Header Ads



தொலைபேசியில் பேசியது அமைச்சர் றிசாத்தில் குரலா என்பது எனக்கு தெரியாது

உதவி - நவமணி

அமைச்சர் றிஷாத் பதியுதீனை தனக்கு முன் தெரியாததென்றும் தொலைபேசியில் பேசியது அவரது குரலா என்பதும் தனக்குத் தெரியாதென்றும் மன்னார் மஜிஸ்ரேட் நீதவான் அந்தோனிப் பிள்ளை ஜுட்சன் ஆசியன் டிரிபியுனுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மன்னார் சம்பவம் குறித்து ஆசியன் டிரிபியுன் சார்பில் அதன் பிரதம ஆசிரியர் கே.ரி. ராஜரத்னம் கடந்த 25ம் திகதியளித்த பேட்டியில் திரு ராஜரத்னம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நீதவான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டி முழுமையாக வருமாறு:

 கேள்வி: நான் ஆசியன் டிரிபியுனிலிருந்து பேசுகின்றேன். அண்மைய மன்னார் நிகழ்வு பற்றி உங்கள் கருத்தும் அவதானிப்பும் விமர்சனமும் தேவைப்படுகின்றது.

 நீதவான்: நான் ஒரு நீதித்துறை உத்தியோகஸ்தர் நான் என்ன செய வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

கேள்வி: நான் உங்களிடம் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் நீதித்துறை அதிகாரி என்பதை நான் அறிவேன். இரகசிய பொலிஸார் உங்களிடம் ஒரு வாக்குமூலத்தை பதிவு செததாக ஒரு செதி வெளி வந்துள்ளது. என்ன நடந்தது என்று பின்னணியை கூறலாமா?

 நீதவான்: இதுதான் விடயம் உங்களுக்குத் தேவையெனில் சில சட்டத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்களை தரலாம். அவர்களிடமிருந்து விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: பிரச்சினை இல்லை நான் அவர்களுடன் தொடர்பு கொள்கிறேன். அவர்களின் பெயர்களையும், தொலைபேசி இலக்கங்களையும் தாருங்கள். அதேநேரம் ஒரு விடயம் தொடர்பாக விளக்கம் தேவை. அதாவது நீங்கள் ஆசனத்திலிருந்து கீழே இறங்கி நீதிமன்றத்திற்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே சுடுமாறு உத்திரவிட்டீர்களா?


 நீதவான்: இது தொடர்பாக நேற்று (23) வடக்கு சட்டத்தரணிகள் ஒரு பத்திரிகை அறிக்கை விட்டிருக்கிறார்கள். அதனை சட்டத்தரணிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். அதனை நீங்கள் வாசியுங்கள். அது முழுமையாக சரியானது. முழுச் சம்பவம் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கின்றது. பாராளுமன்றத்தில் கூறப்பட்டதும் அரசாங்க ஊடக அறிக்கைகள் கூட பொயானது. அவை முற்றும் பொயானது. வோறொன்றையே அவை காட்டுகின்றன. அவர்களது கருத்து மோசமானதும் பிழையானதும் கூட. நேற்றைய பத்திரிகையின் அறிக்கையை எடுத்து வாசியுங்கள். அவர்கள் உங்களுக்கு ஈமெயில் பண்ணுவார்கள். அதன் பின் சட்டத்தரணிகளிடமிருந்து உங்களுக்கு மேலதிக விபரங்களை பெறலாம்.

கேள்வி: யாருடன் பேச வேண்டும்?

 தீடீரென நீதவான் நான் தொடர்பிலிருக்கும் போது வேறு ஒருவருடன் பேசினார். நீங்கள் தொடர்பிலிருக்கின்றீர்களா என்று கேட்டு இணைப்பினை துண்டித்து விட்டு மீண்டும் பேசினேன்.

 கேள்வி: நான் மீண்டும் தொடர்பினை ஏற்படுத்தி ஆசியன் டிரிபியுன் ஆசிரியர் என்றேன்.

 நீதவான்: ஆம், ஆம்.

கேள்வி: நான் தொடர்பிலிருக்கும் போது நீங்கள் வேறு யாருடனோ பேச ஆரம்பித்தீர்கள்.

 நீதவான்: எனது சகல தொலைபேசி அழைப்புக்களும் பதியப்படுகின்றன. அதுதான் காரணம்.

கேள்வி: திடீரென உங்களது பதிலை பெற முடியாமல் போனது ஏன் என எனக்குத் தெரியாது.

 நீதவான்: எமது சட்டத்தரணி சங்கத் தலைவரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

கேள்வி: தயவு செது அவரது இலக்கத்தை தாருங்கள்.

 நீதவான்: திரு. பெல்டானோ அவரது இல….

கேள்வி: அவரிடமிருந்து விபரங்களை எதிர்பார்க்கலாமா?

 நீதவான்: நிச்சயமாக

கேள்வி: இன்னும் சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா?
 நீதவான்: வெள்ளிவரை அவர்கள் செவார்கள். அதன் பின் அவர்கள் தொடர்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள்.


கேள்வி: ஆனால் நீங்கள் நேற்று தமிழ் நாட்டு மீனவர்களுடைய வழக்கினை விசாரித்தீர்களா?

 நீதவான்: ஆம், நாம் அந்த விளக்கமறியல் வழக்கினை எடுக்க வேண்டியிருந்தது. இல்லாவிடின் சகல விடயங்களும் குழம்பிவிடும். விளக்கமறியல் வழக்குகள் எனது அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் அல்ல.

கேள்வி: ஆகஸ்ட் 06ம் திகதி வரை 23 தமிழநாட்டு மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை நாம் அறிக்கையிட்டோம். நீங்கள் ஷேம்பரிலிருந்து இறங்கி வெளியே வந்து முழங்காலுக்கு கீழ் சுடுமாறு உத்தரவிட்டீர்கள் என்பதே குற்றச்சாட்டு. நீங்கள் அது தொடர்பாக விளக்கவில்லை.

 நீதவான்: அது முற்றிலும் பிழையானது. வடபகுதி சட்டத்தரணிகள் முழுச் சம்பவத்தையும் ஆரம்பத்திலிருந்து கூறினார்கள். இந்த விடயங்கள் நடைபெற்றதாக அவர்கள் கூறுகின்றார்கள். இப்போது சில ஊடகங்கள் அவற்றை மறு பக்கம் திருப்புகின்றன. அந்த செதிகள் பிழையானது.

கேள்வி: யார் இந்த வடக்கின் சட்டத்தரணிகள்?

 நீதவான்: அவர்கள் எல்லோரும் வடக்கு சட்டதரனிகள் அவர்கள் மன்னாருக்கு வந்து ஊடக அறிக்கையை வெளியிட்டார்கள்.

கேள்வி: அவர்கள் உங்களை நேர்முகம் செய்தார்களா?

 நீதவான்: இல்லை இல்லை.

கேள்வி: இதேநேரம், மன்னார் சட்டத்தரணிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக பேசினார்களா? அல்லது கலந்துரையாடினார்களா?

 நீதவான்: அவர்களிள் என்னுடன் இருக்கிறார்கள். அவர்கள் பகல் வந்தார்கள் அவர்களுக்கு சம்பவம் தெரியும் இது திறந்த நீதிமன்றத்திலே நடந்தது. அதனால் அவர்களுக்கு தெரியும்.

கேள்வி: இன்னும் ஒரு கேள்வி அமைச்சர் றிஷாத் பதியுதீன் உண்மையிலே உங்களுடன் தொலைபேசியில் பேசினாரா?

 நீதவான்: ஆம், ஆம்

கேள்வி: அவர் உங்களை அச்சுறுத்தினாரா? அவர் என்ன சொன்னார்?

 நீதவான்: 17ம் திகதி அவர் சொன்னது உங்களது கட்டளை காரணமாக மன்னார் எரியப் போகிறது. சம்பவத்தின் பிறகு வேறு விசயங்கள் சொன்னார். பகல் ஒரு மணியளவில் அவர் பேசினார். உங்களது உத்தரவினாலே இதுவெல்லாம் நடக்கின்றது.

கேள்வி: நீங்கள் அமைச்சருக்கு என்ன சொன்னீர்கள்?

 நீதவான்: என்னுடன் உங்களுக்கு பேச முடியாதென்று கூறினேன். நீங்கள் மீண்டும் பேசினால் நான் பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பேன்.

கேள்வி: என்ன மொழியில் நீங்கள் இருவரும் பேசினீர்கள்.

 நீதவான்: தமிழ் தமிழ்

கேள்வி: உங்களுக்கு அமைச்சரை முன்பு தெரியுமா. பேசிய குரல் அமைச்சர் றிஷாத் பதியுதீனுடையது என உங்களால் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்ததா?

 நீதவான்: இல்லை இல்லை.

கேள்வி: அவருடன் தொடர்பு கொண்டது முதன் முறை இது.

 நீதவான்: இல்லை. இதற்கு முன்பும் இருமுறை தொலைபேசியில் பேசியுள்ளார். நான் எனக்கு பேச முடியாது என்ற விடயத்தையே சொன்னேன். முறைப்பாடொன்றிருந்தால் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செயுங்கள். நேரடியாக என்னுடன் பேச முடியாது என்றேன். அதன்பின் ஏதோ கூறியதும் நான் தொடர்பைத் துண்டித்தேன். அதனை நான் முன்னாள் பிரதம நீதியமைச்சருக்கு முறைப்பாடு செதேன். மீண்டும் தொலைபேசியில் பேசினால் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

கேள்வி: நீங்கள் கூறும் முன்னாள் பிரதி நீதியரசர் யார்?

 நீதவான்: ஓவுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா

கேள்வி: ஏன் நீங்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செயவில்லை.ஏன் முன்னாள் பிரதம நீதியரசருக்கு முறைப்பாடு செதீர்கள்.

 நீதவான்: அச்சந்தர்ப்பத்தில் அவர் ஆணைக்குழு அங்கத்தவர் அதன் பின்பு ஓர் அழைப்பு இருந்தது. பின் இணைப்பினை துண்டித்தேன். 1718ம் திகதிகளிலும் பேசினார். அதன் பின் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறையிட ஆணைக்குழுவுக்கு முறையிட முடிவு செதேன். 17ம் திகதி நான் முறையிட்டு எழுத்துமூலம் அனுப்பி வைத்தேன். 18ம் திகதி மீண்டும் பேசினார் நான் நீதிச் சேவை ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்தேன்.

கேள்வி: சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ உங்களுடன் பேசினாரா?

இது எனது கடைசிக் கேள்வி

 நீதவான்: ஆம் அவர் என்னுடன் பேசினார்.

கேள்வி: எந்த அடிப்படையில் அவர் உங்களுடன் பேசினார்?

 நீதவான்: அவர் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர். எனவேதான் அவர் பேசினார்.

கேள்வி: அவருக்கு இவ்வாறு பேசலாமா?

 நீதவான்: ஆம்

கேள்வி: உங்களுடன் பேசுவதற்கு திறந்த நீதிமன்றில் ஒரு மனு தாக்கல் செய வேண்டுமல்லவா?

 நீதவான்: இல்லை. அப்படித் தேவையில்லை. இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றுள்ளது. மரியாதைக்காக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் என்ற வகையில் அவருக்கு பேசலாம் என்பது உங்களுத்து தெரியும் தானே?

கேள்வி: நீதிச்சேவை உத்தியோகஸ்தர் நீதவான் ஒருவருக்கு பேச முடியுமா என்பது எனக்குத் தெரியாது. பேசியதன் மூலம் புதிய முன்மாதிரி ஏற்படுத்தப்பட்டுள்ளது போன்று தெரிகின்றது.

 நீதவான்: அவருக்கு என்னுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. அநேகமானோர் ஜனாதிபதி சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் மற்றவர்கள் என்னுடன் பேசினார்கள். அவரும் பேசினார் என்பதே எனது நினைவு. மன்னிக்கவும் திரு. ராஜசிங்கம் அவர்களே இந்த சகல விபரங்களையும் எனக்கு தர முடியாது.

கேள்வி: உங்கள் நிலையை நான் புரிவேன். மேலும் ஒரு கேள்வி அதுவும் தனிப்பட்டது. நீங்கள் நீதித் துறையில் எவ்வளவு காலம் நீதிச் சேவையில் இருக்கிறீர்கள்.

 நீதவான்: நீதவானாக ஐந்தாவது வருடமாகப் பணிபுரிகிறேன்.

8 comments:

  1. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாகவே அநீதிபதியின் பதில்கள் அமைந்துள்ளன.

    ஆசியன் ட்ரிபியூனுக்கும், திரு ராஜரத்னம் அவர்களுக்கும் நன்றிகள்.

    இவ்விடையத்தில் தொடர்ந்து அக்கறை செலுத்தும் நவமணி மற்றும் யாழ் முஸ்லிமுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. joodsanin thadumaatramum sootsamum inthai vaasikkumpothe therigirathu. athu mattumalla avarathu munnukku pin muranana bathilanathu avar neethipathiyaga irukka thaguthi illathavar enbathu thelivu... ithuthan sibarisu petru JOB edukka koodathu enbathu aththuda puligalidam velai seitha palakkmthan ieyavithu thunichalai koduththullathu

    ReplyDelete
  3. amaichar rishadin kural enru thannal kooramudiyathu enru koorum joodson entha thairiyathil allathu entha valikattalin keel risad thannai tholai pesi moolam mirattinar enru ulakitku oolai ittar. thodarnthu ivar neethipathiya irukka ivarukku enna thaguthi ullathu. mannaril muslim christhava hindu makkal nallavargal aanal 1990 pin vantheru kudikalalalum avargala vali nadaththum aayarinalumthan mannaril pirachchinai. ithil munnar payankaravathiyaga irunthu, pinnar aayarin aaseervathathudan MP aanavarum pirabala kadathal viyapariumana adaikalanathanin attakasamum sernthullathu

    ReplyDelete
  4. முன்னர் தெறியாத ஒருவறின் பெயர் சொல்லி வந்த கோலைகொண்டு அழைத்தவர் அந்த பெயர் சொன்னவர்தான் என ஆதாரபூர்வமாக உறுதி படுத்தும் எந்த முகாந்திரமும் அற்றிருந்த நிலையில் கூட இருந்த சட்டதரணிகளிடம் ஏன் அவர் அழைப்பில் பேசியவர் அமைசர் என சொல்ல வேண்டும் அதனை மெத்த படித்த மேதாவி வக்கீல்கள் குறுக்கு கேள்விகேட்டு ஊர்ஜீதபடுத்திகொள்ளாமல் ஏன் அமைசருகெதிராய் ஆர்பரிக்க வேண்டும் எல்லாம் திட்டமிட்டு அரங்கேறி இருப்பதுபோல் தோன்றுகிறதே

    ReplyDelete
  5. மக்களை மேடையவர்களாக நினைத்து முட்டாள் சட்டத்தரணிகள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த முட்டாள்களுன் இந்த நாட்டை அழிக்க முயன்ற புலிகளின் சட்டத்தரணிகளுக்கும்,சிங்களம் சட்டத்தரணிகள் உதவிவிட்டனர்.காசுக்காக வாயை திறக்கும் பிணதின்னிகள தானே கறுப்பு கோர்ட் போட்டவர்களில சிலர்.
    ஏசியன் ரிபியூன் பேட்டியை சட்டமா அதிபர்,பிரதம நிதி அரசர்,சட்டத்தரணிகள், சங்க தலைவர்,பிழையாக அறிக்கை விடும் அமைச்சர் ராஜித போன்றவர்களுக்கு கிடைக்க செய்யுங்கள்,அது வடக்கு முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மை.

    இந்த அநியாயத்துக்கு எந்த கறுப்புக் கோர்ட நிதி வழங்கப் போகின்றது....இலங்கையில் நீதி செத்துவிட்டது...அதே பெல் வீரகேசரி,தினக்குரல்,சுடர் ஒளி,மெட்ரோ,தினகரன் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பி வையுங்க சார்.......

    ReplyDelete
  6. தீர விசாரிக்காமல் தீர்மனம் எடுக்கும் உங்களது நீதி மன்றத் தீர்ப்புக்களின் நிலை எப்படியிருக்கும். பாவம் அப்பாவி மக்கள்.

    ReplyDelete
  7. DEAR MUSLIM BROTHERS,
    PLEASE DON'N BY AND SELL THOSE NEWS PAPERS. BECAUSE THAT NEWS PAPERS EDITORS DID NOT LIKE EXPRESS THE TRUTH OF MUSLIM COMMUNITIES NEWS THEREFORE WE DO NOT BOTHER ABOUT THAT NEWS PAPERS. IF YOU WANTS TO REED ANY NEWS KINDLY BY ONLY NAVAMANI. JAZAKALLAH

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும்
    யாழ் முஸ்லிம் இணைய தள வாசகர்களுடன் மீண்டும் இணைவதில் சந்தோசமடைகிறேன்.அல்ஹம்துலில்லாஹ் .
    வட,கிழக்கில் அமைதி திரும்பியதிலும்,முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திலும் உள்ளூர்,புலம் பெயர் புலிக்கூட்டத்தித்கும்,வட,கிழக்கை கிருஸ்தவ ஈழமாக மாற்ற விரும்பிய பாவாடை பாதிரிகளுக்கும் ,நோர்வே நாட்டு
    சமாதானப் புறாக்களுக்கும் ஒரு துளி கூட விருப்பமின்மையே இலங்கை முழுவதும் முஸ்லிம்கள் மீது இன வெறியுடன்
    நடக்கும் ஒவ்வொருசம்பவமும் சான்றாக உள்ளது.
    உருவங்களை வணங்காத நம்மை ஒட்டு மொத்த உலகமும் எதிர்க்கிரதென்றால் நம்மிடம் உண்மையும்,சத்தியமும் இருக்கிறது.நம்மவர்களுக்கு மார்க்கத்தை சொல்லுவதைவிட மாற்று மதத்தவர்களுக்கு தஹ்வா செய்வதை அதிகப்படுத்த வேண்டும்.
    இயக்க வெறியுடன் அலையாமல் முஸ்லிம்களாக நமது பொருளாதாரம்,மனித வளத்தைக் கொண்டு இம்மையிலும்,
    மறுமையிலும் வெற்றி பெறுவோம்.
    MERAAN

    ReplyDelete

Powered by Blogger.