Header Ads



'முதலமைச்சர்' பதவி என்பது பஷீர் சேகுதாவூதின் கனவு..!


(அல்மசூறா – ஏறாவூர் இஸ்லாமிய சிந்தனை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் என்ற பெயரில் எமது இணையத்திற்கு வந்த ஈமெயில் ஒன்றை இங்கு பதிவிடுகிறோம்)
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இற்றை வரைக்கும் சி.ல.மு.காங்கிரஸுக்குள் பலதரப்பட்ட முடிவுறாத உட்பூசல்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டே வருகிறது. கட்சிப் பிரமுகர்கள் எவ்வாறுதான் இதை மூடி மறைக்க முற்பட்டாலும் அவ்வப்போது அதன் தாக்கம் ஆங்காங்கே வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை காண முடிகிறது.

அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட இழுபறி இன்னும் தொடர்கிறது. முதன்மை வேட்பாளராக ஹாபிஸ் நஸிர் அஹமட் அவர்களை நியமித்ததில் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மற்றும் தலைவர் றஊப்ஹக்கீம் ஆகியோருக்கிடையே பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகளும் இழுபறிகளும் தொடர்கிறது.

இதனால் எல்லா கட்சிகளும் தங்களது பிரச்சரா வேலைகளை மும்முரமாக முடுக்கி விட்டிருந்த போதிலும் கடந்த வாரம் முதல்தான் சி.ல.மு.காங்கிரஸின் பிரச்சரா வேலைகள் ஏறாவூரில் ஆமை வேகத்தில் ஆரம்பமாகியது. இதற்கான காரணம் பசீர் சேகுதாவுதின் குழுவினருக்கும் ஹாபிஸ் நஸீர் அஹமட் குழுவினர்களுக்குமிடையே ஒரு சுமுகமான நிலையினை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட கால தாமதமாகும்.

பசீர் சேகுதாவூத் ரகசியமாக அரசுக்கு அல்லது அலிஸாஹிர் மௌலானாவின் வெற்றிக்கு சைகை செய்கிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கடந்த வாரங்களில் வெளியாகி இருந்தது. சுஹதாக்கள் தின நிகழ்வொன்றிலும் அலிஸாஹிர் மௌலானாவுடன் பசீர் கலந்து கொண்டிருந்தார். இவ்வாறான குற்றச்சாட்டுகளை மறுத்து தனது நிலைப்பட்டை தெளிவு படத்துவதற்காக அவர் பெரிதும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. அதன் பின்னர் சி.ல.மு.காங்கிரஸின் மேடைகளிலும் கலந்து கொண்டிருந்தார்

இதற்கிடையே பசீர்சேகுதாவுதுடன் இரண்டறக் கலந்திந்த குழுவினரில் ஒரு பகுதியினர் தற்போது அணிபிரிந்து அவருக்கெதிரான கருத்துக்களை மிகவும் பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர். இது தவிர கடந்த நகரசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று ஏறாவூர் நகரசபை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அக்கீல் அர்ஷாட் என்பவரும் சி.ல.மு.காங்கிரஸின் பிரச்சாரா நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் முற்றாக விலகியிருக்கின்றார். அவருக்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றையும் பசீர் சேகுதாவூத் அவர்களிடம் கையளித்து விட்டார். தற்போது அவரும் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய கிடைக்கிறது. காரணம் இவரது பெயரை மாகாணசபை வேட்பாளர் பட்டியலில் சேர்ப்பதாக உறுதியளித்து பின்னர் பசீர் ஏமாற்றி விட்டார் என்பதனாலாகும்.

இந்நிலையில்தான் பசீர் சேசகுதாவூத் அவர்கள் நாளை மாலை 20.08.2012 அன்று ஏறாவூர் புன்னக்குடா வீதியில் 'பசீர் பேசுகிறார்' மக்களே நீதிபதிகள். வாருங்கள் தீர்ப்புச் சொல்லுங்கள் எனும் தொனிப்பொருளில் பேச உள்ளார். இக்கூட்டத்தில் எந்தவொரு வேட்பாளரோ, பேச்சாளர்களோ கலந்து கொள்ளவோ பிரச்சார துண்டுப் பிரயோகங்கள் வநியோகிக்கவோ முடியாதென கண்டிப்பான உத்தரவும் போட்டுள்ளார்.

இது எதற்கான பொதுக்கூட்டம். அவர் என்ன அறிவிக்கப் போகிறார் என முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குழம்பிப் போயுள்ளனர்.

தலைவர் றஊப்ஹக்கிம்  அரசுக்கு எதிராக காரசாரமான பிரச்சாரங்களை கிழக்கில் மேற்கொண்டு வரும் இந்நிலையில் அரசுக்கு மிக நெருக்கமாகவுள்ள பசீர்சேகுதாவூத் என்ன முடிவெடுக்கப் போகின்றார் அல்லது முதன்மை வேட்பாளராக களத்தில் இறங்கியிருக்கம் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஒருவேளை வெற்றி பெற்று விட்டால் அவருக்கே முதலமைச்சர் பதவி வழங்க வேண்டிவரும் என்பதில் தனக்குள்ள கருத்து முரண்பாடுகளின் காரணமாகவா இக்கூட்டம் அவசரமக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் 'முதலமைச்சர் ' பதவி என்பது பசீர் சேகுதாவூதின் பன்னெடுங்கால கனவாகும். கடந்த தேர்தலிலும் இதனை குறிவைத்தே அவர் போட்டியிட்டு கி.மா.சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

எது எப்படியோ சுயநலமில்லாத ஒரு முடிவை எடுப்பது முஸ்லிம் காங்கிரசுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆரோக்கியமானது என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்புமாகும்.

அல்மசூறா – ஏறாவூர்
(இஸ்லாமிய சிந்தனை மற்றம் அபிவிருத்திக்கான நிலையம்)

3 comments:

  1. மற்றவர்கள் மக்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் கொப்பு மாறினார்,இவர் மக்களிடம் சொல்லிவிட்டு மாரப்போகின்றார் போல்....
    மக்கள் நீதிமன்றம் என்று சொல்லிவிட்டு அவர்மட்டுமே பேசப்போகின்றார்,மற்றவர்கள் மக்களை மறைவாக முட்டாள்கள் என்று சொல்லிவிட்டு கொப்பு பாய்ந்தனர் இவர் கொஞ்சம் தைரியசாலி அல்லவா?.....மக்களை நேரடியாகவே முட்டாள்கள் என்று சொல்லிவிட்டு போகப்போகின்றார் போல்....

    மக்கள் நீதிமன்றத்தில் மக்கள் தீர்ப்பு என்ன என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள முயட்சிசெய்யுங்கள் பஷீர் சேகுதாவூத் அவர்களே...

    ReplyDelete
  2. BEFORE NEXT BUDGET BASHEER SEGUDAWOOD IS THE CABINET MINISTER HAKEEM WILL REMOVE FROM THE CABINET BECAUSE HAKEEM BLAMING THE GOVERNMENT WE WILL WAIT AND SEE.

    ReplyDelete
  3. BEFORE NEXT BUDGET BASHEER SEGUDAWOOD IS THE CABINET MINISTER HAKEEM WILL REMOVE FROM THE CABINET BECAUSE HAKEEM BLAMING THE GOVERNMENT WE WILL WAIT AND SEE.

    ReplyDelete

Powered by Blogger.