மியன்மார் முஸ்லிம்களுக்கு உதவ பங்களாதேஷில் தடை...!
TN
பங்களாதேஷில் இருக்கும் ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகளுக்கு உதவி அளிக்க மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகள் காரணமாக மியன்மாரில் இருந்து எல்லை தாண்டி பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சம் புகுந்த ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவி அளிக்கவே பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளது. இதில் பிரான்ஸின் எல்லை தாண்டிய மருத்துவர்கள், பிரிட்டன் முஸ் லிம் உதவி நிறுவ னம் மற்றும் வறு மைக்கு எதிரான அமைப்பு ஆகிய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கே தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் இருந்து பங்களாதேஷ¤க்கு ஊடுருவ உதவுவதாக கூறியே பங்களாதேஷ் அரசு தடை விதித்துள்ளது.
மியன்மாரில் அண்மையில் இடம்பெற்ற இனக்கலவரத்தில் 80 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரொஹிங்கியா முஸ்லிம்கள் பலர் படகுகளில் பங்களாதேஷில் தஞ்சம் புக முயன்ற போது பங்களாதேஷ் எல்லைப்பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பினர். அத்துடன் மியன்மாரில் இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு பாது காப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டிருந்தது.
உலகில் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மை இனமாக ரொஹிங்கியா முஸ்லிம்களை ஐ. நா. குறிப்பிட்டுள்ளது. பங்காளி மொழி பேசும் இவர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் என மியன்மார் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் கருதுகின்றன.
pothuvaaga maththiya kilakku naadukalil bangaladeshkaarargalai muttalgal enrutha alaippargal. ulagil ulla muslim naadugalil vibachcharathai ankeekariththa ore muttal naadu ithuthan. inthavagaiel avargal ippadi nadappathu athisayamum aachchirayamum illai
ReplyDelete