Header Ads



'ஹஜ் யாத்திரை' இலங்கையில் கோடீஸ்வரர்களுக்கு மாத்திரம்தான் சாத்தியமா..? (வீடியோ இணைப்பு)

 
ஏ.ஆர்.ஏ.பரீல்
 
மத்ரஸாவுக்கு ஓதுவதற்குச் சென்ற எனது பிள்ளைகள் நால்வரையும் சுனாமி அள்ளிக் கொண்டு போ விட்டது. நானும் மனைவியும் தான் உயிரோடு இருக்கிறோம். பிள்ளைகளுக்காகவும் எமக்காகவும் ஹஜ்ஜுக்குப் போவதற்கு பதிவு செதிருக்கிறேன். இருவருக்குமாக 7 இலட்சம் ரூபாதான் சேமித்து வைத்திருக்கிறேன். எங்களது நியத்து கபூலாகுமா?" என்று வினவினார் சாந்தமருது 12, ஹிஜ்ரா ஒழுங்கையைச் சேர்ந்த 50 வயதான உதுமா லெவ்வை.
 
இவ்வருடம் ஹஜ் பயணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை உள்வாங்கிக் கொண்டிருக்கும் ஹஜ் விண்ணப்பதாரிகளில் ஒருவரான உதுமா லெவ்வையிடம் கருத்து வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ் வருடத்துக்கான ஹஜ் கட்டணம் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ. எச். எம். பௌஸி ஹஜ் பயண கட்டணம் 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவென நிர்ணயித்தார். ஆனால், ஹஜ் முகவர்கள் இக்கட்டணத்தை 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும்படி கோரியிருந்தனர். அமெரிக்க டொலரின் பெறுமதி மற்றும் சவூதி ரியாலின் பெறுமதி அதிகரிப்பும் சவூதியில் தங்குமிட வாடகையின் அதிகரிப்புமே கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
 
இதேவேளை, இவ்வருட ஹஜ் சந்தையில் ஹஜ் பயணக் கட்டணம் சுமார் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் தாண்டி விட்டமை ஹஜ் பயணிகளை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
 
வருடக் கணக்கில் பணத்தைச் சேகரித்து சிரமங்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தம்மைப் பதிவு செது கொண்டவர்கள் பலர் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 
சாந்தமருதுவைச் சேர்ந்த உதுமாலெவ்வை தொடர்ந்தும் தெரிவித்ததாவது, நான் ஒரு மீன் வியாபாரி. எனது நான்கு பிள்ளைகள் சுனாமியில் போ விட்டார்கள். அவர்கள் 14, 9, 5, 3லீ  வயதுடையவர்கள். அவர்களுக்காக ஹஜ் செய வேண்டும் என்று நானும் மனைவியும் உழைத்து சேர்த்த பணம் 7லீ  இலட்சம் ரூபா இருக்கிறது. ஹஜ் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் எனது வீட்டை விற்று விட்டுத்தான் ஹஜ்ஜுக்குப் போக வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் வீட்டை விற்று விட்டு பயணத்தை மேற்கொள்வேன்.
 
இதுவரை நான் எந்த ஹஜ் ஏஜென்டிடமும் போகவில்லை. திணைக்களத்திலிருந்து செதி வரும் வரை காத்திருக்கிறேன் என்றார்.
 
கம்பளையைச் சேர்ந்த ஹஜ் விண்ணப்பதாரி முஹம்மட் ராஸிக் (வயது 58) விடிவெள்ளிக்கு தெரிவித்த கதை கண்கலங்கச் செகிறது.
 
நானும் எனது மனைவி சுஹைதா உம்மாவும் (50 வயது) திணைக்களத்தில் 397, 398 ஆம் பதிவிலக்கங்களின் கீழ் பதிவு செதுள்ளோம். நான் எனது சோத்துக்களை விற்று 8 இலட்சம் ரூபா வைத்துள்ளேன். நான் ஒரு சிறுநீரக நோயாளி. ஒரு வருடம் 8 மாத காலமாக நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். மனைவி ஒரு நீரிழிவு நோயாளி. மவுத்தாவதற்கு முன்பு ஹஜ் செது விட வேண்டும் என்ற நியத்தில் இருக்கிறோம்.
 
சென்ற வருடம் காலியிலுள்ள ஒரு முகவரிடம் பணம் செலுத்தி அவர் எம்மை ஏமாற்றிவிட்டார். பல மாதங்கள் கழிந்த பின்பே பணத்தைத் திருப்பித் தந்தார். ஹஜ் பயண கட்டணம் அதிகரித்தால் எம்மால் ஹஜ் செய முடியாது போ விடும். எங்கள் எதிர்பார்ப்புகள் வீணாகி விடும். அதனால் 4 இலட்சம் ரூபாவுக்குள் பயண ஏற்பாடுகளை செது தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
பேருவளையைச் சேர்ந்த ஹஜ் விண்ணப்பதாரி சட்டத்தரணி ஏ. சி. எம். இஸ்மாயில் கருத்து தெரிவிக்கையில், நானும் எனது மனைவியும் மைத்துனரும் ஹஜ் பயணம் மேற்கொள்ள முறையே 156, 340, 756 ஆம் இலக்கங்களின் கீழ் பதிவு ெ சது கொண்டுள்ளோம்.ஹஜ் பயண முகவர்கள் பலரை நான் அணுகி கட்டண விபரங்களைக் கேட்டேன். அனைத்து முகவர்களும் 5 இலட்சத்துக்கும் அதிகமாகத்தான் கேட்கிறார்கள். ஒரு முகவர் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கேட்கிறார். வேறொருவர் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கேட்கிறார். முகவர்கள் ஒரு பயணியிடமிருந்து ஒரு இலட்சம் அல்லது ஒன்றரை இலட்சம் ரூபாவை இலாபமாக எதிர்பார்க்கிறார்கள். ஹஜ் குழு ஒரு கட்டணத்தை நிர்ணயித்து அந்தக் கட்டண எல்லைக்குள் பயணிகளை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா 2800 பேருக்கே கிடைத்துள்ளது. கோட்டா மேலும் 2000 அதிகரிக்கப்படுமென பல மாதங்களாக தெரிவிக்கப்பட்டு வந்தாலும் அது இதுவரை அதிகரிக்கப்படவில்லை. இந்த ஹஜ் கோட்டா 70 ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
 
மக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இலங்கை ஹஜ்ஜாஜிகள் தங்க வைக்கப்படுவது மிகவும் குறைவாகும். துல்ஹஜ் பிறை 7 முதல் 13 வரை ஹஜ்ஜாஜிகள் மக்காவில் கட்டாயமாக இருக்க வேண்டும். இது மவுசிமுல் ஹஜ் (ஹஜ்ஜுக்குரிய காலம்) எனப்படும். இந்தக் காலத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவததென்றால் 6000 ரியால்களுக்கும் அதிகமாக அறவிடப்படும். இதனால் இலங்கை ஹஜ் முகவர்கள் மக்காவிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள அஸீஸியா எனும் பகுதியிலேயே ஹஜ்ஜாஜிகளைத் தங்க வைப்பார்கள். இங்கு வாடகை மிகவும் குறைவாகும்.
 
ஆனால் இவ்விடம் ஹரம் ஷரீபிலிருந்து மிகவும் தூரத்தில் இருப்பதால் ஹஜ்ஜாஜிகளுக்கு அடிக்கடி ஹரம் ஷெரீபுக்கு தவாப் செவதற்கு வருகை தர முடியாத நிலை ஏற்படுகிறது. ஹஜ் பயணிகள் துல்கஃதா பிறை 15 அளவில் மக்காவில் உம்ரா கடமையை நிறைவேற்றுவார்கள். அங்கு 5 நாட்கள் தங்கியிருப்பார்கள். பின்பு மதீனா சென்று அங்கு 7 நாட்கள் தரித்திருந்து துல்ஹஜ் பிறை 4,5 இல் மீண்டும் மக்காவுக்கு வருவார்கள். மக்காவில் தங்காது இலங்கை ஹஜ் பயணிகள் நேராக அஸீஸியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
 
அவர்கள் பிறை 8 இல் மினா செல்வார்கள். பிறை 9 இல் அரபாவிலும், பிறை 10, 11, 12, 13 களில் மீண்டும் மினாவிலும் இருப்பார்கள். பெருநாள் கழிந்து மீண்டும் அஸீஸியா சென்று தவாபுல் இபாழாவை நிறைவேற்றி விட்டு இலங்கை திரும்புவார்கள். துல்ஹாதா பிறை 15 தொடக்கம் துல்ஹஜ் 29 வரை ஹஜ் காலமாகும்.
 
ஹஜ் முகவர்கள் பின்வரும் கட்டணங்களைச் செலுத்துகின்றனர்.
 
மக்காவில் தங்குமிடம் (ஒரு பயணிக்கு) 1000 - 1500 ரியால்
 
மதீனாவில் தங்குமிடம் (ஒரு பயணிக்கு) 1000 - 1500 ரியால்
 
அஸீஸியாவில் தங்குமிடம் (ஒரு பயணிக்கு) 1000 ரியால்
 
முஅல்லிம் கட்டணம் 1200 ரியால்
 
சவூதி வரி 1019 ரியால்
 
உணவு 1000 ரியால்
 
விமான டிக்கட் (இரு வழி) 1,18,000 ரூபா.
 
மதீனாவில் மர்கஸியா பகுதியிலேயே தங்குமிட வாடகையாக 1000 - 1500 ரியால் செலுத்த வேண்டியுள்ளது. இங்கு சாரா சித்தினில் வாடகை 750 ரியால்கள் மாத்திரமே. இந்த செலவு விபரங்களை நோக்கும் போது ஹஜ் முகவர்கள் ஒரு பயணிடமிருந்து இலாபமாக 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும் 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவுக்கு உட்பட்டதாகவே கட்டணம் அமைய வேண்டும்.
 
இதனுடன் தொடர்புபட்ட இன்னுமொரு விடயத்தையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். மேற்குறிப்பிட்ட தங்குமிட வாடகை விபரங்கள் மக்காவில் ஹரம் ஷரீபுக்கும், மதீனாவில் மஸ்ஜிதுல் நபவிக்கும் அருகிலுள்ள தங்குமிடங்களுக்கான வாடகையாகும். இலங்கையின் பெரும்பாலான முகவர்கள் குறிப்பிட்ட இடங்களிலிருந்தும் தூரத்திலிருக்கும் கட்டிடங்களையே குறைந்த வாடகைக்கு பெற்றுக் கொள்கின்றனர்.
 
ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் மொஹமட் பாரூக்கின் ஹஜ் முகவர் நிலையமான சேப்வே டிரவல்ஸை தொடர்பு கொண்டு வினவிய போது ‘இவ்வருடத்திற்கான ஹஜ் கட்டணம் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா எனவும், மக்காவிலும் மதீனாவிலும் ஹரம் ஷரீபுக்கும் மஸ்ஜிதுல் நபவிக்கும் மிக அருகிலே தங்குமிட வசதிகள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார். தங்குமிட வாடகை அதிகரிப் ப ஹஜ் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
 
குருநாகல் அமீன் டிரவல்ஸ் உரிமையாளர் ஏ. ஐ. எம். ரஸாக்கை தொடர்பு கொண்டு ஹஜ் கட்டணம் தொடர்பான வினவிய போது கட்டணம் எவ்விதத்திலும் 5 இலட்சத்துக்கு குறையாது எனவும் கட்டணத் தொகை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
 
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹஜ் முகவர் நிலையமொன்றினை நடத்தி வரும் அனுபவமிக்க முகவரொருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, ஹஜ் கட்டணம் 4 இலட்சத்து 25 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டால் அது நியாயமானதாகும். ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பௌஸி ஹஜ் முகவர் நியமனத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சில குறைகளையும் தவறுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ஹஜ் விவகாரங்களில் அனுபவம் குறைந்த ஒருவர் முகவர் நியமனத்தில் 5 ஆம் இடத்தில் உள்வாங்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றார்.
 
இதேவேளை மல்வானை ஹஜ், உம்ரா முகவர் நிலையமான அல்கலாம் டிரவல்ஸ் உரிமையாளர் ஏ. ஆர். அப்துல் பஸாத்தை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
 
நான் 21 வருட காலமாக நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கடந்த 6 வருட காலத்துக்குள் 5000 க்கும் அதிகமானோரை உம்ராவுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். ஆனால் நான் இதுவரை ஹஜ் முகவராக நியமிக்கப்படவில்லை. நான் தொடராக முகவர் நியமனம் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்து வருகிறேன். ஹஜ் பயண ஏற்பாடுகள் தொடர்பான அனுபவம் எனக்கிருக்கிறது.
 
நியமனம் வழங்குமாறு ஜனாதிபதி, அமைச்சர் ஹக்கீம், பிரதமர், அமைச்சர் பௌஸி, பணிப்பாளர் நவவி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
 
நான் முகவராக இவ்வருடம் நியமிக்கப்பட்டால் 3 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா கட்டணத்தில் ஹஜ் பயணிகளை என்னால் அழைத்துச் செல்ல முடியும். ஏனைய ஹஜ் முகவர்கள் வழங்கும் வசதிகளை ஹஜ் பயணிகளுக்கு என்னால் வழங்கவும் முடியும். ஒரு பயணியிடமிருந்து 50 ஆயிரம் ரூபா இலாபம் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்.
 
இவ்வருடம் ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரிகள் தமது கனவு நனவாகுமா என்ற எதிர்பார்ப்பில் உறக்கமின்றி காத்துக் கிடக்கின்றனர்.
 
ஹஜ் முகவர் நியமனத்தில் இழுபறி, கட்டண நிர்ணயிப்பில் முகவர்களின் சர்வாதிகாரப் போக்கு, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளருக்கு எதிரான வழக்கு, ஹஜ் குழு தலைமைத்துவத்துக்கான போட்டி என்பன விண்ணப்பதாரிகளை திக்கு முக்காடச் செதுள்ளன.
 
ஹஜ் பயணிகளுக்கு என்றுமில்லாத ஒரு சோதனைக் காலம் இது என்று கூட சோல்லலாம்.
 
இவ்வருடத்துக்கான ஹஜ் குழுவின் தலைவரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு தெரிவித்தார். இவ்வருடத்துக்கான ஹஜ் கட்டணம் 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவென ஹஜ் குழு நிர்ணயித்திருக்கிறது. இந்த கட்டண விபரம் தெரிவு செயப்பட்டுள்ள ஹஜ் முகவர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இக்கட்டணத் தொகையை அதிகரிக்கும் படி ஹஜ் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால், இந்த கட்டணத் தொகை நியாயமானது. இதனை மேலும் அதிகரிக்க முடியாது. ஹஜ் முகவர்கள் விரும்புவது போன்று செயற்பட முடியாது. அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத் தொகைக்கு மேலதிகமாக அறவிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
 
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை ஹஜ் முகவர்கள் சங்கம் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்வி நிறுவன மண்டபத்தில் ஹஜ் கட்டண நிர்ணயம் தொடர்பாக ஒன்றுகூடி கலந்துரையாடியது. சங்கத்தின் தலைவர் எம்.ஆர். மொஹமட் பாரூக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுமார் 40 ஹஜ் முகவர்கள் கலந்து கொண்டனர்.
 
கடந்த வருடத்தை விட இவ்வருடம் ஹஜ் பயண ஏற்பாடுகளின் செலவுகள் அதிகரித்துள்ளமை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. கடந்த வருடம் ஹஜ்ஜுக்கான இரு வழிப் பயண விமானச் சீட்டு ஒரு இலட்சத்து 7 ஆயிரம் ரூபாவாக இருந்தது. இவ்வருடம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்று சவூதி ரியாலின் பெறுமதி 29 ரூபாவாக இருந்தது. இன்று 35 ரூபாவாக அதிகரித்துள்ளது. சவூதியில் தங்குமிட கட்டணங்களும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன என முகவர்கள் தெரிவித்தனர். எனவே, இவ்வருட ஹஜ் கட்டணமாக 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். புராக் டிரவல்ஸ் உரிமையாளரும், முகவர் சங்கத்தின் உதவித் தலைவருமான மௌலவி ஏ.எல்.எம். கலீல் அங்கு உரையாற்றுகையில்,
 
ஹஜ் பயணம் அல்லாஹ்வுக்காக மேற்கொள்ளும் பயணமாகும். ஹஜ் ஏற்பாடுகளை நாம் நினைத்தவாறு செய முடியாது. இப்படித்தான் செய வேண்டும் என்ற நியதி இருக்கிறது. நாம் செயும் ஏற்பாடுகளை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். இது ஒரு புனித பணியாகும். எனவே, நாம் தியாக உணர்வுடன் செயற்பட வேண்டும். நாம் செபவைகள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே, ஹஜ் கட்டண விடயங்களிலும் நாம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
 
கூட்டத்துக்கு ஹஜ் குழுவின் இணைத் தலைவரும், பிரதியமைச்சருமான ஏ.ஆர்.எம்.ஏ. காதர் திடீரென விஜயம் செதார். முகவர்களுடன் கலந்துரையாடினார்.
 
ஹஜ் பயண ஏற்பாடுகளை நேர்மையாக செவது உங்கள் பணியாகும். ஹஜ் கட்டணத்தில் நான் கைவைக்க மாட்டேன். இது உங்கள் தொழில். நீங்கள் அநியாயம் செயக்கூடாது. நியாயமான தொகையை கட்டணமாக அறவிட வேண்டும். பயணிகளுக்கு நல்ல சேவையினை வழங்க வேண்டும் என்றார்.
 
ஹஜ் பயண கட்டண விடயத்தில் ஹஜ் விண்ணப்பதாரிகள் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஹஜ் குழு கட்டணம் 4 இலட்சத்து 25 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கும் நிலையில் ஹஜ் முகவர்கள் சங்கம் 5 இலட்சத்து 25 ஆயிரம் அறவிடப்பட வேண்டும் என கலந்து  பேசியிருக்கிறது.
 
பெரும்பாலான ஹஜ் முகவர்கள் 5 இலட்சத்து 25 ஆயிரம் அறவிட்டிருக்கிறார்கள். சங்கத்தின் தலைவரின் நிறுவனத்தின் ஹஜ் கட்டணம் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகும்.
 
வசதியும் வாப்புமுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகள் முண்டியடித்துக் கொண்டு 5 இலட்சத்துக்கும் அதிகமாக செலுத்தி பயண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
 
ஆனால் வீடு, சோத்துக்களை விற்று ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் சிறுக சிறுக பணத்தைச் சேமித்த ஏழைகள் அவர்களிடம் 4 இலட்சத்திற்கும் குறைவாகவே பணம் இருக்கிறது. மேலதிகமாக ஒன்றரை இலட்சத்துக்கு அவர்கள் எங்கே செல்வார்கள்? இன்று ஹஜ் ஒரு கனவாக மாறிவிட்டதா?4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா கட்டணத்தில் முகவர்களால் சிறப்பான வசதிகளுடன் கூடிய பயண ஒழுங்குகளைச் செய முடியும். இந்தக் கட்டணத் தொகையில் கூட அவர்களால் ஒரு பயணியிடமிருந்து 50 ஆயிரம் ரூபா இலாபமீட்டலாம்.
 
மூன்று இலட்சத்து 80 ஆயிரம் ரூபா அறவிட்டால் கூட 50 ஆயிரம் ரூபா இலாபமீட்டலாம் என்ற கருத்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
மொத்தத்தில் ஹஜ் ஒரு வர்த்தகப் பண்டமாகிவிட்டது. முகவர்கள் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் இலாபமீட்டுவதையே நோக்காகக் கொண்டுள்ளார்கள். மௌலவி கலீல் கூறியது போன்று அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்துவிட்டார்கள். அனைத்தும் அவன் செயல். அநியாயமாக இலாபமீட்டுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

 
 

1 comment:

  1. மக்கஹ்வில்லிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் ஹஜ் ஹாஜிகள் தங்குவது பெரும் சிரமேம் இல்லை. அப்படி குறைந்த செலவில் தாங்கும் இடம் இருக்குமானால்.நாள் தோறும் இலங்கை வானொலியில் முஸ்லிம் நிஹல்சியில் இந்த உலமாக்கள் உயிரே விடுவதக்கு போலே பேசுகிறர்கள் இவர்களே ஹஜ் கட்டணத்தையும் கூடிய விலையில் அறவிடுகிறார்கள்.எப்படியே சென்றால் இன்னும் ஓரிரு வருடத்தில் 10 லட்சமும் தாண்டி விடும்

    ReplyDelete

Powered by Blogger.