Header Ads



லிபியாவில் சலபி - சூபி மோதல் முற்றுகிறது

 
TN
 
லிபியாவில் தொடரும் வன்முறைகள் மற்றும் சூபி முஸ்லிம்களின் புனிதத் தலங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் பவ்சி அப்தலல், தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
 
லிபியாவில் சுயாதீன தேர்தல் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட பாராளுமன்றம் அங்கு நிலவும் அண்மைய வன்முறைகள் தொடர்பில் உள்துறை அமைச்சர் மீது கடும் விமர்சனம் எழுப்பியதை அடுத்தே அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.
 
லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டு 8 மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அங்கு தொடர்ந்தும் மோதல்கள் நீடித்து வருகிறது. கடந்த ஒருவாரத்திற்குள் அங்கு இரு சூபி முஸ்லிம் புனிதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 
இந்தத் தாக்குதலுக்கு கடும் போக்கு சலபி முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தலைநகர் திரிபோலியில் அண்மையில் இரு கார் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சில்தான் நகரில் இரு பழங்குடியினருக்கு இடையில் தொடர்ந்தும் மோதல்கள் நீடிக்கிறது.
 
இந்நிலையில் உள்துறை அமைச்சர் பவ்சி அப்தலல் தனது ராஜினாமாக் கடிதத்தை லிபிய பிரதமர் அப்துல் ரஹீம் அல் ஜிப்பிடம் சமர்ப்பித்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய வன்முறைகளைத்தடுக்க உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒசாமா ஜுவைலியா தவறியதாக பாராளுமன்றம் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்தே அவர் ராஜினாமாச் செய்துள்ளார்.
 
இதில் கடந்த சனிக்கிழமை திரிபோலியில் இருக்கும் சூபி புனிதத் தலத்தை புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்ட போது அங்கு உள்துறை அமைச்சு அதிகாரிகளும் சமுகமளித்துள்ளதோடு பொலிஸாரும் இருந்ததாக சம்பவத்தை பார்த்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்தப் புனிதத் தலத்தில் சமாதி (சியாரம்) வழிபாடு நடப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சே இந்த தலத்தை தகர்க்க அனுமதி அளித்ததாக இந்த தகர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் ராய்டருக்கு தெரிவித்துள்ளார்.
 
லிபியாவில் தற்போது சூபி மற்றும் சலபி முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதில் சலபி முஸ்லிம்கள் லிபியாவில் பல்வேறு ஆயுதக் குழுக்களை செயற்படுத்துகிறது. இவர்கள் சூபி முஸ்லிம்களின் வழிபாட்டு முறைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றனர்.
 
குறிப்பாக சமாதி (சியாரம்) வழிபாடு, ஆடல்கள் போன்ற சூபிகளுக்கு எதிரான செயற்பாட்டுக்கு சலபிக்கள் எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதில் சேதமாக்கப்பட்ட திரிபோலியிலுள்ள சூபி புனிதத் தலமான ஷாப் பள்ளிவாசலில் 50 சூபி தலைவர்களின் சியாரங்கள் உள்ளன. ஸ்பானிய காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய சூபி அறிஞர் அப்துல்லா அல் ஷாப்பின் சியாரமும் அங்கு உள்ளது. இஸ்லாம் முஹம்மத் நபியின் வழிபாட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என சலபி முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர்

7 comments:

  1. இவனுகலை நாட்டை விட்டு அடிச்சு காட்டுக்கு விரட்ட வேன்ட்ரும். தரீக்கா சேஹு மூரிது கந்தூரி டிஸ்கோ ராத்திப் என்டு இவனுகல் இஸ்லாம் மார்க்கத்தை இலிவு செய்ர. செஹுட காலை கழுவி அந்த தன்னிய குடிக்கிர.

    ReplyDelete
  2. இஸ்லாத்திற்கும் சூபித்துவக் கோட்பாடுகளுக்கும் சம்மந்தம் இல்லை.

    இந்து, கிரேக்க தத்துவங்களிலிருந்து உருவானதுதான் இந்த சூபித்துவம் என்ற வழிகேடு. ஜஹம் இப்னு சப்வான், அபூ ஹாமித் அல் கஸ்ஸாலி, இப்னு அரபி போன்ற வழிகேடர்களால் இஸ்லாத்திற்குள் நுழைக்கப் பட ஒரு வழிகெட்ட கொள்கை சூபித்துவம் ஆகும்.

    மாஷா அல்லாஹ், லிபியாவிலே தற்பொழுது இஸ்லாத்தை செயல் படுத்த அதிகாரம் இருப்பதால், சூபித்துவமும், அதனை வழியொட்டி வந்த சமாதி வணக்கமும் இல்லாமல் ஆக்கப் பட முயற்சிகள்
    மேற்கொள்ளப் படுகின்றன. அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்.

    சமாதி வழிபாடு நடைபெறும் சூபிகளின் வணக்க ஸ்தலங்களை புனித இடங்கள் என்றெல்லாம் அழைக்க முடியாது, இஸ்லாத்தின் பார்வையில் அவை மாசு நிறைந்த இடங்களாகும்.

    ReplyDelete
  3. La Voix நண்பரே உங்களுக்கும் ரஹ்மத்செய்யட்டும் மேற்சொன்ன கருத்துக்காக

    ReplyDelete
  4. இஸ்லாதுக்கும் சூஃபித்துவத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான நடவடிக்கை அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  5. TIS WAS THE REAL GOOD/BAD REASON OF CIA TO GET INVOLVE LIKE SUNNI vs SHIA KILLING IN OTHER PART OF GLOBE ESPECIALLY IN IRAQ AND SYRIA PLUS AFGHANISTAN PASHTHUN AZARE UZBEK THAJIK FARSI. TRIBAL KILLING GREAT TRAITER GREAT SUCCESS FOR THE WEST

    ReplyDelete
  6. The wahabies/Salafies, who are the No-1 terrorists in the world, are destroying the symbols of Islamic history with the blessing of Zionists and CIA. These terrorists need the blood of Muslim Ummah. In libya majority are against the atrocities of these Wahabies/Salafies.
    In my opinion the world devoid of Wahabies will be more peaceful and we, the Ahlus Sunneth Wal-Jamath adherents, pray almighty Allah to punish all these terrorists and those who co- operated with them to demolish the houses of Allah.

    ReplyDelete
  7. @ikram, if you study Islam properly, then you will be amazed to know that prophet Mohammed (pbuh) was the pioneer of the wahabies/ salafies.

    ஷீயாக்களும், கபுறு வணங்கிகளும், வழிகெட்ட சூபிகளும், உண்மையான குர் ஆன், ஹதீஸுடைய போதனைகளைக் கண்டு அஞ்சுகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.