ஜேர்மனியில் மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக போராட்டம்
மியான்மரில் ராக்கேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இரண்டு மணிநேரம் நீண்ட போராட்டம் நடைபெற்றது.
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை தடுக்க ஜெர்மன் அரசு தனது செல்வாக்கை உபயோகிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மியான்மர் முஸ்லிம்களை அழித்தொழிக்க வேண்டுமென்றே நடக்கும் முயற்சிகளை நிறுத்தக்கோரும் பெரிய பேனர்களும், அட்டைகளும் போராட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர். பெளத்த வெறியர்களின் தாக்குதலில் பலியான முஸ்லிம் பெண்கள், குழந்தைகளின் ஃபோட்டோக்களையும் கையில் ஏந்தி்யிருந்தனர்.
மியான்மார் முஸ்லிம்களுக்காக ஜேர்மணில் போராட்டம் நடாத்தியிருப்பது
ReplyDeleteஅம்மக்கள் முஸ்லிம் உலகின் மேல் கொண்டுள்ள அக்கரையையும் சகோரத்துவத்தையும் காட்டுகின்றது.ஆனால் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்களும்,முஸ்லிம் ஊடகங்களும் இந்த விடயத்தில் பொடுபோக்காக இருப்பது கவலைககுறிய விடயமாகும்.மியான்மார் போன்ற நாடுகளிள் முஸ்லிகள் இருப்புக்காக போராடடிக்கொண்டிருக்கும்போது எமது நாட்டில் சிலர் மார்கத்தில் காணப்படும் சிறு கருத்துவேருபாடுகளுக்காக போராடிக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.