Header Ads



'பல்டி அடிக்கமாட்டோம்' - மு.கா. வேட்பாளர்கள் உலமாக்கள் முன் சத்தியம் செய்தனர்

 
இஸ்லாமிய கிலாபத் (அரசாட்சி), அதனுடைய அடிப்படைகள், அது எவ்வாறு முஸ்லிம் உம்மத் (சமூதாயம்) உடைய  அரசியல் செல்நெறியை தீர்மானித்தது என்பன பற்றி இக்கால கட்டத்தில் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் தலைமைத்துவ கட்டுப்பாடு, பைஅத் கோட்பாடு என்பன பற்றிய தெளிவான விளக்கமும் காலத்தின் தேவையாகும். 

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (30) மாலை சாய்ந்தமருதுவில் நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கான பைஅத் (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வில் ஆரம்ப உரையை ஆற்றும் போது கூறினார்.

எதிர்வரும் மாகாணசபை தேர்தலை முன்னிட்டு அதில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுக்கான இந்த பைஅத் நிகழ்வு உலமாக்கள் முன்னிலையில் சாய்ந்தமருது, சுகாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) பாலமுனை ஹாஷிம் மௌலவி (மதனி) பைசல் மௌலவி, அபூஉபைதா மௌலவி ஹாபில் உட்பட கண்ணியமிக்க உலமாக்கள் இந்த பைஅத் நிகழ்விற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

அங்கு ஆரம்ப உரையில் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

நாங்கள் இன்று ஏற்பாடு செய்துள்ள பைஅத் நிகழ்வு இலங்கையை பொறுத்தவரை சிறந்த முன்னுதாரணமாகும். இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் சமூகத்தின் இருப்பையும், பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு இதன் மூலம் வழி காணப்படுகின்றது. நான் இவ்வாறான நிகழ்வில் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முன்னரே, சங்கைக்குரிய உலமாக்கள் முன்வந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த இயக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களுக்களுக்கும் , தொண்டர்களுக்கும் ஒரு தர்பிய்த் (பயிற்சி) ஒன்றின் தேவை நன்கு உணர்ப்பட்டுள்ளது என்றார். உலமாக்கள் உரைகளைத் தொடர்ந்து பைஅத் நிகழ்வு இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரான பைசல் காசிம். எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரும் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் கலந்துக் கொண்டனர்

3 comments:

  1. சார்...EDITOR , JAFFNA MUSLIM,
    ...இந்த உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி இலங்கையிலேயே முதன் முதலாக கிழக்கு மாகாணம் , அமைச்சர் அதவுல்ல வின் ஊர் , அக்கரைப்பற்றில் , சென்ற 2011 இல் நடந்த உள்ளூராச்சித் தேர்தலில் களம் இறங்கி சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை குழு 01 , முதன் முதலாக வேட்பாளர்களிடம் பைத் எனும் உறுதி மொழி எடுத்து அதை அக்கரைப்பற்று மக்கள் எல்லோருக்கும் வழங்கியது......... இதன் பின்தான் முஸ்லிம் கொங்க்றேச்ஸ் காரர்கள் அதை தொடர்ந்து செய்ய முன் வந்துள்ளார்கள்...அக்கரைப்பற்றில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இப்போது இதை இந்த தேர்தலில் செய்ய வேண்டும் என முடிவெடுத்ததற்கு அக்கரைப்பற்று 2011 சுயேச்சை குழு 01 வழி காட்டியாக இருந்ததற்கு இறைவனுக்கே புகழ் . இந்த வரலாறு யாரும் மறுக்க முடியாதது.. . ....

    ReplyDelete
  2. குட்டுக் கரணம் அடிக்க மாட்டினம், தவிப் போவினம்.
    காசெண்டால், சவமும் எழும்பி ஓடிடும்

    ReplyDelete
  3. பைஅத்(இஸ்லாமிய ஆட்சியில்) எனும் போது அது பற்றிய தெளிவையும் முஸ்லிம்கள் (நாம்)அறிந்து கொள்வது கட்டாயம்.ஆகவே ஆசிரயருக்கு என்னுடைய வேண்டுகோள் தெளிவான(குர்ஆன்,ஹதீஸ் மூலம்) ஒரு ஆக்கத்தை தருமாறு வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.