Header Ads



மியன்மார் முஸ்லிம்களுக்கு கொடூரம் - பாகிஸ்தான் + சவூதி அரேபியா கண்டனம்



மேற்கு மியான்மரின் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இன சுத்திகரிப்பு நடப்பதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. கொடூரமான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மூலம் தங்களின் சொந்த நாட்டைவிட்டு வெளியேற ரோஹிங்கியா முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று சவூதி அரேபியா அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை வசதிகளை ஏற்பாடுச்செய்ய சர்வதேச சமூகம் தயாராக வேண்டும் என மன்னர் அப்துல்லாஹ்வின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேவேளையில் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்து துயர்துடைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மியான்மர் அதிபர் தைன் ஸைனுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பாகிஸ்தான் மக்களும் பங்கேற்பதாக சர்தாரி கூறியுள்ளார்.

3 comments:

  1. சவூதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சவூதி அரேபியா, மன்னர் பைசலின் படுகொலைக்குப் பின்னர், முஸ்லிம்களின் துன்பத்திற்காக குரல் கொடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகவும் இருக்கலாம்.

    மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப் படும் செய்திகள், பாகிஸ்தானுக்கு ஆமை வேகத்திலும், சவூதி அரேயாவுக்கு ஒட்டக வேகத்திலும் சென்றடைந்திருக்கின்றன.

    ReplyDelete
  2. ஆமை வேகமோ ஒட்டக வேகமோ இப்பவாது குரல் கொடுதுதார்களே அதுவே பெரிய செய்தி . இதுவரைக்கும் முஸ்லீம் நாடுகள் மியன்மாருக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதே பெரிய விடயமாக காணப்பட்டது .

    ReplyDelete
  3. சகோதரருக்கு சவுதி அரேபியாவைப் பற்றி அதிகம் தெரியாது என்று நினைக்கின்றேன். அரபு மொழியறிவு இருந்தால் சவுதி இஸ்லாமிய உம்மாவுக்கு செய்து கொண்டிருக்கும் சேவைகளை எழிதாக விளங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete

Powered by Blogger.