Header Ads



கிழக்கு தேர்தல் தொடர்பான PMGGயின் மக்களை விழிப்பூட்டும் பிரச்சாரப பணி


PMGG ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் பிரச்சாரப்பணி கல்குடா பிரதேசத்தில் (16.08.2012) நடைபெற்றது.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களுடன் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளைச் சேர்ந்த PMGGயின் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கும், பொதுமக்களுக்கும் PMGGயின் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இப்பிரசுரங்களை பெற்றுக்கொண்ட மக்கள் மகிழ்வுடன் பெருமளவிலான ஆதரவினை வழங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது.

“நகர்வுகள்” வெளியீடு 3 இன்று ஜும்ஆவின் பின்னர் கிழக்கு மாகாணம் எங்கும் விநியோகம்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனது அரசியல் விழிப்பூட்டும் பிரச்சார நடவடிக்கைககளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடரில் “நகர்வுகள்” எனும் வெளியீட்டின் மூன்றாவது வெளியீட்டை கிழக்கு மாகாணம் எங்குமுள்ள ஜும்ஆ பள்ளிவாயல்களில் இன்று (17.08.2012) ஜும்ஆவின் பின்னர் PMGG விநியோகித்தது.

இதன்போது மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களில் அந்ததந்த பிரதேச செயற்குழு உறுப்பினர்களுடன் சூறாசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் பிரதேச PMGGயின் செயற்குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் ஒன்று கூடலும், இப்தார் நிகழ்வும்

நல்லட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பொத்துவில் பிரதேச செயற்குழு உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வொன்று (17.08.2012) நடைபெற்றது.

இந்நிகழ்வு பொத்துவில் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதன்போது பொத்துவில் பிரதேச உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருடன் PMGGயின் சூறாசபை உறுப்பினர்களுள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் PMGGயின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தெளஸ் நளீமி சிறப்புரை ஆற்றினார்.

இவ்விப்தார் நிகழ்வானது காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டத்தின் பின் பொத்துவில் பிரதேச செயற்குழு ஏற்பாடு செய்திருந்த முதலாவது நிகழ்வென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.