இலங்கை டீசலில் நுண்ணியிர்கள் பரவியுள்ளதா...?
சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த டீசலின் நுண்ணுயிர்கள் பரவியுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அதன் மாதிரிகளை தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய டீசல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் குறித்த டீசலில் நுண்ணுயிர்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பாக அநேகமானவற்றை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் தரப் பரிசோதனைக்கான வசதிகளை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய கொலன்னாவை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய ஆய்வு கூடங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே சர்ச்சைக்குரிய டீசல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பெற்றோலிய வள தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
எரிபொருள் கொள்வனவு தொடர்பில் உரிய குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய வள தேசிய ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித்த குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு அமைச்சின் தொழில்நுட்ப பிரிவின் செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இத்தகைய பாரதூரமான பிரச்சினை தொடர்பாக ஒரு சில நாட்களில் ஆராய முடியாது என இலங்கை பெற்றோலிய வள பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரங்கவெல தெரிவித்துள்ளார். மக்களை ஏமாற்றும் வகையிலேயே அமைச்சின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment