Header Ads



10 இலட்சம் பணமும், வாகனமும் தருவதாக அதாவுல்லா கூறினார் - எம்.எச். லதீப்

அப்துல் ஹபீஸ்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட மத்தியமுகாம் அமைப்பாளர் எம்.எச். லதீப் தொடர்ந்தும் தாம் அக்கட்சியிலேயே இருப்பதாகவும், சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு தேசிய காங்கிரஸில் இணையவில்லை என்றும் மறுத்துள்ளார்.
 
அவர், தம்மை அமைச்சர் அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளர் அன்வர் என்பவரும், இன்னும் சிலரும் தமது விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக அவரிடம் கூட்டிச் செனறனர் என்றும் ரூபா 10 இலட்சம் பணமும் வாகனமும் தருவதாக சொன்னதாகவும் அங்கிருந்து மீண்டு வந்து தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்துக் கூறினார்.
 
மேலும் எதிர் வரும் ஐந்தாம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள தேசியக் காங்கிரஸின் பொதுக் கூட்டத்தில் மேடையில் வந்து அமருமாறு அவர்கள் வற்புறுத்தியதாகவும் நாவிதன் வெளி பிரதேச தேசிய காங்கிரஸ் அமைப்பாராக நியமிப்பதாகவும் கூறியதாகவும் லதீப் தெரிவித்தார்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்திய லதீப் சனிக்கிழமை இரவு நிந்தவூரில் நடைபெற்ற அமைச்சர் ஹக்கீம் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் மேடையில் அமர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 


 
 
  

1 comment:

  1. An episode of an election drama. The bargain finally did not succeed. Perhaps the awards did not meet his expectations because Rs 1000000 (1 million) is nothing now considering the cost of living. I think it must be the case.

    ReplyDelete

Powered by Blogger.