Header Ads



ஹக்கீம் Vs பஷீர் யாருடைய தேர்தல் வியூகம் சரியானது..?


 

எஸ்.றிபான்
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், அதன் தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கும் இடையே பலத்த கருத்து மோதல்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த (20.08.2012) திங்கட் கிழமை ஏறாவூரில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பெருந் தொகையான மக்களின் முன் உரையாற்றும் போது பஷீர் தெரிவித்த கருத்துக்கள் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
 
பஷீர் சேகுதாவூத்தின் கருத்துக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இன்னுமொரு பிளவு ஏற்பட்டு விடுமோ என்று அக்கட்சியின் ஆதரவாளர்கள் அச்சம் கொள்ளும் வகையிலேயே அமைந்திருந்தன.
 
கட்சி என்னுடைய  வியூகங்களை ஏற்றுக் கொண்டு செயற்பட்ட போது வெற்றிப் பாதையில் சென்றன. என்னுடைய வியூகங்களை ஏற்றுக் கொள்ளாத போது தோல்விப் பாதையில் சென்றனவென்று பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சரத் பொன்சேகாவை ஆதரிக்க தீர்மானித்த போது, யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் பெரும் பான்மை இனத்தவர்கள் யுத்தத்தை களத்தில் நின்று தலைமை கொடுத்தவரை விடவும், அந்த யுத்தத்திற்கு அரசியல் ரீதியான தலைமைத்துவத்தினைக் கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவைத்தான் ஆதரிப்பர். அதனால், மஹிந்தவிற்குத்தான் வெற்றி வாப்புள்ளதென்று கூறினேன்.
 
ஆனால், ஹக்கீம் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு முடிவு செய்தார். சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய முயற்சிகளை எடுத்த போதிலும் அவர் தோல்வியை தழுவிக் கொண்டார்.
 
ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதென்ற சட்ட மூலத்தை இரத்துச் செவதற்கு கொண்டு வரப்பட்ட 18 ஆவது யாப்பு சீர்திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இதற்காக அரசாங்கத்தினர் மு.காவிலிருந்து ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை பிரித்து எடுப்பதற்கு பேச்சுக்கள் இடம் பெற்றன. அப்பேச்சுக்களில் நான் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்..
 
கட்சியோடு இணைந்து கொள்வதனை தாம் விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தார்கள். இதன் பின்னர் ஜனாதிபதி பஷீர் சேகுதாவூத்தை அழைத்துப் பேசிய போது, கட்சியையும் தலைமையையும் அரசாங்கத்தோடு இணைத்து ஐந்து வாக்குகளுக்கு பதிலாக எட்டு வாக்குகளைப் பெற்றுத் தருகின்றேன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.
 
பின்னர், தலைமைக்கும் ஜனாதிபதிக்கும் இடயைே பேச்சுக்கள் இடம்பெற்று அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. ஜனாதிபதிக்கும், ஹக்கீமுக்குமிடையே மிகுந்த நம்பிக்கை கட்டி எழுப்பட்டுள்ளன. இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி மு. கா. தனித்துப் போட்டியிட்ட போதும், காவியுடைப் பயங்கரவாதம் பற்றி சோன்ன போதும் அவைகளைப் பற்றி எதுவும் கருத்துக்களை முன் வைக்கவில்லை.
 
இப்படியாக ஜனாதிபதிக்கும் ஹக்கீமுக்கும் இடையே இந்த நம்பிக்கையை ஏற்படுத்திய பிதாமகன் பஷீர் சேகுதாவூத்தான். என்றும் சுட்டிக் காட்டினார்.
 
கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது, சாந்தமருது பிரதேசத்தில் மக்களுக்கு வாக்களிப்பில் ஆர்வம் இருக்கவில்லை. எப்படி வாக்களித்தாலும் நிஸாம் காரியப்பர்தான் மேயராக வருவார் என்று கருத்து மக்களிடம் இருந்தன. இது ஆபத்தானதென்று கருதி தலைவரிடம் எதுவும் கேட்காமலேயே யார் அதிக விருப்பத் தெரிவுகளைப் பெற்றுக் கொள்கின்றார்களோ அவரே மேயராக நியமிக்கப்படுவார். அதனை இந்த சாந்தமருது செதால், சாந்தமருதிற்கு மேயர் பதவி வழங்கப்படும் அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கின்றேன் என்று தெரிவித்ததன் காரணமாக கல்முனை மாநகர சபையில் முன்பை விடவும் ஒரு ஆசனத்தைக் கூடுதலாக 10 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டோம்.
 
கல்முனை மாநகர சபையின் வெற்றிதான் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் முதலமைச்சரைப் பெறுவதற்கான ஆரம்பப் வியூகம் வகுப்ப்பட்டது.
 
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அரசாங்கத்தோடு இணைந்து தேர்தல் கேட்க வேண்டுமென்றும் கட்சிக்குள் கூறப்பட்டன. ஆயினும் நான் தனித்துத்தான் போட்டியிட் வேண்டுமென்று கூறினேன்.
 
முஸ்லிம் முதலமைச்சரை பெற வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்தோடு இணைந்து தேர்தல் கேட்க வேண்டுமென்று கூறினேன். பின்னர், தனித்துக் கேட்க முடிவு செயப்பட்டது. இனி தேர்தலின் பின்னர்தான் முதலைமைச்சருக்கான வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
இதேவேளை, முஸ்லிம் கட்சிகள் இணைந்துத் தேர்தல் கேட்டால், முஸ்லிம் முதலமைச்சரைப் பெற முடியும் என்று முயற்சிகளை எடுத்தேன். அதனை எந்தத் தலைமையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது அமெரிக்கா, இந்தியா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கம், அதாவுல்லா, ரிஷாட், பிள்ளையான் போன்றவர்களுக்கு நல்லது.
 
இவ்வாறு பஷீர் சேுகுதாவூத் அன்று முன் வைத்த கருத்துக்களை பார்க்கின்ற போது, அவரின் வியூகங்களை ஏற்றுக் கொண்ட போது கட்சி வெற்றி பெற்றதென்றால்  தோல்வியடைந்த வியூகங்களுக்கும் பஷீருக்கும்  தொடர்பு இல்லை என்பது தெளிவாக்கப்படுகின்றது. தோல்வி அடையக் கூடிய வியூகங்களை வகுத்தவர் யாரென்ற கேள்வியும் எழுகின்றது.
 
இக்கேள்வியை இன்னொரு கோணத்தில் பார்த்தால், பிழையான வியூகங்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வகுத்திருக்க வேண்டும். அல்லது உயர்பீடம் எடுத்திருக்க வேண்டும். சிறந்த வியூகங்களை  வகுக்கக் கூடியவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் பஷீர் சேகுதாவூத்தைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற முடிவினை நாம் எடுக்க வேண்டியுள்ளது. பிழையான முடிவுகளை எடுக்கக் கூடிய உறுப்பினர்களையுடைய உயர்பீடம் முஸ்லிம் காங்கரஸிற்கு அவசியமா? இதனை முஸ்லிம் காங்கிரஸின் அதிதீவிர ஆதரவாளன் ஒருவரிடம் கேட்டால் அவசியம் இல்லையென்றே கூறுவான். உயர்பீடத்தை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் கூறுவான்.
 
ஏறாவூரில் அன்று நடைபெற்ற கூட்டத்தில் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹிர் மௌலானாவிற்கு வாக்களிக்க வேண்டும். அவரின் வெற்றிக்கு பிராத்திக்கின்றேன். என்று பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இக்கருத்தை ஏறாவூர் பிரதேச மு. கா. ஆதரவாளர்களில் மிகக் கூடுதலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
 
மு.காவில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பிராத்திக்கின்றேன் என்று கூறவில்லை. (பஷீர் சேுகுதாவூத்தின் மூன்று மணித்தியால பேச்சு முடிவடைந்து கூட்டம் கலைந்து சென்று கொண்டிருக்கும் போது, மீண்டும் ஒலி வாங்கிக்கு முன்னால் வந்து மு.காவின் வெற்றிக்கும் பிராத்திக்கின்றேன். என்றார்) வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்கள் அனைவரும் தோல்வி அடைய வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் கூடுதாலான ஆசனத்தை மட்டக்களப்பில் பெற வேண்டுமென்று பிராத்திக்கின்றேன் என்று கூறுவதுதான் பொதுவான அரசியலாகும்.
 
பஷீரின் இக்கருத்தை வைத்துப் பராக்கின்ற போது, அலிசாஹிர் மௌலானாவின் வெற்றியை விரும்புவது போல் மு. காவின் வேட்பாளர் வெற்றியை விரும்பவில்லை என்று கருதவும் இடமுண்டு.
 
தேர்தல் முடிந்ததன் பின்னர் முஸ்லிம் முதலைமச்சர் ஒருவரை பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும். அந்த வியூகத்தில் மௌனாவையும் இணைத்துக் கொள்வேன். மௌலானா வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் தெரிவித்தார்.
 
பஷீர் சேகுதாவூத் அலிசாஹிர் மௌலானாவை பல தடவைகள் உச்சரித்த போதிலும், நசீர் அஹமட்டை உச்சரிக்கவே இல்லை. இதனால், நஷீர் அஹமட்டின் வெற்றியை அவர் விரும்பவில்லை என்றும் கூறலாம். நஷீர் அஹமட்டிக்கு ரவூப் ஹக்கீம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார் என்ற கடுப்பு பஷீர் சேகுதாவூத்திற்கு இருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களில் சிலர் தெரிவிக்கின்றார்கள்.
 
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் அவருக்கும் வாக்களியுங்கள் என்று அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், முஸ்லிம் காங்கிரஸின் மேடையில், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினால், அதனை முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்குமா?
 
வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் வெற்றிலைக்கும், மரத்திற்கு வாக்களிப்பவர்கள் மரத்திற்கும் வாக்களியுங்கள் என்று அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பஷீர் சேகுதாவூத் கூறுவாரா?
 
வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் வெற்றிலைக்கு வாக்களிக்கலாமென்றால், முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸின் கீழ் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மறுபுறத்தில் வெற்றிலைக்கு  வாக்களிக்கலாம் என்று சோல்வது, முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் பலம் என்பது இல்லாமல் போவிடும். அதனை பஷீர் சேகுதாவூத் விரும்கின்றராரா?
 
பஷீர் கருத்துக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாற்றுக் கட்சிகளுக்கு இலாபமாக அமைந்துள்ளதென்றே சோல்லலாம். முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரே வெற்றிலைச் சின்னத்தின் வேட்பாளரின் வெற்றியை விரும்புகின்றார். ஆதலால், முஸ்லிம் அனைவரும் வெற்றிலைக்கு வாக்களிக்க வேண்டுமென்று காட்டமாகச் சோல்வார்கள்.
 
பஷீர் சேகுதாவூத்தின் வியூகங்கள்தான் வெற்றி பெற்றதென்றால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு வியூகங்கள் வகுக்கத் தெரியாதா? மேலும், கட்சியில் தாம் செலுத்திக் கொண்டிருக்கும் தனிநபர் ஆளுமையையும், அதன் வெற்றித் தன்மையையும், அரசாங்கத்தோடு மு.கா. இணைப்பதற்கு ஜனாதிபதிக்கும் மு. காவின் தவிசாளருக்கும் இடையே நடைபெற்ற தொடர்புகளை எடுத்து நோக்கம் போது முஸ்லிம் காங்கிரஸிற்கு உண்மையாக தலைமை வகிப்பவர் யாரென்று கேட்க வேண்டியுள்ளது. ஏனெனில், கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது சாந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் சின்னவாப்பா ஒரு போதும் வாப்பாக இருக்க முடிதென்று ஹக்கீமின் தலைமைத்துவத்தை கேள்விக்கு உட்படுத்தி இருந்தார் என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகின்றாம்.
 
ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் உரையின் பின்னணியில் மு.காவின் தலைவரை தமது காலடிக்கு வரவழைக்க வைப்பதற்கும், அண்மைக் காலமாக ஹக்கீம் பஷீரின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காது இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.  நஷீர் அஹமட்டை மு.காவில் இணைத்துக் கொண்டதன் பின்னர்தான் இந்நிலை என்றும், இதற்கு ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற தொனியில் பஷீர் தெவித்ததாகவும் மு.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மு.கா. மிகவும் முக்கியத்துவம் வாந்த தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கட்சியின் தவிசாளர் மேற்படி கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாதென்ற கருத்தும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடையே காண்படுகின்றன.
 
மு.கா. பிழையான வியூகத்தில் போ கொண்டிருக்கின்றது என்று தெரிந்திருந்தும் அதனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு இப்போது கருத்துக்களை அடுக்கிக் கொண்டிருப்பது ஒரு சந்தர்ப்பவாத அரசியலாகவே இருக்கின்றது.
 
பிழையான வியூகமாக இருந்தாலும், தலைமைத்துவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகக் கூறலாம். அப்படியாக இருந்தால், இன்று மட்டும் அந்த தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறி குட்டையை உடைப்பதேன்?
 
மு.கா. பிரச்சினைகளின் முழு வடிவம் என்றே கூற வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிட் வேண்டுமென்ற முடிவினை எடுப்பதில் ஒரு கூட்டுப் பொறுப்பு இருக்கவில்லை. வருமானங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கின்ற கட்சியாகவே இருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இதே நிலையில்தான் இருந்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம்தான் பாவம்.
 
பஷீர் மிகவும் நாகரிகமாக ஹக்கீமை சாடியுள்ளார் என்பதும் அவரின் பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
 
மு.கா. பலத்த நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது என்பது மிகத் தெளிவான உண்மையாகும்.
 
நஷீர் அஹமட்டை மு.கா. சேர்த்துக் கொண்டாலும், அவர் மு.காவிற்கு எதிராக மேற் கொண்ட தொடரான பல நடவடிக்கைகள் கட்சியை திணர வைத்துள்ளன. உள்ளுராட்சித் தேர்தலில் மரச்சின்னத்தில் மு. கா. போட்டியிட முடியாத சூழலை ஏற்படுத்தியதில் நஷீர் அஹமட்டிக்கும் பங்குண்டு என்று அன்று மு. காவினர் தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றத்தால் மரச்சின்னத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 'கட்சியின் சின்னம் களவு போனதோ?' என்ற பாடல் உருவாகுவதற்கு நஷீர் அஹமட் காரணம் எனலாம்.
 
இந்தப் பின்னணியில் மு.காவிற்குள் உருவாகியுள்ள கருத்து முரண்பாடுகள் மேலும், வலுப் பெற்றுவிடுமாயின் மு.காவை பாதுகாப்பதென்பது கடினமானதாக அமைந்து விடும்.

 

2 comments:

  1. இங்கு சமூகம் என்றொன்று இருக்கின்றது என்பதனை பலர் மறந்துவிடுகின்றார்கள்.

    ReplyDelete
  2. மிஸ்டர் றியான், ஒரு தனிப்பட்ட நபரை நம்பி இந்த முஸ்லிம் காங்கிரஸ் இல்லை.. இதன் பின்னால் ஆயிரக்கணக்கான முஸ்லிம் போராளிகளும் நல்ல அரசியல் ஞானமுள்ளவர்களும் உள்ளனர் அதற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவன் உள்ளான்.. என்ற விடயத்தை முன் நிறுத்தி விடயங்களை அலசவும்..

    பசீர் சேஹுதாவுத்தின் கதைகல்ளெல்லாம் காகம் நிற்க பனங்காய் விழுந்த கதை தான்.. இவர் இவ்வளவு ஆட்டம் போடுவது ஹக்கீமின் பலகீனமே ஒழிய வேறொண்டும் இல்லை...

    பசீர் சேகுதாவுத், ஹிஸ்புல்லாஹ், ரிசாத் பதிஉதீன், அதவுல்லா.. போன்ற சுயநலத்தை முன்னிறித்தி அரசியல் நடாதுபாவர்களை நிட்சயமாக இறைவனின் உதவியால் மக்கள் நிராகரிப்பது வெகுதூரத்தில் இல்லை..

    ReplyDelete

Powered by Blogger.