அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான்
அணுஆயுத திட்டத்தால், ஈரானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்துவைக்கவேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கங்கணம் கட்டி செயல்பட்டு வரும் நிலையில், 120 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று துவங்குகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் ஈரான் சென்றுள்ளனர். ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட மற்றும் பல உலகத் தலைவர்களும் ஈரான் சென்றுள்ளனர்.
ஈரானில் நடைபெறும் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று சர்வதேச நாடுகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம், அமெரிக்காவை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
Post a Comment