Header Ads



தரை, கடல், பனிபிரதேசத்தில் பறக்கும் விமானம் - அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு


ரோட்டில் ஓடும் கார் படகு மற்றும் விமானம் ஆக மாறுவதை ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற அதிசய வாகனத்தை நிஜவாழ்வில் காண இருக்கிறோம்.

தரை, கடல் மற்றும் பனிபிரதேசத்தில் பறக்கும் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்து உள்ளனர். அமெரிக்காவின் லிசா அகோயா என்ற நிறுவனம் அதி நவீன விமானத்தை வடிவமைத்துள்ளது.

தரையில் பறக்கும்போது அதன் 2 இறக்கைகள் விரியும். தண்ணீரில் பறக்கும்போது அது படகு போன்று மாறும். அதே நேரத்தில் பனி பிரதேசத்தில் செல்லும்போது அதன் 2 இறக்கைகளும் பனிக்கட்டிகளை உடைத்து நொறுக்கி சீரமைத்து அதில், பயணிக்க செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் 2011 கி.மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும். மணிக்கு 135 மைல் முதல் 155 மைல் வேகத்தில் பறக்கும். இந்த அதிநவீன விமானத்தின் விலை ரூ.185 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் அதாவது 2014-ம் ஆண்டு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் இது விற்பனைக்கு வருகிறது.

அதற்கு முன்னதாக இந்த விமானங்கள் 70 தடவை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் விற்பனை கண்காட்சி அமெரிக்காவின் வின்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒஸ்காஷ் ஏர்வென்ஞ்சர் நிறுவனத்தில் கடந்த மாதம் நடந்தது.

1 comment:

  1. 2014 வரை இலங்கையில் பாரிய மாற்றங்கள் எதுவும் நடைபெறாவிட்டால், அந்த மன்னரின் மூன்று மகன்களில் ஒருவர் இதில் ஒன்றை வாங்கும் வாய்ப்புகள் அதிகம், அவர்களுக்கு இது வெறும் 185 கோடி ரூபா தானே, கஷ்டப்படும் பொதுமக்களின் பணம், அடிக்கிற ஊழல் அடியில் இதெல்லாம் ஒரு தொகையா அவர்களுக்கு?

    ReplyDelete

Powered by Blogger.