Header Ads



முஸ்லீம் காங்கிரஸூக்கு வாக்களிப்பது சமுகத்தின் குரல்வளையை அறுப்பதற்கான கூரிய கத்தி

 
ஹப்றத்
 
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லீம்கள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸூக்கு அளிக்கின்ற ஒவ்வெரு வாக்கும் முஸ்லீம் சமுகத்தின் குரல்வளையை அறுப்பதற்கு வைக்கின்ற கூரிய கத்தி என்பதை நினைத்துச் செயற்பட வேண்டும் தன்மானமுள்ளதொரு முஸ்லீமால் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸூக்கு இத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷhட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுகின்ற தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்ட முக்கியஸ்த்தர்களை பாராட்டிக் கொளரவிக்கும் நிகழ்வும் நேற்று (22) அட்டளைச்சேனை பிரதான வீதியில் ஆசுகவி அன்புடீன் தலைமையில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனது சமுகத்தைப் பற்றி சிந்திக்காது தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கையும் தனது வருமானத்தையும் உயர்த்திக் கொள்வதற்காக அன்னிய சக்திகளின் அடிவருடியாக மாறி கட்சியை அடகு வைத்து கபட நாடகமாடி வருகின்றார்.

கடந்த மூன்று தசாப்தகாலமாக இங்குள்ள மக்கள் பட்ட துன்பங்களும் வேதனைகளினதும் வடுக்கள் இன்னும் முழுமையாக மாறாமல் அந்த இழப்பிலிருந்து விடுபடாமல் இருக்கின்ற நிலையில் இந்த சமுகத்தை  மீண்டும் அடகுவைத்து பலிக்கிடாக்கள் ஆக்க திட்டமிட்டுள்ளார்.

சிறிலங்கா கட்சியின் அமைப்பாளரான நான் இந்த சமுகத்தின் உயற்சிக்காகவும் எழுச்சிக்காகவும், தேசிய காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரிக்க முடிவு செய்துள்ளேன. இது என்னுடைய சமூகத்துக்காக செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு என்பதை உணர்ந்து இந்த முடிவை நானும் என்னுடைய ஆதரவாளர்களும் முடிவு செய்துள்ளோம்.

இதனை அடைந்து கொள்வதற்காக எனது சகோதரர் எம்.எல்.ஏ. அமீர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அவரோடு இணைந்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் தேர்தல் வியூகத்தினால் கவரப்பட்டு சம்மாந்துறை சமூகம் ஒட்டு மொத்தமாக ஒன்றிணைந்து ஒரு புதிய யுகம் படைக்க அணிதிரண்டுள்ளனர். அதே போன்று இந்த அட்டாளைச்சேனை மண்ணுக்கு தலமைத்துவம் வழங்கிய உதுமாலெப்பையை  கடந்த மாகாண சபைத் தேர்தலிலே உங்களது சொற்ப வாக்குகளால் வெற்றி பெறச் செய்து முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் அபிவிருத்தியை அறிமுகப்படுத்திய உதாரண புருஷராக செயற்பட்டார். அவரை நாம் மீண்டும் அட்டாளைச்சேனை மக்களின்  அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறச்செய்வதோடு அவரோடு இணைந்து எம்சமூகத்திற்கு பணியாற்றி எம்.எல்.ஏ. அமீர் ( ரீஏ ) அவர்களையும் மற்றும் இளம் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனையும் நாம் வெற்றியடையச் செய்து எதிர்வருகின்ற காலங்களில் எம்சமூகத்திற்கு ஏற்பட இருக்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தலைவர்களாக நாம் உருவாக்க வேண்டும்.

 
 

10 comments:

  1. ஆஹா... உங்களுக்கும் போர்த்தியாச்சா!
    இனி தொடர்த்தும் பொத்திக் கொண்டும் போர்த்திக் கொண்டும் இருக்க வேண்டியதுதான்.
    ”வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி”

    மு.கா.வுக்கு வாக்களிப்பது ”கழுத்தில் கத்தி”. சரி, உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லுங்களேன்.

    ReplyDelete
  2. இவர் பாராளுமன்ற கதிரையை தொட்டுப்பார்த்தது முஸ்லிம் காங்கிரஸின் மூலம் என்பதை மறந்துவிட்டார் போலும்.

    ReplyDelete
  3. நௌசாத் உங்களைப்போன்ற பச்சோந்தி ஒருவரை சம்மாந்துறை மண் பெற்றதற்கு கவலைப்படுகின்றது.சம்மாந்துறையை செதுக்கிய மஜீதுக்காக அவரது மருமகன் என்பதற்காக மந்தைகளைப்போல் இந்த மக்கள் உங்களது பின்னால் நீங்கள் போடும் வேஷங்களுக்கு எல்லாம் ஆடினார்.
    இதன் பயன் மற்றைய ஊரவர்கள் குறிப்பிடுவதற்கு ஒப்ப மாட்டூ ஊரான் ஆக்கி நமது ஊருக்கான பிரதிநிதித்துவத்தை கேடுத்து வருகிறீர்கள்
    அதாவுல்லாவின் வியுகம் சம்மாந்துறை மற்றும் அம்பாறை மாவட்ட நிலவரம் மக்கள் மத்தியில் பள்ளிகளை உடைக்கும் விடயத்தில் அரசு வாய் மூடி இருக்கும் விடயத்தில் உள்ள அதிருப்தி எல்லாவற்றையும் கூட்டி பெருக்கி பார்க்கும் போது அமீருக்கு வாய்ப்பே இல்லை

    தயவு செய்து நமது ஊருக்கு கிடைக்க இருக்கும் பிரதி நிதித்துவத்தை உங்களது கொடூர பொறாமையால் தடுத்து விடாதீர்கள்

    ReplyDelete
  4. ARASIYALLE ITHUVELLAAM SAKAJAMBPAA

    ReplyDelete
  5. முட்டாள்களின் பேச்சுக்கு ஒப்பானதுஇ படிச்சவன்ட பேச்சு மாதிரி தர்க்க ரீதியிலான பேச்சாக விளங்கவில்லை

    ReplyDelete
  6. Dear Hawwa Aadam, Naushar sir is not contesting in this election. So don't make comments on what you have no idea at all.

    ReplyDelete
  7. Dear Ikram Brother , MR.Hawwa Aadam said not about contest. he said MR.Nowshad sit or touch chair in Parliament through SLMC. Basically he is not a SLMC Member. he come to achieve his target what he cant get in his life also witch is cant provide his Uncle BA.Majeed. Now What he is telling???? What he is doing / telling is that we cant accept he is a Muslim. NAYAVANJAHAN, MUNAAFEEQ Not only Nawshrd many many of name shaik Muslim Name Holder is there among our Muslim

    ReplyDelete
  8. கருதாளர்களின் கருத்துகளைபார்தால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அல்லாதோர் எல்லாம் முட்டால்களாக தோன்றுகிறதாக்கும் மக்களிடமே இவ்வளவு குறுகிய மனபாங்கெனில் அந்த கட்சி ஆட்சி அமைதால் எதிர்கட்சிகளின் நிலமை ஹிட்லர் கால நிலமையையும் விஞ்சுமோ அடுத்தவரை ஏசி கருத்தெழுதுவதால் நம்மை நாமே இழிவடைந்தோராக காண்பிப்பதன்றி வேறுபயண் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  9. இக்றாம் அவர்களே நான் சொல்லியிருப்பது நௌஷாத்தைப்பற்றியே அல்ல. இந்தச் செய்தியின் இறுதியில் உள்ள படத்தில் ஏழுபேர் குளிர் எழும்பியவர்கள் மாதிரி போத்திக்கிட்டு இருக்கின்றார்கள் பாருங்கள். அவர்களைப் பற்றி. இப்படிப் போர்த்திப் போர்த்தித்தானே அதாஉல்லா கொஞ்சம் பேரை பொத்த வெச்சிரிக்கிறதும், வருமானத்துக்கு அதிகமா சொத்துச் சேர்த்திருக்கிறதும். இனி இவர்களுக்கும் ”மூச்....” தான்.
    கொஞ்சம் நல்ல பாத்துப்போட்டு எழுதுங்கோ, எழுதிப்போட்டும் கொஞ்சம் பாத்துப்போட்டுங்கோ,

    ReplyDelete
  10. இக்றாம் அவர்களே, நௌஷாத் யாருடைய மேடையில் யாருக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றார் என்பதனை விளங்காமல் எழுதியிருக்கின்றீர்கள் போலத் தெரிகின்றது. அவர் யாருடைய மேடையில் யாருக்காகப் பேசுகின்றாரோ அவர்களுக்கு வாக்களிப்பதனைப் பற்றியே எனது கேள்வி இருந்தது.
    அவசரப்படாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.