ஈராக்கில் போராளிகள் துணிகரம் - சிறையிலிருந்த 100 பேர் தப்பினர்
ஈராக்கில் போராளிகள் சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100 க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக போராளிகளுக்கும், போலீஸருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸரும், 7 கைதிகளும், 2 போராளிகளும்,கொல்லப்பட்டனர்.
தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்கவும் போராட வேண்டும் என்று அல்கய்தா இராக் முன்னணி குழு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி, சலாகிதின் மாகாண துணை ஆளுநர் அகமது அப்துல் ஜப்பார் அப்துல் கரீம் தொலைபேசி வாயிலாக கூறியது, திகிரிட் சிறையில் உள்ள அனைத்து வழிகளையும், தகவல் கோபுரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் போராளிகள கொண்டு வந்துவிட்டனர். பாதுகாப்பு படையினர் சிறையை சுற்றி வளைத்துள்ளனர் என்றார்.
உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ""பாக்தாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திகிரிட் சிறையை நோக்கி வியாழக்கிழமை இரவு போராளிகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 15 போலீஸôரும், 7 கைதிகளும், இரண்டு கொல்லப்பட்டனர்'' என்றனர்.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""காரில் வந்த தற்கொலைப் படைவாதி முதலில் சிறையின் நுழைவு வாயிலை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். பின்னர் துப்பாக்கி ஏந்தியகள், அங்கிருந்த பாதுகாவலர்களை கொன்றுவிட்டு உள்ளே புகுந்துள்ளனர். இப்போது எங்களது கட்டுப்பாட்டுக்குள் சிறை கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, பாதுகாவலர்களிடம் இருந்த ஆயுதங்களை கைப்பற்றிய 100-க்கும் அதிகமான கைதிகள், சிறையில் இருந்து ஓடிவிட்டனர். அவர்கள் சிறையை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினருடன் சண்டையிட்டனர் என்று சம்பவத்தை அருகில் இருந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
Post a Comment