகளின் டொப் 10 சுட்டித்தனம்..! (ஆய்வின் முடிவுகள் இணைப்பு)
பிள்ளைகளின் சுட்டித் தனம் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த ‘ட்ரைநைட்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. குழந்தை வளர்க்கும் 2 ஆயிரம் தாய்மார்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. சர்வே ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளதாவது,
திருமண வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு தொடர்பாக இளம்பெண்கள், இளைஞர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு, கனவுகள் உள்ளது. அதே நேரம், குழந்தை வளர்ப்பு என்பது சவாலான காரியம் என்பதையும் அவர்கள் ஓரளவு புரிந்திருக்கின்றனர். ஆனால், எதிர்பார்த்ததைவிட அந்த சவால் அதிகமாக இருப்பதாக முக்கால்வாசி பெண்கள் கூறுகிறார்கள். நாம் எதிர்பார்க்காத விதங்களில் எல்லாம் குழந்தைகள் சேட்டை செய்கிறார்கள்.
‘குழந்தைகள் இப்படி எல்லாமா சேட்டை செய்வார்கள்’ என்று அதிர்ச்சி அடைகிறார்கள். பிறந்த குழந்தைகள், தவழும் குழந்தைகள், பள்ளி செல்பவர்கள் அவரவர் வயதுக்கு ஏற்ப விதவிதமாக சேட்டை செய்கின்றனர். வயது ஏற ஏற அவர்களை சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பது சுமார் 85% பெண்களின் கருத்து.
பிள்ளையை வளர்க்க அவரை (கணவன்) விட நான்தான் அதிகம் சிரமப்படுகிறேன் என்று பாதி பெண்கள் கூறுகின்றனர் என்கிறது ரிப்போர்ட்.
பெற்றோருக்கு சவாலாக விளங்கும் டாப் 10 சேட்டைகளை சர்வே ரிப்போர்ட் பட்டியல் போட்டிருக்கிறது.
இதில் முதல் இடத்தை பெறுவது பெற்றோரின் தூக்கம் பாதிப்பு. இது பெரும்பாலும் கைக்குழந்தைகளால் ஏற்படுகிறது. தூங்குவதற்குகூட பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. பிள்ளைகளுக்கு திடீரென வரும் கோபத்தை சமாளிப்பது, எவ்வளவு கடுப்பேற்றினாலும் பொறுமையாக இருப்பது, அவர்களது சேட்டைகளை சமாளித்தபடியே வீட்டு வேலைகளை செய்வது, குழந்தைகளுக்கு சரியான ஆகாரம் கொடுப்பது, சின்னச் சின்ன வேலைகளை கற்றுக்கொடுப்பது, அடித்துக் கொள்ளும் சகோதர, சகோதரிகளை விலக்கி விடுவது, தேவையான பொய்களை சொல்லி குழந்தைகளை சாந்தப்படுத்துவது, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கேட்டதை வாங்கித் தருவது, ஒழுங்காக பல் தேய்க்க வைப்பது ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெறும் மற்ற அம்சங்கள்.
Post a Comment