இஸ்லாத்திற்கு எதிரான அவமதிப்புக்கு சர்வதேச சட்டம் வேண்டும் - 0.I.C
TU
இஸ்லாத்திற்கு எதிரான தாக்குதல்களை குற்றகரமாக கருதும் சர்வதேச சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சி கூறியுள்ளது. ஐ.நா பொது அவையின் கூட்டத்தை முன்னிட்டு நியூயார்க்கில் நடந்த ஒ.ஐ.சியின் வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் சர்வதேச நாடுகளுக்கு இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத அவமதிப்பை குற்றகரமாக கருதும் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஒ.ஐ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க தயாரிப்பான திரைப்படம் மற்றும் பிரெஞ்சு மாத இதழில் கார்ட்டூன் வெளீயானதைத் தொடர்ந்து ஒ.ஐ.சி நாடுகளின் கூட்டம் நடந்துள்ளது. கருத்து சுதந்திரத்தின் பெயரால் நடக்கும் இத்தகைய முயற்சிகள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகும். மத துவேசத்திற்கும், மோதல்களுக்கும் காரணமான நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு தேவை என்று ஒ.ஐ.சி கூறியது.
Post a Comment