Header Ads



விற்கப்படும் முஸ்லிம் சகோதரி (படங்கள் இணைப்பு)

 
உதவி - CWC

அபூ அஹ்மத்

கடந்த வாரம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஒட்டப்பட்டு வரும் பரவலான சுவரொட்டியை நீங்கள் மேலேயுள்ள உள்ள படத்தில் காணலாம்.

பலரையும் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய இந்த சுவரொட்டி ஒன்றில் ஒரு முஸ்லிம் யுவதி சோகமான முகபாவனையுடன் காட்சியளிக்க, அதன் வசனங்கள் “ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் அகன்று மாற்றம் மறுமலர்ச்சி மகிழ்ச்சி வருவதற்கு” மரத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்கிறது.

தேர்தல் காலங்களில் தேர்தல் சட்டவிதிகளுக்கு முரணான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு மக்களைப் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவது வழமையாகிவிட்டது எனினும், முஸ்லிம் காங்கிரஸ் சுவரொட்டிக்கு ஒரு முஸ்லிம் யுவதியின் புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது கேவலமானதும் கண்டிக்கத்தக்கதுமான நடவடிக்கையாகும்.

இந்தப் புகைப்படத்தின் மூலத்தை தேடியபோது கிடைத்த தகவல்கள் மேலும் அதிசயிக்கத்தக்க தகவல்களை வெளிக்கொண்டு வந்தன.

வெளிநாட்டுப் புகைப்பட நிபுணரான மார்ட்டின் வான் அசெல்டான்க் என்பவரால் 10.10.2008 அன்று புத்தளம் அகதி முகாம் ஒன்றில் எடுக்கப்பட்டதும் தற்போது அரசியல் நோக்கங்களுக்காக காங்கிரசால் பயன்படுத்தப்படும் சுவரொட்டியின் மூலப்படம் மேலே பதிப்பிக்கப்பட்டுள்ளது.

(இரண்டு படங்களிலும் குறித்த யுவதியின் முகம், இந்தக் கட்டுரையின் பகிரங்கப் பிரசுரத்தை கருத்திற்கொண்டு  மறைக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் கவனிக்கவும்)

புகைப்படப் பகிர்வு இணையத்தளம் ஒன்றில் குறித்த புகைப்படக்காரரால் பகிரப்பட்ட இப்படம் பூரண பதிப்புரிமை உடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலப்புகைப்படம் பதிப்பிக்கப்பட்ட போது அதற்கு விளக்கமாக வெளியிடப்பட்ட அடிக்குறிப்பின் தமிழாக்கம் வருமாறு:

2008-10-10 இவர் அழகானவர். இவரது குடும்பம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யுத்தத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியது. இவர் ஒரு சிறுமியாக இருக்கும் போது இவர்கள் புத்தளத்தில் குடியேறினர். இவரது தந்தை ஒரு அமையத் தொழிலாளியாக குடும்பத்துக்காக உழைக்கிறார்.

பதிப்புரிமையுடைய குறித்த புகைப்படம் முறையான அனுமதியுடன் சுவரொட்டிக்கு பாவிக்கப்பட்டதா ? என்பன போன்ற புலமைச் சொத்துரிமை தொடர்பான கேள்விகள் ஒருபுறம் இருக்க, மார்க்கப்பற்று காரணமாகவும் வெட்கத்தின் காரணமாகவும் முகத்தினை மூடிக்கொள்ளும் பெண்களுள்ள ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக மார்தட்டிக்கொள்ளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஒரு முஸ்லிம் யுவதியின் புகைப்படத்தை தனது குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக சுவரொட்டியில் இட்டு கிழக்கின் முஸ்லிம் பகுதிகள் எங்கும் ஒட்டியிருப்பது அதி கேவலமான செயற்பாடாகும்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உட்பட எரிந்துகொண்டிருக்கும் பல்வேறு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளை அரசின் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் இருந்துகொண்டு கவனிக்கவே முடியாமல் திரிந்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர்கள் இந்தச் சுவரொட்டியை கவனிக்கவில்லையா?

தங்களது பிள்ளையின் அல்லது குறைந்தது உறவு முறையான பிள்ளை ஒன்றின் புகைப்படம் இவ்வாறு சுவரொட்டியாக ஓட்டப்ப்படுமாயின் குறித்த தலைவர்களோ அல்லது சாமானியப் பொதுமகனோ எவ்வாறான மனநிலைக்கு உள்ளாவான் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

அனைத்து முஸ்லிம் பிரச்சினைகளின் போதும் வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு ஒரு வேட்பாளர் நியமனத்தில் எழுந்த சர்ச்சையால் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக தேர்தல் கேட்க நேர்ந்த சம்பவத்தை சகோதரர் மாப்ரூக் தெளிவாக ஒரு கட்டுரையில் விளக்கியிருந்தார். தற்போதும் கூட ஏனைய இரண்டு மாகாணங்களிலும் வெற்றிலைச் சின்னத்தில் வேட்பாளர்களை நியமித்துவிட்டு கிழக்கில் வந்து அரசை விமர்சித்துக் கொண்டும் சமூகத்துக்காக புரட்சி செய்து தாம் வெளியே வந்துவிட்டதைப் போன்றும் மக்கள் மத்தியில் கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு திரியும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலுக்காக மார்க்கத்தை மூலதனமாக்கியதையும் தாண்டி, அரசியலுக்காக எமது அகதிப் பெண்களின் மானத்தைப் பற்றிக் கூட கவலைப்படாது என்பதே இந்தச் சுவரொட்டி எமக்குச் சொல்லும் செய்தியாகும்.

சமூக அமைப்புகள், உலமாக்கள், கல்விமான்கள், மகளிர் அமைப்புகள் உட்பட சமூகம் சார்ந்த பிரக்ஞையுள்ள எவரும் இவ்வாறான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமன்றி எந்த அரசியலாளரும் தமது அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
 

 

8 comments:

  1. அஸ்ரப் அவர்கள், பின்பு கண்டி உடதலவின்ன கொல்லப்பட்ட போராளிக்கள்....இப்போது நம் சமுகத்தின் ஏழை பெண்கள்...இப்படி தேர்கல் காலங்களில் இவர்களை போஸ்டர் அடித்து ஓட்டி வாக்கு பிச்சை கேட்டு முஸ்லிங்ளை அவமானப்படுத்தும் ஈன செயலை இவர்கள் எப்போது நிறுத்தவார்கள்...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. well well nalla seithi nantri

    ReplyDelete
  4. Once again the dirtiest politics by Hakeem and SLMC. For votes they are selling the faces of innocent Muslim girls. This is really uncivilized! We, Muslims, should not let this happen. These people are prepared to do whatever they can just for votes. Shame!Shame!Shame!

    ReplyDelete
  5. செய்தி உண்மை என்றால், மேற்படி போஸ்டர் உண்மையிலேயே முஸ்லிம் காங்கிரசால்தான் ஓட்டப் பட்டிருந்தால்..........

    முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் இழிவான ஒரு செயலை செய்துள்ளது.
    இது ஒரு கேவலமான செயலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

    ஒரு முஸ்லிம் அகதிச் சகோதரியின் மானத்தை விற்று வாக்குக் கேட்கும் இவர்களெல்லாம், நமது பள்ளிவாசல்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் என்று நம்ப முடியுமா?

    ReplyDelete
  6. யாரோ பெத்த பிள்ளையின்ர படத்தப் போட்டு வோட்டுப் பிச்சை கேக்கிறவயல்,
    தங்களின்ர மனுசி மக்களின்ர படத்தப் போடுவினமே?

    ReplyDelete
  7. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் எதையோ கடித்ததுமாதிரி போய்விட்டது எமது முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடு.

    ReplyDelete

Powered by Blogger.