நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் மரண தண்டனை விதித்த கைதி, தனது கழுத்தை வெட்டினார்
AD
நுவரெலிய மேல் நீதிமன்றால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நீதிமன்றிற்குள் தனது கழுத்தை பிளேட் ஒன்றால் வெட்டிக் கொண்டதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
காயமடைந்த நபர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2006ம் ஆண்டு ஹட்டன் - டிக்கோயா பகுதியில் ராமதாஸ் இலங்கேஸ்வரி என்ற பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட குறித்த நபருக்கு இன்று (09) நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் நீதிமன்றிற்குள் தனது கழுத்தை பிளேட் ஒன்றினால் வெட்டிக் கொண்டுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் குற்றவாளியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
Post a Comment