வியட்நாமில் வாயில் இனப்பெருக்க உறுப்புடன் புதிய மீன் கண்டுபிடிப்பு
தற்போது புதிய இன மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் ஆண் மீன்களுக்கு வாயின் தாடை பகுதியில் இனப்பெருக்க உறுப்பு அமைந்துள்ளது. அது 2 சென்டி மீட்டர் நீளம் உடையது. வியட்நாம் மெகாங் டெல்டா பகுதியில் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய பரியபியம் இனத்தை சேர்ந்தது. இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன. பரியபியம் வகை மீன்களின் புது இனங்கள் கடந்த 2009-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மீன் பரியபியத்தின் 22-வது ரகமாகும். வியட்நாமில் மெகாங் ஆற்றின் கால்வாயில் வீசிய வலையில் இந்த வகை மீன் சிக்கியது.
Post a Comment