Header Ads



ரோஹிங்கியா முஸ்லிம்களை சொந்த நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க இயலவில்லை

மியான்மரின் மேற்கு மாநிலமான ராக்கேனில் வாழும் மக்களால் ரோஹிங்கியா முஸ்லிம்களை சொந்த நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க இயலவில்லை என்று மியான்மர் ராணுவ அரசின் அதிபர் தைன் ஸைன் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய தைன் ஸைன் கூறியது,

 ‘அரசியல் கட்சிகளும், சில தனிநபர்களும், புத்த சாமியார்களும் இன துவேசத்தை பரப்பி வருகின்றனர். நாட்டின் உள்ளேயும், வெளியேயும் வசிக்கும் ராக்கேன் சமூகத்தைச் சார்ந்தவர்களை சந்தித்து அவர்கள் ஆதரவு தேடி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகத்தை ராகேன் பிரிவினர் தீவிரவாதிகளாக மாற்றுவது குறித்து சிந்திக்கின்றார்கள்’ என்று தைன் ஸைன் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ராக்கேன் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் இனப் படுகொலைச் செய்யப்பட்டனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளிநாட்டினர் போல் கருதும் மியான்மர் அரசு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க தொடர்ந்து மறுத்து வருகிறது.

No comments

Powered by Blogger.