Header Ads



'முஸ்லிம்கள் குடியேறிய பின்னரே இந்நிலை' - பள்ளிக்கு வந்து ஒரு பௌத்தர் முறைப்பாடு

மொஹமட் ஹபீஸ்

கண்டி மாவட்டத்திலுள்ள ஒரு பிரபல முஸ்லிம் கிராமத்தில் ரமலான் மாதம் ஆரம்பப் பகுதியில் நடந்த ஒரு சிறு சம்பவத்தைப் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பிணைக்காக இங்கு தருகிறோம்.

மேற்படி கிராமம் கூட்டாக ஸகாத் வழங்குகின்ற ஒரு கிராமமாகும். ஒரு இஸ்லாமிய முன்மாதிரிக் கிராமத்தை நோக்கி தயாராகி வரும் ஒரு கிராமம். இதன் காரணமாக ஸகாத் பணத்தை வசூலித்து ஒரு காணியை கொள்வனவு செய்து ஸகாத் பெறத் தகுதி யுடையோர்கள் பலரைத் தெரிவு செய்து அங்கு குடியேற்றினார்கள். அது ஒரு சிங்கள எல்லைக் கிராமமாகும்.

இப்பணியில் எதுவித குறையுமில்லை. இது போல் இன்னொறு இடத்திலும் குடியேற்றி உள்ளார்கள். இது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் ரமலான் ஒரு சிறிய பள்ளியையும் அமைத்துக் கொடுத்தார்கள். ஆங்காங்கே பௌத்த மக்களது காணிகள் குடியிருப்புக்களும் உண்டு. ஆனால் இந்த பௌத்த மக்கள் பூர்வீகமாக முஸ்லிம்களுடன் உண்மையிலே சகோதரர்களாகவும் அண்யோன்யமாகவும் வாழ்பவர்கள். தங்கள் குலப் பெண்களையே இலங்கையின் ஆரம்பகால முஸ்லீம்கள் திருமணம் செய்து கொண்டதாக அவர்களே பெருமையாகக் கூறிக் கொள்வர். இவர்கள் பொற்கொள்ளர் பரம்பரையினர். வேறு வகையில் கூறுவதாயின் மச்சான் உறவுக்காரர்களாக உள்ளனர்.

அதேநேரம் இங்குள்ள பௌத்த விகாரையின் பிரதம மதகுரு அடிக்கடி இந்த முஸ்லிம் கிராமத்தில் பிரச்சினைகளை வம்பிற்கு இழுப்பதில் அவர் சமர்த்தர். இதனை அறிந்த முஸ்லிம் தலைவர்கள் அவரை நண்பராக்கி மிகவும் கௌரவமாகவும் நடத்தி வந்தாலும் அவ்வப்போது அவர் நடத்தை ஆங்காங்கே வெளிப்பட்டு விடும். இது ஒரு நீண்டகாலப் பிரச்சினை.

கதை இப்படி இருக்க இக்குடியேற்றத்தில் வசிக்கும் ஒரு வாலிபர் கூட்டம் புனித ரமலான் தினத்தில், தத்தமது வீடுகளுக்குத் தெரிய நோன்பு நோற்றவர்களாக பௌத்தர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் உற்பிரவேசித்து அங்கு ஒரு கொட்டிலையும் அமைத்து சமுக விரோத செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

அத்தோட்டத்தில் புதிதாக தென்னங்கன்றுகள் நடப்பட்டிருந்தன. அவற்றின் முளைகள் கூடப் பிரயாத கட்டத்தில் இருந்தன. போதாக்குறைக்கு அத்தோட்டத்தில் நடப்பட்டடிருந்த விளை உயர்ந்த தென்னங் கன்றுகளைக் கலற்றி அவற்றின் முளையை நோன்பாளிகள் எனக்கூறும் இவர்கள் சாப்பிட்டு நாசம் செய்திருந்தனர்.

தோட்ட உரிமையாளன் இவ்விடயத்தை மேலே சுட்டிக்காட்டிய பௌத்த மத குருவிடம் முறையிட்டிருப்பின் நாட்டில் இன்னொறு இனக்கலவரத்திற்கு தூபமிட இச்சம்பவம் போதுமானது. இருப்பினும் அந்த பௌத்தமனிதர் நல்லவர். இறைவன் அவருக்கு நல்ல ஞானத்தைக் கொடுத்தான் என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அவர் கடந்த வெள்ளிக் கிழமை குறிப்பிட் முஸ்லிம் கிராமத்தின் பள்ளிவாயலுக்கு சமுக மளித்து நாங்கள் இதுகால வரை நிம்மதியான விவசாயம் செய்து வாழ்ந்து வந்தோம்.  எப்போது நீங்கள் முஸ்லீம்களைக் குடியமர்த்தினீர்களோ அன்று முதல் எமக்குப் பிச்சினை.... இப்படி நீண்டகதையைக் கூறி அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல முஸ்லிம்கள் தலைகுணிய வேண்டிய நிலையில் விமரிசனம் இருந்தது.

நல்லவேளை அதிகாரம் படைத்த கட்டுக்கோப்புள்ள ஒரு பள்ளித் தலைமை இருந்ததன் காரணமாக சமபந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து குறிப்பிட்ட நபருக்கு நட்ட ஈட பெற்றுத் தருவதாகவும் இணக்கம் காணப்பட்டதன் விளைவாக மற்றொரு பிரச்சினை தலை தூக்காது தடுக்கப்பட்டது.

இங்கு நாம் சிந்திக்கவேண்டிய விடயம் என்னவெனில் புனித ரமலானில் இப்படி ஒரு கேடுகெட்ட விடயத்தை ஏன் எமது முஸ்லிமகளில் ஓரிருவர் செய்ய வேண்டும். இது பூதாகரமாகி வெடித்தால் எமது தலைவர்கள் எப்படி தலை நிமிர்ந்து இதனைக் கையாள்வது?

இது அன்னோன்ய சிங்கள - முஸ்லிம் உறவிற்கு பாதகத்தை ஏற்படுத்தாதா?

இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் நடந்து கொண்டிருப்பது என்ன? அன்றைய நாடுகளான மியன்மார், இந்தியா (அசாம் மாகாணம்) போன்ற இடங்களில் நடப்பது இவர்களுக்குத் தெரியாதா?

அல்லது இலங்கை முஸ்லிம்களைக் குறிவைத்துள்ள தீய சக்திகளுக்கு இது தூபமிடக் கூடுமா..?

தம்புல்லை, குருநாகல், அனுராதபுரம், தெஹிவலை, இராஜகிரிய என்ற நீண்ட பட்டியலில் இச்சிறிய பள்ளியையும் அது சேர்க்கக் காரணமாகி விடாதா?  எனச் சிந்தியுங்கள்.

தனிநபர் ஒருவர் தவறு செய்வதில் எமக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நாம் வாழும் சமூகம் என்பதனால் அது எம்மையும் பாதிக்கும். மறுதலையாக 'முஸ்லிம்களைக் குடியேற்றி பின்னர்தான் இந்நிலை' என்ற வசனம் மிகவும் வருந்தத் தக்கது. இதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.

சமூகமே ஏன் சிந்திப்பதில்லை...???

3 comments:

  1. antha madayarhalai kollungal or islamiya sariya thandanai kodungal awarhalukku oru kaal maru kai wettinal ethu ponra sambawam pinbu nadakathu allah pothumanawan.

    ReplyDelete
  2. நல்லது கூறினீர் சகோதரரே...!

    ReplyDelete
  3. இப்படி பட்ட நம் சமூக இலஞ்சர்களை பலபேர் பார்பத்திருக்க இஸ்லாத்திற்கு விரோதமான முறையில் தென்னம் விதைகளை திருடி தின்ற குற்றத்திற்காக கையை வெட்ட வேண்டும் அதற்க்கு நம் நாட்டு சட்டம் இடம்கொடுக்கவிட்டால் கசை அடியாவது கொடுத்திருக்க வேண்டும்.
    இவர்களை போன்றோரால்தான் பெரும்பான்மை சமூகத்தில் நமக்கு கெட்ட பெயர்.

    ReplyDelete

Powered by Blogger.