Header Ads



அதாவுல்லாவின் அரசியல் இருப்பைத் தீர்மானிக்கப் போகும் கிழக்கு தேர்தல்


எஸ்.றிபான்

இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அதாவுல்லாவின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் ஒன்றாக அமையுமென்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதனால், இத் தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள வேண்டு மென்பதற்காக அதாவுல்லா வரிந்து கட்டிக் கொண்டு நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கான மூல காரணம், அத்தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து தேசிய காங்கிரஸின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட 03 பேரும், திருகோணமலையில் ஒருவரும் வெற்றி பெற்று கிழக்கு மாகாண சபைக்கு சென்றமையாகும்.

முன்னால் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் வழிகாட்டலின் கீழ் இயங்கிய தவம் என்ற இளைஞர் அதாவுல்லாவின் அணியில் சேர்ந்து கொண்டபோது தேசிய காங்கிரஸின் செல்வாக்கு அக்கரைப்பற்றில் மேலும் வலுப் பெற்றது.

அதாவுல்லா தவத்தினை 2006ம் ஆண்டு நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடச் செதார். தவம் அதிக வாக்குகளைப் பெற்று அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டார்.

பிரதேச சபையின் தவிசாளராகிய தவம் அதாவுல்லாவின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கிய போதிலும், தவத்திற்கென்று ஒரு குறூப் அக்கரைப்பற்றில் உருவானது. இந்தக் குறூப் தவத்தின் விரல் அசைவுக்கு இயங்கியது. இந்த நிலை தமது கோட்டை அரசியலுக்கு ஆபத்தாக அமைந்துவிடுமென்று அதாவுல்லா கருதி இருக்க வேண்டும். அதாவுல்லாவின் இந்த அரசியல் ரீதியான சந்தேகத்திற்கு சிலர் எண்ணெய் ஊற்றவும் செதார்கள்.

இதன் காரணமாக 2011.03.17ம் திகதி நடைபெற்ற அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் அதாவுல்லா தனது மகனை போட்டியிடச் செது மேயராக்கினார்.

இராஜதந்திரமாக அணுக வேண்டிய இவ்விடயத்தினை இவ்வாறு கையாண்டதன் விளைவாகவே தவம் அதாவுல்லாவை விட்டும் மெது மெதுவாக விலகத் தொடங்கினார். ஈற்றில் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தும் கொண்டார்.

தவம் முஸ்லிம் காங்கிரஸின் மீது கொண்ட பற்றுதலால் அக்கட்சியில் இணைந்து கொள்ளவில்லை. அதாவுல்லாவின் மீது ஏற்பட்ட வெறுப்பினால், முஸ்லிம் காங்கிரஸை தேர்வு செது கொண்டார். அவர் அதாவுல்லாவிற்கு பாடம் புகட்ட வேண்டுமென்று திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
தேசிய காங்கிரஸின் அக்கரைப்பற்று வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்ற தவத்தின் விலகல் அதாவுல்லாவின் கோட்டையை சரியச் செது விடுமாயின், அதாவுல்லாவின் அரசியல் கேள்விக் குறிகளை சுமக்க வேண்டியேற்படும்.

2008ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து தேசிய காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது. தனக்கு அடுத்த படியாக மற்றொரு அரசியல் பிரதிநிதி அக்கரைப்பற்றில் தோற்றம் பெறுவது தமது அரசியல் எதிர் காலத்திற்கு ஆபத்தாக அமைந்து விடும் என்பதன் காரணமாக இத்தேர்தலில் தேசிய காங்கிரஸின் கோட்டையாகவுள்ள அதாவுல்லாவின் பிறந்த ஊராகிய அக்கரைப்பற்றில் வேட்பாளர்கள் எவரையும் அமைச்சர் அதாவுல்லா நிறுத்தவில்லை.

தேசிய காங்கிரஸில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு அக்கரைப்பற்று பிரதேச தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களிடம் அதாவுல்லா கேட்டுக் கொண்டதற்கு அமைவாக வாக்குகள் அளிக்கப்பட்டன. தேசிய காங்கிரஸின் மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றார்கள். எம்.எஸ்.உதுமாலெவ்வை கிழக்கு மாகாண சபையின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2008ம் ஆண்டு தேர்தலின் போது அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இருந்த தவம் ஆள்,அம்பு, சேனை கொண்டு இத்தேர்தலில் முழு மூச்சாக உழைத்தார்.

தற்போது தவம் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதனால், அக்கரைப்பற்றில் 2008ம் ஆண்டு கிடைத்த வாக்குகள் 2012ம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலிலும் கிடைத்து விடுமென்று கூற முடியாது. தவத்தின் நண்பர்கள், உறவினர்கள், விசுவாசிகள் என்று ஒரு தொகையினர் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

மேலும், 2006ம் ஆண்டு நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் 10 ஆயிரத்து 129 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. முஸ்லிம் காங்கிரஸ் 947 வாக்குகளைப் பெற்றது.

2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பரப்பு அக்கரைப்பற்று மாநகர சபை என்றும், அக்கரைப்பற்று பிரதேச சபை என்றும் இரண்டாகத் துண்டாடப்பட்டன.

இத்தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் 11ஆயிரத்து 821 வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரஸ் 2819 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன.

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் 2261 வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரஸ் 775 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன.

2006ம் ஆண்டு தேசிய காங்கிரஸ் 10 ஆயிரத்து 129 வாக்குகளைப் பெற்றுக் கொண்டே அதே வேளை, 2011ம் ஆண்டு (மாநகர சபையில் 11821, பிரதேச சபையில் 2261) 14082 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. 2006ம் ஆண்டை விடவும் 2011ம் ஆண்டு 3953 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளன.

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸ் 2006ம் ஆண்டு 954 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், 2011ம் ஆண்டு (மாநகர சபையில் 2819, பிரதேச சபையில் 775) 3594 வாக்குகளைப் பெற்றுள்ளது. 2547 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது.

2012ம் ஆண்டுத் தேர்தலில் அக்கரைப்பற்றில் தேசிய காங்கிரஸின் வாக்குகளைக் குறைக்க வேண்டுமென்ற திட்டத்தில் மூன்று வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்கனவே இருக்கின்ற சுமார் 3500 வாக்குகளோடு மூன்று வேட்பாளர்களும் எவ்வளவு வாக்குகளை தமது செல்வாக்கின் மூலமாக தேசிய காங்கிரஸின் வாக்குகளில் இருந்து பிரிக்கப் போகின்றார்கள் என்பதுதான் தேசிய காங்கிரஸின் கோட்டையில் சரிவு ஏற்பட்டுள்ளதா என்பதனைச் சோல்லும்.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற தவத்தின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதுதான் முக்கியமானதாகும். தவம் மாநகர சபைத் தேர்தலில் பெற்ற வாக்குகளில் ஆகக் குறைந்தது. இரண்டாயிரம் வாக்குகளையாவது பெற்றுக் கொள்ளும் பட்சத்திலும், மற்றைய இரு வேட்பாளர்களும் ஒரு தொகை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் பட்சத்திலும் தே.காவின் வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.

அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேச வாக்காளர்கள் இப்படித்தான் வாக்களிப்பார்கள் என்று கருத்தியல் அடிப்படையில் அரசியல் நோக்கர்கள் கருத்துக்களைச் சோன்னாலும், முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் வீழ்ச்சியடைவதற்கும் வேறு காரணிகளும் செல்வாக்குச் செலுத்தலாம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகள் அதிகரிப்பதும், தேசிய காங்கிரஸின் வாக்குகள் அதிகரிப்பதும் இக்கட்சிகளின் பிரச்சார யுக்திகள், மக்களின் மனோ நிலை போன்ற காரணிகளின் செல்வாக்கைப் பொறுத்ததாகவே அமையும்.

இதே வேளை, அக்கரைப்பற்றில் வளர்க்கப்பட்ட பிரதேசவாதம், வேறு ஒரு விதமாக மாறுவதற்கும் ஏதுக்கள் உள்ளன. அக்கரைப்பற்று வாக்காளர்கள் அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டுமென்ற கோஷமும் முன் வைக்கப்படலாம். தேர்தல் வெற்றிக்காக எதனையும் செயக் கூடியவர்களே அரசியல்வாதிகள்.

தேசிய காங்கிரஸின் செல்வாக்கு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அதிகரித்துக் காணப்பட்டமைக்கு பிரதான காரணம் அம்பாரை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களை மாத்திரம் அதாவுல்லா போட்டியிடச் செதமையாகும்.

இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் தோல்வியடைந்த உவைஸ் என்பவரையே வேட்பாளராக நிறுத்தியது. இவர் தேசிய காங்கிரஸிற்கு சவாலாக இருக்கவில்லை. இவரின் செயற்பாடுகள் தே.காவின் தொண்டர்களினால் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.

அக்கரைப்பற்று வாக்குகள் தே.காவில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்டன. ஏனைய பிரதேசங்களில் கிடைத்த துணை வாக்குகளின் காரணமாக மூன்று வேட்பாளர்களும் வெற்றி வாகை சூடினார்கள்.

ஆனால், 2012ம் ஆண்டுத் தேர்தலில் இந்த அணுகு முறை சாத்தியப்படுவதற்கு வாப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன. அக்கரைப்பற்றில் தே. காவுக்குரிய வாக்குகள் எவ்விதமான சேதாரமும் இல்லாமல் கிடைத்தால் கூட நான்காக பிரிந்துவிடும். இதனால் தே.காவின் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

அத்தோடு, அம்பாரை மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களில் தே.காவின் வாக்குகள் அதிகரித்துள்ளதா என்று பார்த்தால் குறிப்பிட்டுச் சோல்லும் படியாக இல்லை.

ஆகவே, தேசிய காங்கிரஸின் வெற்றி என்பது அக்கரைப்பற்று வாக்குகளிலேயே தங்கியுள்ளது. தே.காவின் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் பெறும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. ஆதலால், இத்தேர்தலில் அக்கரைப்பற்று தேர்தல் களம்தான் சூடானதாகவும், மற்றவர்களின் கவனத்திற்குரியதாகவும் அமையப் போகின்றது.

தேசிய காங்கிரஸின் வெற்றி வாப்பை அதிகரிக்க வேண்டுமானால், போட்டியிடும் நான்கு வேட்பாளர்களுள் ஒருவரை டம்மி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்களின் மூன்று விருப்பத் தெரிவினையும் கலைந்து செல்லாமல் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமது கட்சியின் வெற்றியை உறுதி செது கொள்வதற்காக அதாவுல்லா திட்டங்களை வகுப்பதாக அக்கட்சின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவிக்கின்றார்கள். அதாவது, தமது கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரை டம்மியாக அறிவிப்பது. அல்லது தேசிய காங்கிரஸின் வாக்குகளை வலயமாக பிரித்து வாக்களிக்கச் செதல். இதில், எதனைச் செதால் தே. காவின் வெற்றி வாப்பு அதிகரிக்குமோ அதனைச் செவதற்கு ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அதாவுல்லாவின் எதிர் கால அரசியலை தீர்மானிக்கும் ஒன்றாக அமையுமென்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனால், இத்தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அதாவுல்லா வரிந்து கட்டிக் கொண்டு நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

4 comments:

  1. கடந்த மாநகர சபைத் தேர்தல் காலத்திலும் அதாஉல்லாவுக்கு இத்தேர்தல் சவாலாக அமையும் என பலர் சொன்னார்கள். ஆனால் அவ்வாறு அமையவில்லை. வாக்காளர்கள் போட்ட வாக்குகளை எண்ணியிருந்தால் ஒருவேளை அவ்வாறு அமைந்திருக்கலாம்.
    வாக்களிப்புக்கு முன்னரே அதாஉல்லா தான் பெறப்போகும் ஆசனங்களை அறுதியிட்டுக் கூறினார். அதே கணக்குத் தப்பாமல் தேர்தல் முடிவுகளும் வந்தன. இன்றும் அவர் அதே தோரணையில் பேசுகின்றார். தேர்தலுக்கு முன்னரே தனது மகனின் பெயரை மேயர் எனப் போட்டு மாநகர சபைக் கட்டிடத்துக்கான கல்வெட்டையும் செய்துகொண்டு வந்தார். மகனையும் மேயராக்கினார்.
    பல இடங்களில் இந்த மேயர் மகனார் ”அம்பாரைக் கச்சேரியும், .....வும் இருக்கும் வரை எங்களுக்குத் தோல்வியே இல்லை” எனக் கதைத்துத் திரிவதும் ஊரறிந்தது.
    வாக்குப் பெட்டிகள் தாமதமாகி வருதல். சில பெட்டிகளைத் தாமதமாக்கி எண்ணுதல், சமறி ஷீற் காணமல் போதல் போன்ற கதைகளை கச்சேரிக்கு வாக்கு எண்ணப் போனவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
    எனவே, அதாஉல்லாவின் வாழ்வா சாவா போராட்டமாக அமையப் போகும் இத்தேர்தலின் முடிவுகள் வாக்காளர் கைகளில் இல்லை என்பது வாக்களர்களின் எண்ணப்பாடாக இருக்கின்றது.
    திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் தேர்தல் முடிவுகள் வழக்கம் போல அடுத்த நாள் நண்பகல் செய்தியறிக்கையில் சொல்லப்படாமல் இம்முறையாவது தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் ஒலி ஒளிபரப்பில் சொல்லப்படுகின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
    (அரசியல்) உயிரைக் காக்க உழைத்ததைக் கொடுக்க மாட்டார்களா என்ன!

    ReplyDelete
  2. ORU KAWALAI VEENDAAM ALLAH IRUKINRAAN ATHAVULLAVUKKU ARASIYALVAATHIKAL SANTHARPAVAATHIKAL EMPATHY ATHAVULLAVIDAM romba kurayavee undu. enavethaan ellam Akkaraipattu Alan virumbikalum Thesis congress kku vaakaliththu LATE Imam soram pokatha ATHAVULLAH vaya villa vaipoom

    ReplyDelete
  3. Traitor atavulla actual face was appeared during the Dambulla mosque incident he went total silent . As ashraff always like to appoint a brainless people for all the village (then only they will not question anything he does) this man was appointed in akkaraipattu. This man thought as his boss mahinda does he can also appoint his son for his political future. Akkaraipptu people are that not fool. they have learn a lot and will teach a lession to this attavulla in this coming election

    ReplyDelete
  4. THIS TIME EASTERN PROVINCIAL COUNCIL ELECTION ATHAULLA AND RISAD BATHIUDIN WILL BE GET MORE VOTES THEREFORE LEADERS NO NEED TO GET ANY WORRIES TAKE A REST.ALLAH BLESH YOU AND RISAD.BOTH ARE REAL LEADER TO THE AMPARAI AND MANNAR DISTRICT TO ALL COMMUNITY.

    ReplyDelete

Powered by Blogger.