முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வெற்றியடையச்செய்ய வேண்டும் - பஷீர் சேகுதாவூத் அறிக்கை
நான் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன் எனது ஏறாவூர் பேச்சை திரிபு படுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர் இது அவர்களின் அரசியல் வங்குரோத்து தனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நான் ஏறாவூரில் பேசிய பேச்சை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு அதை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சி செய்கின்றனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்து தனமாகும்.
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தன அந்த நேரம் எனது சொந்த ஊரான ஏறாவூரை ஒற்றுமைக்கடுத்துவதற்காக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைக்க விரும்பினேன.
அந்த வகையில் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன் அந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.
இந்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கமும் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட இருந்த சூழ் நிலையில் அலிசாஹீர் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.
அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்த போது அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட முன்வந்தாலும் அவர் ஏற்னவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்ட காரணத்தினால் அதை அங்கு ரத்து செய்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலில் களமிறங்க முன் வந்தார் எனினும் இரண்டு கட்சிகளிலும் கையொப்பமிட்டால் சட்டரீதியாக அவரின் பெயர் இல்லாமல் போய் விடும் என்ற காரணத்தினாலும் அவர் அங்கு வெளியே வரமுயாமல் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வருவதற்கு செய்த தியாகங்களையும் அவர் காட்டிய ஆர்வத்தையும் நான் நன்றியுடன் பார்க்கின்றேன்.
இந்த தேர்தலின் பின்னர் அலிசாஹீர் மௌலானாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைப்பதற்கு முயற்சிக்கின்றேன். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏறாவூரில் கேட்கும் வேட்பாளர் நசிர் ஹாபீசுக்கும், வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹீர் மௌலானாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதையே கூறினேனே தவிர வெற்றிலைக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்னு நான கூறவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட போது கதிரைச்சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறியுள்ளேன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட போது யானைச்சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறியுள்ளேன்.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்த சின்னமான மரத்தில் போட்டியிடுகின்றது இதனால் நான் ஏன் வேறு ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறவேண்டும்.
ஏறாவூரில் இரண்டு கட்சிகளிலும் இரண்டு பிரதி நிதித்தவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் ஏறாவூரில் மிக நீண்ட காலமாக எனக்கும் மௌலானாவுக்குமுள்ள அரசியல் முறன்பாட்டையும் இல்லாமல் செய்யும் வகையிலுமே அவ்வாறு பேசினேன்.
இதை சரியாக புரிந்து கொள்ளாத அரசயில் கபடத்தனம் செய்பவர்கள் பிழையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளார் என பசப்பி திரிகின்றனர். அமைச்சர் றிசாத் பதியுதீனும் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனையே பசப்பியுள்ளார்.
எனது பேச்சை இவர்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. அரசியல் தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குரோத்துத்தனம் இவ்வாறானவர்களிடமிருந்து வெளிப்படும் அதுவே இப்போதும் இவர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெற்றியடையச்செய்ய வேண்டும்.
மிகவும் தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக ஈடுபடுவேன் யாருடைய சொந்த நலன்களுக்காகவுமல்ல என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்பகின்றேன்.
மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் இலட்சியப்பாதையில் இந்த கட்சியினூடாக பயணிக்கின்றேன்” என அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
நீங்க மர்ஹும் அஸ்ரபுடன் இணைந்ததே மரம் வளர்ந்து பழம் காய்த பின்னாடி இதுகுள்ள ஏதோ மரத்த உரமூட்டி வளர்க்க உதிரத்த தியாகம் செய்தமாதிறி பீத்திகிறீக? நாங்க நினச்சம் இப்படிதான் அடுத்த உங்க அறிக்கை வரும் என்டு இதெல்லாம் 1990 முட்பட்ட கால அரசியல் உங்க அறிகை வரும் முன்னறே மக்கள் இரு நாளா அவறு இப்படி அறிக்க விட்டு மறுப்பாறு என ஏக்கனவே பேசி விவாதித்து விஷயத்த மூலைல ஒதுக்கியும் போட்டாங்க
ReplyDeleteபேசுரதையும் பேசிபோட்டு அடுத்த அரசியல் வாதிகள குறை சொன்னா எப்படி?
வெறும் 12,000 வாக்கு வங்கி உள்ள அலிசாஹிர் மௌலானா 43,000 திரளான வாக்கு வங்கி உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் விஞ்சி வெல்ல முடியுமா என்ன? அல்லது 16,000 வாக்கு வங்கி உள்ள பிள்ளையன் தரப்பை விஞ்ச முடியுமா என்ன? ஆளும் கட்சியின் முதல் மூன்று ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரசிட்குறியது அடுத்த ஒன்ரோ,இரண்டோ,மூன்றோ தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்குறியது ஏழாவது ஆசனத்தையும் ஆளும் கட்சி பெற்றாலே அலிசாஹிர் மௌலானா வெல்ல முடியும்
பாவம் நகரசபையின் தலைவராக இருந்தவரை முதல் மந்திரி ஆசைகாட்டி மோசம் செய்து அவர் முதலுக்கே ஆப்பு வைத்துவிட்டு இப்ப உங்க கழுதறுப்ப அவர் கண்டுகொள்ளாம இருக்க இன்னோர் கட்சியில இருந்துகொண்டு சம்மந்தம் இல்லாத மாற்று கட்சி காரர்களிடம் அவறுக்கு வக்காலத்து வாங்குவதுமாதிரி 3 மணினேரம் மக்கள்முன்னே பேசி உங்க இமேஜ அலிசாஹிர் மௌலானாகிட்ட தக்கவைக்க பாடு படுறிகளே இது தகுமா? அல்லது அவர் என்ன மர மண்டையா உங்க சூழ்ச்சி,சூது,வாதெல்லாம் விளங்காம இருக்க
எப்பேட்பட்ட பிரபாகர கொலைகாரனையே எதிர்து காரியம் முடித்தவர் உங்க சூழ்ச்சிய உங்களுக்கே திருப்பிவிட ரொம்ப நேரம் புடிக்குமா அவறுக்கு???
அட புதுஸா இருக்கு அகில இலன்கை முஸ்லிம் கொன்க்ரெஸ்ஸ் 43000 வாக்குக
ReplyDeleteகட்சிகளுக்காக சமூகங்களல்ல .....சமூகங்களுக்கத்தான் கட்சி ........எனவே முஸ்லிம் சமூகத்தின் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டி சமூகத்தை ஒற்றுமை படுத்தி கட்சி வேறுபாடுகளின்றி முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற பிரதி அமைச்சர் பசீர் சேகு தாவூத் இன் கருத்து வரவேற்கத்தக்கது .......
ReplyDeleteஆசரியமா இருந்தா கொஞ்சம் கடந்த பொது தேர்தல் முடிவை பாறுங்க ஆளும் கட்சி பெற்ற 60,000 வாக்குகளில் 12,000 அலிசாஹிர் மௌலானவுடையது,5,000 ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நிரந்தர வாக்கு வங்கி மிகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடையது என்பது விளங்கும் ஆனா உங்க ஆச்சரியத்த பாத்தா அது சுனங்கும் உங்களுக்கு தேர்தல் முடிவுவரை
ReplyDeleteFashlin Mohamed நீங்க ஜோக்கு ஏதாவது பண்ணுரிங்களா?
ReplyDeleteஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்கு 43000 ??????????
ஹி!!!!!!!!ஹி!!!!!!!!ஹி!!!!!!!!ஹி!!!!!!!!தாங்க முடியல்ல
செப்டம்பர் எட்டுக்கு பிறகும் நீங்க கருத்துக்கள் தெரிவிக்க மாட்டீர்கள் தானே 43000 வாக்குகள் வெத்திலைக்கு வழங்கும் அளவுக்கு உலகம் அறியாதவர்கள் மட்டக்களப்பில் இருக்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடிய வில்லை.
Fashlin Mohamed உங்கட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து கேட்டு இருந்தால் சிலநேரம் சாத்தியப்பட்டிருக்கும் ஆனால் இப்போ இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்களின் மத உணர்வை ஆட்டிப்பார்க்கும் வெத்திலை கட்சிக்கு தயவு செய்து வாக்களிக்க கேட்க வேண்டாம் Fashlin Mohamed வெத்திலை கட்சிக்கு எதிராக எந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை
Yoosuf Islaam மடத்தனமாக பேசாதீர்கள் மட்டகளப்பில் நிலவரம் இதுதான் அங்கே ஆளும் கட்சி எதிர் கட்சி என்ரெல்லாம் பார்பதில்லை அங்கே பிரதானமாக மூன்று ஊர்கள் இருகின்றன அந்த ஊறில் பெரும்பான்மையான அரசியல் அபிமானம் யாருக்கு உள்ளதோ அவர்களுக்கே மக்கள் செல்வாக்கு உண்டு தேர்தல் முடிந்ததும் தேர்தல் முடிவைபார்த்து எங்கே போய் மூஞ்சை வைதுகொள்வதாக உதேசம் வடகிழக்கு நிலைமை குறித்து தென் இலங்கையில் எப்படி புறிதல் இல்லையோ தென் இலங்கையில் நடப்பது குறித்தும் வட கிழக்கு இலங்கையில் புறிதல் இருக்காது தென் இலங்கையில் அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு வடகிழக்கில் நடந்த அகோரங்களுடன் ஒப்பிட்டால் எங்கேயாவது ஒரு மஸ்ஜித் உடைதெறியபட்டிருக்கிறதா? தென் இலங்கையில்? வடகிழக்கில் 200 மஸ்ஜிதுகள் உடைக்கபட்டிருக்கின்றன நடக்கும் நிகழ்வுகளுக்கு பொறுப்பு அடுத்தவர்கள் மாத்திரம் அல்ல நாமும் உரிய முறையில் எதனையும் செய்யாமல் இருப்பதுமே காரணம் உங்கள் பிரச்சினைகி இதுவரை சட்டபடி என்னநடவடிக்கை எடுதிருக்கிறீர்கள் யூஸுப் இஸ்லாம்???
ReplyDeleteகுட்ட குட்ட குணிந்து கொண்டிருக்காமல் மஸ்ஜிதுகள் தொடர்பில் குலப்பம் விளைவிட்போறுகெதிராக தகுந்த நடவடிக்கை எடுங்கள் அடங்குவார்கள் போலிஸையும் நாடாமல் சட்டதையும் நாடாமல் மனித உரிமை அமைப்புகளையும் நாடாமல் ஊடகங்கள்,சர்வதேச அமைப்புகள், தூதர்ங்கள் என்று போய் முறையிடாமல் இப்படி பேசி கொண்டிருந்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்திடுமா?
றிசாத் பதியுதீன் காத்தான்குடியில் 79 பள்ளிவாயல் உடைக்கப்பட்டது என்று சொன்னாரே..ம்ம்ம்ம்ம்ம் ஒருவேளை அவருக்கு மறந்திருக்கலாம் Fashlin Mohamed 200 பள்ளிவாயல் உடைக்கப்பட்டதை சொல்லிக்கொடுங்கள்....
ReplyDeleteஎன்னா சார், நீங்கள் சொல்லுவது உங்களுக்கே புரிகிறதா...????? மரம்... வெத்திலை......வெத்திலை.... மரம் !!!!! ஏறாவூர் மக்கள் என்ன மடையர்களா??? கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடும் ஏறப்பிலன் ஓட்டும் என்பானாம்...??? இதுவரை நீர் அறிவுரீதியகவோ.. அல்லது மார்க்கரீதியகவோ...கதைத்ததோ.. நடந்ததோ கிடையாது. நீர் ஒரு கிணற்று தவளை... மக்களே இந்த ஏமாற்று காரனுக்கு சரியான பாடம் படிப்பிக்க ஹாபிஸ் நசீரை ஆதரிக்க வேண்டும்.. அல்லாஹு அக்பர்..
ReplyDeleteஅதுயிருக்கட்டும் இந்த செய்தியை ஏன்ஐயா மரண அறிவித்தல் பகுதியில் போட்டுக் கொண்டு ஆளக்கு ஆள் அறுக்கிரிங்க
ReplyDelete