Jaffna Muslim Association - UK ஏற்பாட்டில் பித்ரா அரிசி விநியோகம் (படங்கள்)
பட உதவி - முஸம்மில் சுபைர்
பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் சேகரிக்கப்பட்ட பித்ரா பணத்திலிருந்து சேகரிக்கப்பட்ட பணத்திலிருந்து, யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மற்றும் புத்தளம் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு பித்ரா அரிசி விநியோகிகப்பட்டது. இதன்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காண்கிறீர்கள்.
Good Work. If France Muslims also do like this we will appreciate it.
ReplyDeleteஹதீயா வாங்க வந்த ஏழை மனுசர்ட போட்டோ எடுத்து எதுக்கு சார் போட்டீங்க? அவங்களுக்கு மானம், மரியாத, சுய கவ்ரவம் இல்லயா?
ReplyDeleteநீங்க போட்டோ புடிச்சு பப்ளிக் போடாட்டி, நீங்க குடுத்தது அல்லாஹ்க்கு தெரியாம போய்டுமா?
நீங்கல்லாம் லண்டன்ல செய்ற தொழில எல்லாம் போட்டோ புடிச்சு போடுவீங்களா?
சார், ஹதியா குடுத்தா, இடது கைக்கு தெரியாம குடுக்க சொல்லி இருக்காக.
இது ஹதியா கொடுப்பதை தம்பட்டம் அடிப்பதற்காகவோ பெருமைக்காகவோ செய்தது என்று ஏன் முரசு கொட்டவேண்டும் ?? இப்படிப்பட்டவர்களிற்கு உதவி தேவை என்று விடுக்கும் அழைப்பாகக் கூட இருக்கலாமே!
ReplyDeleteஇது வலது இடது கை கதை அல்ல இம்மக்களிற்கு உதவி தேவை கையோடு கை கோர்க்க விடுக்கும் அழைப்பு... புரிந்து கொண்டு உதவி செய்ய முன்வாருங்கள்....
ஹதியா வாங்குவது தொழில் அல்ல... அது அவர்கள் அந்த நிலைக்கு தல்லப்பட்டு இருக்கிறார்கள்...தொழில் வாய்ப்பு இன்மை... முடிந்தால் அதற்கு கூட நீங்கள் உதவி செய்யலாம்....
கொச்சத்தமிழில் குறைகூறுவதை விட்டு விட்டு முடிந்தால் உதவுங்கள் இல்லை மூடுங்கள்...
இஞ்சார்றா கிழட்டு ஆந்தையார் வந்து கத்துறார்ரா.
ReplyDeleteஆந்தையாருக்கு பகல்ல யெண்டால் ஒழுங்கா கண் தெரியாது எண்டு சொல்லுவினம்,
கிழட்டு ஆந்தையாரே, கிழட்டு ஆந்தையாரே, உமக்கு ராவுலையாலும் ஒழுங்கா கண் தெரியுமே?
உதவுற சனம் செவ்வாய்க் கிரகத்துலயல்லோ வாழுது, நீயள் போட்டோ போட்டதாலைதான் அவையளுக்கு விளங்குது "பூமியிலை உப்புடி ஆக்களுக்கு உதவி தேவையெண்டு"
ஹீ ஹி ஹீ ஹ்ஹீ ஹேஹ் ஹீ..... ஆந்தையார் ஆள்தான் கிழடு எண்டாலும், நல்ல வடியா பகிடி பண்ணுறார்.
ஆந்தையாரே, கிழட்டு ஆந்தையாரே, அடியேனுக்கும் உங்களின்ர கையோட கை சேர்த்து உதவி செய்ய ஆசைதான், கண்டீரோ.
உதுக்கு முந்தி ஒரு 18 megapixel கமராவாவது வாங்க வேண்டாமே? முதல்ல கமரா வாங்கிப்போட்டு, பெந்துதானே உதவேலும், என்ன..... சொல்றது விளங்குதே உமக்கு?
நபியளார் (ஸல்) ஏழை எளியாருக்கு உதவச் சொல்லி கதீசிலை சொல்லியிருக்கிராரல்லோ, கதீசிலை என்ன கலர் போட்டோவே போட்டிருக்கினம்?
pls publish my comment.
ReplyDeleteஇப்படி அப்பாவியா இருக்கியேப்பா அந்தக் காலத்தில கமெர கண்டுபிடிக்கவில்லையே ... கமலத்தான்னப்ப வச்சு ஓட்டினாங்க ...நீ அப்பாவியா? இல்லையா படுபாவியா? எப்ப பாரு எங்க பார்த்தாலும் பிரச்சினை பண்ணிக் கொண்டு... கமெரா என்றால் ஏதும் போபியாவா உமக்கு? கெட் ஹெல்ப்.
ReplyDeleteகிழட்டு ஆந்தையார் ஐயா, அந்தக் காலத்தில சொன்ன தருமத்தத்தானே இந்தக் காலத்திலையும் குடுக்குறியல்.
ReplyDeleteபோட்டோல பாத்துட்டே குடுக்குறியல்??? சும்மா பப்ளிசிட்டிக்காக போட்டோ, லெட்டர் ஸ்கான் எண்டு சனத்த பிச்சக் காரராக்கி பேக்காட்டாமல்,
புன்னியத்துக்காக கொடுத்து போட்டு, கப் சிப் எண்டு இருங்கோ.
ஆண்தையாரே, மரிக்கார் லெப்பை சொன்னத சொல்றன்
உமக்கும் சோரன், உதையும் கொஞ்சம் படிச்சுப் பாருமன்.
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினைகள் செய்தும் உங்கள் ஸதகாவை (தான தர்மங்களை) பாழாக்கி விடாதீர்கள். (அப்படிச் செய்பவனுக்கு ) உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். (2:264)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கை அவர் தர்மம் செய்ததை இடக்கை அறிந்து கொள்ளவில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்) இறைவன் இவரை பார்த்து உலகில் உனக்கு நான் செல்வத்தை தந்தேனே அதை எவ்வழியில் செவழித்தாய் என்பான். அந்நபர் இறைவா நான் உன் வழியில்தான் செலவிட்டேன் என்பான். இறைவன் எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழ வேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய் என்று கூறி அவரை முகம் குப்புர நரகத்தில் இழுத்துச் சென்று போடுவான். (ஆதாரம்: முஸ்லிம்)