Header Ads



எல்லைமீறும் பௌத்தர்களின் அராஜகம் - ஆமீன் சொல்லவும் முடியாதா..?

ராஜகிரிய ஒபயசேகரபுரவில் அமைந்துள்ள ஜாமியுத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் ஆமீன் சொல்லவும், இரவு 9.30 மணிக்கு மேலே அங்கு இபாதத்துக்களில் ஈடுபடவும் முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக அப்பள்ளிவாசலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் எமது இணையத்திடம் தெரிவித்தன.

குறித்த பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுகிற போதிலும் அமீன் சொல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், இரவு 9.30 மணிக்கு முன்னர் பள்ளியை விட்டு போய் விட வேண்டுமென்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் எமது இணையத்திடம் வேதனையுடன் சுட்டிக்காட்டின.

இது புளித ரமளான் மாதம் என்றபடியால் பள்ளிவாசல்களில் இரவு நேர அமல்கள் அதிகமாக நடைபெறுவது வழக்கம். இருந்தபோதும் தமக்கு அந்தப்பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது குறித்து பிரதேச முஸ்லிம்கள் வேதனைப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைமைகள் இதுவிடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனவும் பிரதேச முஸ்லிம்கள் சார்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாதம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளவோ அல்லது சட்டரீதியான பாதுகாப்புப் பெறவோ நமது முஸ்லிம் சமூகம் சார்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் இதுபோன்ற துர்ப்பாக்கிய நிலை இன்னும் பல பிரதேசங்களுக்கு பரவிச்செல்லும் ஆபத்து இருப்பதை இங்கு நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

8 comments:

  1. Where are the so called muslim politicians? They need chairs to enjoy but to safeguard their people. SHAME! SHAME! SHAME! Anuradhapura, Dambulla, Kurunegala, Dehiwela, Rajagiriya......next where? All the muslim politicians including Rauf Hakeem are back-boneless. If they have...... they should resign from their posts. Will they do? Atleast the muslim voters should avoid casting votes to show the protest. Never mind of having or not having members in the provincial council. Then only these politicians will wake up and realize the problems what we are facing now.

    ReplyDelete
  2. அன்பர்களே, நான் இங்கு ஒபேசேகரபுரவில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றேன். நீங்கள் குறிப்பிடுவது போல் ஐhமிஉத் தாருல் ஈமான் என்ற ஒரு பள்ளிவாசல் இங்கு இதுவரை கிடையாது. ஆகவே, இந்தப்புணித ரமழான் மாதத்தில் புரளிகளைக் கிளப்பி வீன் பிரச்சினைகளை உருவாக்கவேண்டாம் என்று மிக அன்பாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. naanum rajgiriyavil iruntheyn but obayasekarapura palli theriyathu

    ReplyDelete
  4. அல்லாஹு அக்பர் யார் சொல்லுவது உண்மை ????????????????????

    ReplyDelete
  5. some muslims are not aware of the their mosque it is the way our name board muslims following islam. if you are not going to pray how do you know there is a mosque and how do you know prayer is happening there

    ReplyDelete
  6. Dear Brothers (Thaha Muzammil & Sifri Faheem), as he says there a mosque in Obeysekarapure, Kreedapitiya Mw I guess. It clearly shows our society's lack of awareness. Therefor if you are staying around the Obeysekarapura area please be present to that mosque at lease during this holy month.
    Thank you.

    ReplyDelete
  7. mr.thaha muzamil, are you in obesekera pura over 25 years,????????
    at least come to the place in the holy month so you can find out, you don't think a masjid must have 'doom' to see you.

    ReplyDelete

Powered by Blogger.