Header Ads



''ஒரு செங்கல்லைக் கூட வைத்துள்ளீர்களா..? அமைச்சர் அதாவுல்லா கேட்கிறார்

ஹப்றத்

நாங்கள் மக்கள் மத்தியில் உண்மைகளையும் தெளிவுகளையும் நடந்தவற்றை நடந்தவாறு உள்ளொன்று புறமொன்று வைத்துப் பேசமல் நேர்மையான முறையில் தெளிவுபடுத்தி வருவதனால் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமையும் அதன் வேட்பாளர்களும் அச்சம் கொண்டுள்ளனர் என தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
தேசியகாங்கிரஸ் கட்சியின் தலைமை எப்போதும் உண்மைகளையும் யதார்த்தையுமே பேசிவந்துள்ளது இன்னுன் உயிர் மூச்சு இருக்கும் வரைக்கும்  அதனையே செய்யவுள்ளது அதனைத்தான் எனது கட்சியின் அரசியல் தொண்டர்களும் செய்து வருகின்றனர்.

எமது பெரும் தலைவர் மர்ஹூம் அஷறப் அவர்கள் எம்மோடு இருக்கின்ற போது பிரதேச அரசியல் தலைமைகள் அனைத்தும் தூங்கிக் கொண்டது அந்தத் தலைமை தன்னம் தனியனாக நின்று எம் சமூகத்துக்கு செய்யவேண்டிய காரியங்களை கட்சிதமாக செய்து வந்தது அவருடைய மறைவின் பின்னர் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்ட தலைமைத்துவத்தின் அதாவது றவூம் ஹக்கீமின் கபடத்தனமான செயற்பாடுகளும், ஏமாற்றுத்தனமான நடவடிக்கைகளினாலும் எமது சமுகம் பல வழிகளிலும் ஏமாற்றப் பட்டுள்ளது.

அத்துடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் இன்னுமின்னும் எமது சமுகத்தை காட்டிக் கொடுக்கவும் எமது கிழக்கு மாகாண மக்கள் மீது சவாரி செய்யவும் அந்ந மக்களுடைய வாக்குகளை வைத்து அந்நிய சக்திகளுக்கு அடமானம் வைத்து தானும் தன்னுடைய அடிவருடிகளும்  பிழைப்பை நடாத்துவதற்கான கபட நாடகத்தை அரங்கேற்றி மக்களை சூடேற்றி வருகின்றார்.

ஒரு முஸ்லீம் தலைமைத்துவத்துக்க இருக்க முடியாத பன்புகளை நிறையப்பெற்று இடத்திற்கு இடம் மாறுபட்ட கருத்துக்கள் இதனால் ஒரு சமுகத்தை இன்னொரு சமுகம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் வகையில் இனவாத அரசியல் பிரச்சாரங்கள் இங்குள்ள மக்கள் எதுவும் தெரியாத மந்தைகள் என்று மகுடி வாசிக்கின்ற கோமாளித் தலைவராக காலத்துக்கு காலம் பொட்டனி வியாபாரிகளைப் போன்று வலம் வந்து கபளிகரம் செய்கின்றார்.

இவருடைய இந்த போக்கை மக்களுக்க தெளிவு படுத்துவதற்காகவே தூங்கிக் கொண்டிருந்த பிரதேச அரசியல் தலைமைகள் அனைத்தும் இன்று இந்த ஹக்கீமுடைய வேசத்தை கலைக்க செயற்பட்டு வருகின்றது.

தேசிய காங்கிரஸ் தலைமை ஒருபோதும் இனவாதத்தையோ அல்லது மக்களின் உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய இனவாத  அரசியலை செய்யவில்லை அந்த அரசியலை ஒரு போதும் செய்யப் போவதுமில்லை.

ஹக்கீமுடைய விசமத்தனமான செயற்பாடு தொடர்பாக நேற்று முந்தினம் சம்மாந்துறை மண்ணுக்குவந்த ஜனாதிபதி அவர்கள் தெளிவாகவே கூறினார் நீங்கள் அறிந்திருப்பீர்கள் நாங்கள் பொய் செல்லவில்லை நாங்கள் சென்னவற்றை செய்து காட்டியுள்ளோம் அதுநடைபெற்றுள்ளது.

இன்று உலாவுகின்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஹக்கீம் கூறுகின்ற தனித்துவம் காப்போம், தன்மானம் பேனுவோம், எமது உரிமைகளை வென்றெடுப்போம் எங்களுக்க அபிவிருத்தி தேவையில்லை என்று அன்று தொடக்கம் இன்று வரைக்கும் கூக்குரலிடும் இவர்களால் இத்தனை ஆண்டுகளுக்கும்  நீங்கள் இந்த சமூகத்துக்காக என்ன உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் எனக் கேட்டுக் கோள்கின்றேன்.

இந்தத் தேர்தலில் நீங்கள் பெற்றுக் கொடுக்க இருக்கின்ற உரிமை என்னவென்றால் இன்று எமது ஜனாதிபதியின் முழு முயற்சியினாலும் நாங்கள் வழுங்கிய ஒத்துழைப்பினாலும்  கடந்த 30 ஆண்டுகள் பட்ட துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து வடக்கையும் கிழக்கையும் தனியாக பிரித்து நாம் சகல சமுகமும் மீண்டும் ஒற்றுமையுடன் செயற்பட்டு கட்டிக்காத்து வருகின்ற இன ஒற்றுமையினை இல்லாமல் செய்து மீண்டும் அந்நிய சக்திகளோடும் எமது மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து சின்னாபின்னப் படுத்தும் நோக்கை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைந்து வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற உரிமையை மாத்திரம்தான உங்களால் செய்யமுடியும்.

உங்களால் எதுவும் செய்ய முடியாது அதை தவிர நாங்கள் இதய சுத்தியுடன் இறை நம்பிக்கையோடு முன்னேடுக்கின்ற சகல விடயங்களிலும் இறைவன் உதவியால் வெற்றி பெற்றுள்ளோம் நாங்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழக் கூடிய உரிமையினை பெற்றுக் கொடுத்துள்ளோம் அதே போன்று எமது பிராந்தியங்களை அபிவிருத்தி செய்து அழகுபார்க்க பல கோடிக்கணக்கான அபிவிருத்திகளையும் செய்துள்ளோம்.

ஏங்களைப் பார்த்து யாரும் எதுவும் கேட்கமுடியாது நாங்கள் நிறையவே செய்துள்ளோம் நீங்கள் இத்தனை ஆண்டுகளுக்கும் என்ன செய்துள்ளீர்கள் ஒரு செங்கல்லைக் கூட வைத்துள்ளீர்களா எனக் கேட்கின்றேன்.



 

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை,
    கேட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் கூன் குருடு செவிடாக இருக்கும் வரை.
    றகீபும் அத்தீதும் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்,
    அளந்து பேசுங்கள்.
    வாய்களால் பேச முடியாத நாளை ஞாபகித்துக் கொள்ளுங்கள்.
    அதுவெல்லாம் ஈமான் கொண்டவர்கள் சமாச்சாரம்,
    உங்களுக்கு எங்கே உறைக்கப்போகிறது!

    ReplyDelete
  3. நாங்கள் கழுத்துக்கு மேலே தலைக்கு ஆபத்து என்று திணறுகின்றோம்.
    நீங்கள் தலைக்குத் தொப்பி போடுவது பற்றிப் பேசுகின்றீர்கள்.
    அப்போதுதானே உங்களுக்கு கிரீடம் கிடைக்கும்.

    ReplyDelete
  4. சகோதரர்களே! இவர் சொல்வதில் தப்பு இருந்தால்....என்ன தப்பு என்று கூறுங்கள்....காரணங்களை சுட்டிக் காட்டுங்கள்.....அதை விடுத்து....சும்மா காழ்புணர்ச்சி கொள்ள வேண்டாம்.
    நன்றி..
    அபு மர்வான்
    அக்கரைப்பற்று

    ReplyDelete
  5. Don't worry sir, Hakeem will be bowled out soon.

    ReplyDelete

Powered by Blogger.