Header Ads



மடவளை ஹிரா தகவல் நிறுவன இப்தார் (படங்கள் இணைப்பு)


மொஹமட் ஹபீஸ்

இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கீழ் இயங்கும் 'ஹிரா தகவல் நிறுவனமும' மடவளை பஸார் 'ஜமாஅத்தே இஸ்லாமி நிறுவனமும்' இணைந்து நடத்திய நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு ஒன்று (8.8.2012) மடவளை பஸார் முஸ்தபா வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

பாத்ததும்பறைப் பிரதேச சபைத்தலைவர் சுதர்மா வெலகெதர, வத்துகாமம் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சமரகோன், மற்றும் மடவளையில் இயங்கும் வங்கிகள், தபால் நிலையம், நீர்வடிகால் அமைப்புச் சபை, மின்சார சபை, பிரதேச செயலாளர் காரியாலயம், போன்ற வற்றில் தொழில் புரியும் முஸ்லிம் அல்லாதவர்களும். மடவளை நகரத்தில் வர்த்தக முயற்ச்சியில் ஈடுபட்டுவரும் முஸ்லிம்கள் அல்லாதவர்களும், பொது சுகாதார உத்தியோகத்தர், பொதுச் சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள் வைத்தியர்கள், கிராம அதிகாரிகள், சமுர்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் உற்பட அனேக பிரமுகர்கள் இதற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இஸ்லாமிய சர்வதேச கல்வி நிலையப் பணிப்பாளர் சாஜஹான் உடையார், ஹிரா தகவல் நிறுவகத்தின் பணிப்பாளர் எம்.எல்.எம். நியாஸ் ஆகியோர் இங்கு சிறப்புச் சொற்பொழிவாற்றினர்.

சாஜஹான் உடையார் அங்கு தெரிவித்ததாவது,

இன்று பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால் பிதான தலைப்புச் செய்தி உற்பட சுமார் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட செய்திகள் மிகத் துக்ககரமான விடயங்களையே தாங்கியுள்ள. போதை, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு. கொலை, கொள்ளை, மோசடி, ஏமாற்று, மது, கடத்தல், தற்கொலை என்று பட்டியல் நீள்கிறது. சட்டம், ஒழுங்கு நீதி நேர்மை, நீதி மன்றங்கள் தண்டனை என்று எத்தனையோ விடயங்கள் இருந்தும் அவற்றைத் தடுக்க முடியாதுள்ளது.

சட்டத்தால் தடுக்க முடியுமாயின் இவை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும். மனித உள்ளம் மாறாத காரணத்தாலும் சிந்தனை வளர்ச்சியடையாத காரணத்தாலுமே இப்படியான நிலை ஏற்பட்டுள்ளது. திருக்குர்ஆன் போதனைப்படி பார்த்தால் மனித  அதாவது குர்ஆனில் கூறப்பட்ட விடயங்கள் முஸ்லிமகளுக்கு மட்டுமல்ல. அது முழு மனிதவர்கத்திற்கும்இறைவனால் அருளப் பெற்றது. எனவே நோன்பு மூலம் நாம் புலனடக்கப் பயிற்சியைப் பெறுகிறோம். ஏனைய சமயங்களிலும் இதனை நாம் காண்கிறோம். பௌத்தர்களது 'பன்சில்'  (ஐந்து பொருத்தங்களை) வழங்குகின்றனர். இந்துக்களும் விரதம் இருக்கின்றனர். கிருஸ்தவர்களும் இவ்வாறு விரதம் இருக்கின்றனர். இதை குர்ஆனும் தெளிவாகக் கூறுகிறது. 

உங்களை பயபக்தி உடையவர்களாக்கவே இதற்கு முள் உள்ளவர்களுக்கு விதியாக்கியது போல் உங்களுக்கும் நோன்பை விதியாக்கியுள்ளோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

எனவே எமது நாட்டில் இடம் பெறுகின்ற அனைத்து அனாச்சாரங்களும் நீங்க முஸ்லிம்கள் நோன்பைப் பயன்படுத்தி நற் பயிற்சிகளைப் பெறுவதுடன் ஏனைய சமயத்தவர்களும் தத்தமது சமயத்தில் கூறப்பட்ட விரதங்களை மேற்கொண்டு நற்பயன் அடைய வேண்டும் என்றார்.










No comments

Powered by Blogger.