பஷார் அல்அசாத்திற்கு பேரிடி - கூடவிருந்த பிரதமர் தப்பியோட்டம்
சிரியா பிரதமர், அந்நாட்டைவிட்டு , குடும்பத்துடன் ஜோர்டன் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் கடந்த 18 மாதங்களாக மக்கள் கிளர்ச்சி நடக்கிறது. அதிபர் பஷார் அல்அசாத் பதவி விலக மறுக்கிறார்.இந்நிலையில் அதிபரின் வலது கரமாக இருந்தவரும், சிரியா பிரதமரான ரியாத் ஹஜிப், நாட்டைவிட்டு வெளியேறி குடும்பத்தினருடன் ஜோர்டனில் தஞ்சமடைந்துள்ளதாகவும், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ஆளும் பதா கட்சியின், ஷன்னி பிரிவைச் சேர்ந்த இவர் அதிபரின் நம்பிக்கைக்குரியவராக முக்கிய துறைகளை வைத்திருந்தார். கடந்த ஜூன் மாதம் தான், விவசாயத்துறை அமைச்சராக இருந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். சிரியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசடைந்துவருகிறது. எனவே தற்போது குடும்பத்தினருடன் ஹஜிப் ஜோர்டன் சென்று விட்டதாக சவூதி டி.வி. ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதைத்தொடர்ந்து துணைப்பிரதமர், ஒமர் கலவாஞ்சி தற்காலிக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தவிர சிரியாவின் முக்கிய உளவுத்துறை அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியே ஜோர்டனில் தங்கிவிட்டதால், அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
Post a Comment