Header Ads



இந்தியா உயர்மட்டக்குழு இலங்கை வந்தது - அமைச்சர் றிசாத் வரவேற்றார் (படங்கள்)

இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய உற்பத்திகளை கொண்ட கண்காட்சி ஆரம்ப விழாவில் கலந்து கொள்ளும் வகையில் இந்திய மத்திய அரசின் கைத்தொழில்,வணிகம்,மற்றும் நெசவுத் துறை அமைச்சர் ஆனந் சர்மா உள்ளிட்ட முக்கிய இந்திய வர்த்தக பிரதி நிதிகள் அடங்கிய குழுவினர் இலங்கை நேரப்படி இன்று(2012.08.02) இரவு 8.45 மணியளவில் இலங்கை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இலங்கையின் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் விமான நிலையத்தில் வைத்து அவர்களை வரவேற்றார்.

இம்மாதம் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள இந்திய கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் ஆனந் சர்மா தலைமையில் இந்தியாவின் மிக முக்கிய 15 நிறுவனங்களின் பிரதி  நிதிகளும் இதன்போது வருதைதந்துள்ளனர்.

எயாடல் தொலைதொடர்பு நிறுவனத்தின் பிரதான அமைப்பான பாரதி என்டபிரைஸஸ்,இஅசோக் லேலன்ட்,தாஜ் குழுமம்,இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம்,டிவீஎஸ். மோட்டர்ஸ் நிறுவனங்களின் முக்கிய பிரதிகள் இதில் உள்ளடங்கியுள்ளனர்.

இலங்கையில் தங்கியிருக்கும் சில தினங்களில் இலங்கை –இந்திய வர்த்தக மேபாடுகள் குறித்து ,இரு தரப்பு உயர் கலந்துரையாடல்களிலும் இக்குழுவினர் ஈடுபடவுள்ளனர்.இலங்கை ஜோன் கீள்ஸ் நிறுவனம்,டெல்மா தேயிலை நிறுவனம்,வடவல பிளான்டைன் நிறுவனம்,இலங்கை வங்கி,லாப் ஹோல்டின்,சீ.ஜ.சீ.குறுப்,சிலோன் பிஸ்கட்,நிறுவனங்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதான 5 முதலீட்டு நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்குவதாகவும்,2011 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியா 600 மில்லியன் டொலர் முதலீடுகளை செய்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை(2012.08.03) இந்திய மத்திய அமைச்சர் தலைமையிலான வர்த்தக குழுவினர் அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே கான்தா,அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தனவும் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.






No comments

Powered by Blogger.