Header Ads



மன்னார் மாவட்ட பொது ஒன்றியத்தின் கவனத்திற்கு...!



அபூ அஸ்ஜத்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தமிழர் ஒரு போதும் தடுக்கவில்லை  மன்னார் மாவட்ட பொது ஒன்றியம் அறிக்கை என்று தின்ககுரல் மற்றும் சுடர் ஒளி பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து எமது தரப்பு கருத்துக்களையும்  முன்வைக்க விரும்புகின்றேன்.

வன்னி மாவட்டத்தை பொறுத்த வரையில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். 1990 ஆம் ஆண்டு புலிப்பயங்கரவாதிகள் எமது மக்களை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டு எமது மக்களுக்கு சொந்தமான அனைத்து வளங்களையும்,அனுபவித்து வந்ததை மறந்து விடமுடியாது. வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக கடந்த 22 வருடங்களாகியும் இன்னும் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற ஆரம்பித்த போது, அவர்களுக்கெதிரான திட்டமிடப்பட்ட சதிகள் ஆரம்பமாகியதை தெரியப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

மன்னார் மாவட்ட பொது ஒன்றியம் என்ற பெயரில் வெளிவந்துள்ள அறிக்கையில் அவர்களே, உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் மீள்குடியேற வந்த போது, கிறிஸ்தவ மத தலைவர்களும், வங்குரோத்து நிலை கொண்ட பிரதேச அரசியல் வாதிகளும், அப்பாவி தமிழ் மக்கள் சிலரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அந்த குடியேற்றத்துக்காக எதிராக ஆரப்பாட்டம் நடத்தியது.

இந்த பொது அமைப்புக்கு தெரியாதா? மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பூர்வீக முஸ்லிம்களுக்கு சொந்தமான சன்னார் காணியினை வெளி மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு அதுவும் கிளிநொச்சி மாவட்ட மாவீரர்கள் என்றழைக்கப்படும் குடும்பங்களை கொண்டுவந்து அந்த காணியில் குடியமர்த்தியதுடன், முஸ்லிம்கள் தமது மண்ணுக்கு மீள்குடியேற வந்து  போது தமது காணியினை பறிகொடுத்த நிலையில் மாற்று இடத்தில் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் அம்மக்களை குடியமர்த்த நடவடிக்கையெடுதத் போது,அந்த மக்களின்; மீள்குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்ற நப்பாசையில் மன்னார்ஆயர் ராயப்பு யோசப் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது முஸ்லிம்களின் மீது கொண்ட பற்றினாலா?

மன்னார் மாவட்ட பொது அமைப்பு என்பது எப்போது முளைத்தது,முஸ்லிம்களுக்கும்,தமிழ் மக்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதாக பேசப்பட்ட போது,முன்வந்து இரு தரப்புக்கும் இடையில் சமரசம்  செய்யும் பணியினை செய்யாமல் இன்று மன்னார் மாவட்ட புலி ஆதரவாளர்களுக்காக குரல் கொடுக்க வந்துள்ளதன் பின்னணி என்னவென்பதை பார்க்க முடிகின்றது.

மதத்தைக் கற்றவர்கள் அதனை மக்களுக்கு போதிக்க வேண்டும் அது தான் அவர்களது பணி. பொது அமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை போன்று மன்னார் ஆயர் யார் அரச நிர்வாகத்தில் தலையிட? மன்னார் ஆயர் என்ன அமைச்சரா? அவருக்கு எது குறித்த தீர்மானம் எடுக்க முடியும்; என்பதைத் தான் நாங்களும் கேட்க விரும்புகின்றோம்.

2002 ஆம் ஆண்டு காணப்பட்ட தற்காலிக சமாதான சூழலில் முஸ்லிம்கள் முற்று முழுதாக தமது தாயகத்தில் மீள்குடியேற  வரவில்லை 2009 ஆண்டு இறுதியில் புலிகளின் கொட்டத்ததை அடக்கிய பின்னர்தான் அம்மக்கள் மன்னாருக்கு மீள்குடியேற வந்தார்கள் இந்த மக்கள் அங்கு வரும் வரை முஸ்லிம்களின் காணிகளைம் சொத்துக்களையும் அனுபவித்தவர்கள் யார்,இது தெரியாமல் மன்னார் மாவட்ட பொது அமைப்பு பொய்யை உண்மையாக்க தங்களது ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றமை குறித்து தாங்கள் அறியாமல் போனது ஏன் என தெரியவில்லை.

தலைநகர் கொழும்பிலும் அதனை சூழ உள்ள பகுதிகளில் முஸ்லிம் உணவகம் என்ற பெயரில் அல்லது தமிழ் உணவகம் என்ற பெயரில் இயங்கிவரும் உணவகங்களில் பணியாற்றுபவர்கள் மாற்று மத சகோதரர்கள் இல்லையா? முஸ்லிம் உணவகத்தின் பெயர் பொறிக்கப்பட்டதால் முஸ்லிம்கள் முழுமையாக மீள்குடியேறிவட்டார்கள் என்று உதாரணம் மூலம் காட்டும் மன்னார் மாவட்ட பொது அமைப்பின் கருத்து குறித்து என்ன சொல்வது என்று புரியவில்லை. ஒரு பொய்யினை உண்மையாக்குவதற்கு ஆயிரம் பொய்யையும், புழுகு மூட்டடைகளையும் கூறுவது குறித்து வாசகர்கள்,குறிப்பாக மன்னார் மாவட்ட தமிழ் பேசும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுவதாக தெரிவிக்கும் இவ்வமைப்பினருக்கு புத்தி பேதலித்துவிட்டது  என நிணைக்க தோன்றுகின்றது. புலிகள் இலங்கையில் இல்லையெனில் ஏன் அரசாங்கம் அதற்கெதிரான தடையினை நீடிக்க வேண்டும். எமது நாட்டில் மட்டுமல்ல அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் புலித் தடைகளை விதித்துள்ளது. அவர்களுக்கு தெரியாத சட்டங்கள் மன்னார் மாவட்ட முகவரியில்லாத பொது அமைப்புக்கு  எவ்வாறு தெரிந்துள்ளது என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கின்றது.

அதே வேளை மன்னார் மாவட்ட பொது அமைப்பு பொது மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை என்பதை அம்மக்கள் நன்கறிவார்கள்,தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு இடையில் இன விரிசலை தோற்றுவித்து புலி ஆதரவு சக்தியின் சரிவினை கொஞ்ஞம் முண்டு கொடுக்கும் வேலையினையே செய்தவருகின்றார்கள் என்பது அவர்களது தற்போதைய அறிக்கையின் மூலம் புலனாகின்றது.

நீதிமன்றில் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளதால் அது குறித்த கருத்துக்களை கூறவேண்டிய தேவைப்பாடு இல்லை. இருந்த போதும் மன்னார் மாவட்டத்தின் நிர்வாகம் கடந்த காலங்களில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. அமைச்சர் றிசாத் பதியுதீனின் வருகையின் பின்னர் தான் முன்னேற்றப்பாதையினை நோக்கி செல்கின்றது என்ற உண்மையினை சொல்லாமல் இருக்க முடியாது. அரச அதிகாரி ஒருவர் குறிப்பிட்ட காலம் ஒரு இடத்தில் பணியாற்றியதன் பின்னர் அவர வேறு இடத்திற்கு இடமாற்றம் பெற்று செல்வது இயல்பான செயற்பாடாகும். அரசாங்க அதிகாரியாக நியமனம் பெறும் எவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது இந்த பொது அமைப்புக்கு கூட தெரியாமல் போயுள்ளது. அதனடிப்படையில் அந்த இடமாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அவ்வாறு அதனை அமைச்சர் றிசாத் தான் செய்தார் என்று நிரூபிக்க முடிந்திருந்தால் அவர்களுக்கு அப்போதே மன்னார் மாவட்ட பொது அமைப்பின் சட்ட ஆலோசனையுடன் நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம்.

வடக்கில் முஸ்லிம்கள் 22 வருடங்களாக இல்லாமல் இருந்த போது,வருடா வருடம் வருகின்ற அரச நியமனங்களை பெற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்களா? நியமனங்கள் வழங்கப்படுகின்ற போது, அதில் முஸ்லிம்களை விட தமிழ் சகோதரர்களுக்கே அதிகமான முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆதாரங்கள் அரச திணைக்களங்களில்உள்ளது. விதண்டாவாதம் புரிபவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று தான் வாதிடுவர் என்பது ஒன்றும் புதிதல்லவே.

புத்தளத்தில் இருந்த வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியேறிவரும் போது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை கூட சில அரச அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்காமல் இருந்தால் அங்கு வந்த முஸ்லிம்கள் என்ன செய்வார்கள் அப்போதும் அவர்கள் ஒலை கிடுகளுக்குள்ளும் மரத்தடியிலும் வசித்து வருகின்றனர். அவர்களைச்; சீண்டிவிட்டு அதிலும் சுய இன்பம் கானும் மன்னார் மாவட்ட பொது அமைப்பு கஷ்டப்படும் முஸ்லிம்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை தாம் சார்ந்துள்ள தமிழ் மக்களுக்கு செய்த உதவிகள் தான் என்ன எனகேட்க விரும்புகின்றேன்.

இனவாதத்தையும்,மதவாதத்தையும் தமது மூச்சுக் காற்றாக கொண்டுள்ள மன்னார் மாவட்ட முகவரியில்லாத பொது ஒன்றியம் தனது தவறை உணர்ந்து மன்னாரின் அபிவிருத்திக்கும், மன்னார் மாவட்ட அனைத்து இன மக்களின் விமோசனத்திற்குமான ஆக்கபூர்வமான கருத்தை தெரிவிப்பதுடன் இந்த பணியில் முன்னின்று உழைக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் ஒன்றுபட முன்வருமாறு அவர்களுக்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கின்றேன்.

3 comments:

  1. முப்பது வருட போராட்டத்தில் புலி பயங்கர வாதிகள் ஒரு நீதி பதியையோ அல்லது நீதி மன்றத்தையோ அச்சு உறுத்தாதது கவனிக்க படவேண்டிய ஒன்று முஸ்லிம்கள் ஏன் நீதி மன்றத்தில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் அந்த நீதி மன்றம் சரியான திர்ப்பை வழங்க வில்லை என்றால் அடுத்த நீதி மன்றத்தை நாட வேண்டியது தானே புலிகள் பற்றி முஸ்லிம்கள் பேசு வது எல்லாம் புலி எதிர்ப்பு காட்டினால் பொவுத்த சின்ஹல மக்கள் தங்களோடு வந்து ஒட்டி விடுவார்கள் என்கிற நட்பாசையே ஆனால் அதற்க்கு வாய்ப்பு இப்ப இல்லை என்பதே உண்மை அதிகரித்து varum முஸ்லிம் சனத்தொகை பெருக்கம் பொவுதர்களை கலக்கம் அடைய செய்து உள்ளது பவுத்தர்கள் ஹிந்துக்களாக மாறவேண்டியது இல்லை அவர்கள் பவுத்தர்களாக இருந்து கொண்டே ஹிந்து கடவுளையும் வழிபடலாம் ஆனால் பொவுதர்கள் முஸ்லிம்கள் ஆக நூறு வீத சந்தப்பம் இருக்கு என்பதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் கள் சனத்தொகை பெருக்கத்தை கட்டு படுத்துவதாக பவுதார்களுக்கு வாக்கு கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே புலி எதிர்ப்பு காட்டி நலன் பெற முடியும்

    ReplyDelete
  2. மன்னார் மாவட்ட பொது ஒன்றியம் என்பது பேப்பர் புலிகள்.

    ReplyDelete
  3. LTTE lawyer wants judges out | The Sunday Leader
    www.thesundayleader.lk/.../ltte-case-lawyer-wants-judges-out/Share4 Oct 2011 – A Dutch lawyer has called for the removal of the panel of judges in the case ... Guys what about the sinhala civilans killed by LTTE WHY DONT ...

    ReplyDelete

Powered by Blogger.