நோன்புப் பெருநாள் பட்டாசு கொழுத்தி - நுரைச்சோலை மு.ம.வி. வகுப்பறை தீயில் நாசம்
கல்பிட்டி கோட்டக் கல்விப் பிரிவுக்குட்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிட மொன்று நேற்று முன்தினம் (சனி) இரவு தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளது.
நோன்புப் பெருநாளை வரவேற்று பட்டாசு கொழுத்திக் கொண்டிருந்த சமயம், அப்பட்டாசுகளில் ஒன்று ஓலையினால் வேயப்பட்ட குறித்த வகுப்பறை கட்டிடத்தில் விழுந்ததனால் அவ்வகுப்பறை தீயினால் எரிந்து சேதமடைந்ததாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்பிட்டி பிரதேச சபை தலைவர் எம். எச். எம். மின்ஹாஜ், தீயினால் எரிந்த வகுப்பறைக் கட்டிடம் மற்றும் அங்கிருந்த தளபாடங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் சுமார் 3.5 இலட்சம் ரூபாவாகும். குறித்த கட்டடம் தரம் 4 ம் வகுப்புக்குரியது என்று தெரிவித்தார்
பட்டாசு கொளுத்துவது மார்க்கத்திற்கு முரண் என்னும் பொழுது, பெருநாளை வரவேற்க பட்டாசா? அந்நிய மத கலாச்சாரங்களை பின்பற்றும் நிலை எப்பொழுதுதான் முடிவுக்கு வருமோ?
ReplyDeleteபெருநாளின் பெயரால்,ஏழை முஸ்லிம் சிறார்களின் கல்விக்கு நம்மவர்களே வைத்த ஆப்பு.