இலங்கை படகு பாறையில் மோதியது - நீந்திக் கரையேறிவர்களுக்கு அப்பிள் பழம்..!
இலங்கையிலிருந்து இருந்து சென்ற அகதிகள் படகு ஒன்று அவுஸ்திரேலியா - கொகோஸ் தீவுக்கு அருகே பாறைகளில் சிக்கிக் கொண்டதால், நான்கு அகதிகள் நீந்திக் கரையேறினர். நேற்றுக்காலை 8 மணியளவில் கொகோஸ் தீவில் இருந்து 300 மீற்றர் தொலைவில் கற்பாறைகளுக்கு நடுவே இலங்கை அகதிகள் படகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் 69 அகதிகள் இருந்தனர்.
இதையடுத்து அந்தப் படகில் இருந்த நான்கு ஆண்கள் நீந்திச் சென்று கொகோஸ் தீவில் கரையேறினர்.
இவர்களைப் பார்த்த கொகோஸ் தீவு வாசி ஒருவர், அவர்களுக்கு அப்பிள் பழங்களையும். குடிநீரையும் கொடுத்து உதவியதுடன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து பாறையில் சிக்கியிருந்த படகில் இருந்த 65 பேரும் மீட்கப்பட்டு கொகோஸ் தீவு கரைக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடிப் புறப்பட்டவர்களாவர்.
இவர்கள் அகதிகளாக இருக்க முடியாது. அகதிகள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக கடல்வழியாக பிரயாணம் செய்யபவர்கள்.
ReplyDelete