இஸ்லாமிய பிரசாரக் களமாக மாறிய லண்டன் ஒலிம்பிக் அரங்கு
தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் பரிமாறப்படும் ஒலிம்பிக் களம் நிறைவை எய்தியுள்ள நிலையில் அது விட்டுச்சென்ற நினைவுகளும் சுவாரஷ்யங்களும் ஏராளம். ஆரம்பம் முதலே பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்திய லண்டன் ஒலிம்பிக் 2012' முஸ்லிம் சமூகத்துக்கு கற்பித்த பாடங்களையும் நாம் கற்றுக் கொள்ள மறந்தவைகளையும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.
வழமைக்கு மாற்றமாக அதிகமான முஸ்லிம்போட்டியாளர்கள் பங்குகொண்ட இந்த ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை ஏற்பாட்டில் எந்தளவு தூரம் முஸ்லிம்கள் கருத்திற்கொள்ளப்பட்டார்கள் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நம்பகரமான பதிவுகள் மற்றும் தரவுகளின் படி பயிற்சியாளர்கள், போட்டிக்குழு அதிகாரிகள் நீங்கலாக முஸ்லிம் போட்டியாளர்கள் மட்டும் 3500 பேர் வரையில் பங்கு கொண்டதாக தெரியவருகிது.
இந்த 3500 பேரில் பதக்கம் வென்றவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டடிப்படையில் மிகக் குறைவாக இருந்தாலும் சமூகத்தை நோக்கி பல நல்ல முன்னுதாரணங்களை விதைத்து விட்டது எனலாம். ஏனெனில் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளாயினும் சரி, இதர போட்டிகளாயினும் சரி, முஸ்லிம் வீர, வீராங்கனைகள் பங்குபற்றுவதில் தயக்கம் காட்டி வந்தனர். அதற்கு ஆடை விவகாரம், உணவு விவகாரம் என பல காரணங்களோடு சில அரசியல் காரணிகளும் ஆதரவக இருந்து வந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
எனினும் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை பொருத்தவரை குறித்த மூன்று காரணங்களிலும் போராட்டம் மற்றும் பல்வேறு எச்சரிக்கைகளுக்குப் பின்னர் சமநிலை பேணப்பட்டதை ஊடக அறிக்கைகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தகுதிகாண் போட்டிகள் ஆரம்பித்தபோதே சர்ச்சைகளும் பிரச்சினைகளும் முஸ்லிம் போட்டியாளர்களை துரத்த ஆரம்பித்தது. உதைப்பந்தாட்ட வீராங்கனைகள் களத்தில் ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பங்குபற்றுவது குறித்து சர்ச்சை நீடித்தது. இது தொடர்பில் ஈரான், சவூதி அரேபியா, ஜோர்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் உறுதியுடன் செயற்பட்டதையடுத்து உதைப்பந்தாட்டப் போட்டியில் ஹிஜாப் அணிவதற்கு பிபா' (குஐகுயு) என்ற சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகாரமும் ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரமும் பெற்றுக் கொள்ளப்பட்டது. குழுப் போட்டிகளில் ஏற்பட்ட இந்த ஹிஜாப் சர்ச்சை ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பம் நெருங்க தடகளப் போட்டிகளை நோக்கியும் கை நீட்டத் தொடங்கியது.
பளு தூக்கும் போட்டி, குறுந்தூர நீண்டதூர ஓட்டங்கள், வாள் சண்டை என அதன் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம். ஒலிம்பிக் குழுவுக்கு முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் போட்டியாளர்களும் தொடர்ந்து வழங்கிய எச்சரிக்கைகளாலும் அழுத்தங்களினாலும் தடகளத்திலும் ஹிஜாபுக்கு அங்கீகாரம் கிடைத்தது. படகோட்டல், வாள் சண்டையிலும் ஹிஜாப் அணிந்த வீராங்கனைகளின் புகைப்படங்களுக்கு தங்கம் வென்ற போட்டியாளர்களின் அந்தஸ்து கொடுத்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன. இந்நிலையில் இறுதிச் சவாலாக பெண்களுக்கான ஜூடோ போட்டிகள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டன. எனினும் போட்டிகளில் ஹிஜாபை அனுமதிக்காவிடில் ஒலிம்பிக்கை புறக்கணிக்கப் போவதாக சவூதி அரேபியா எச்சரித்ததோடு குறித்த சவூதி வீராங்கனையும் அதில் உறுதியாக இருந்ததையடுத்து ஹிஜாப் அணிய ஒலிம்பிக் நிர்வாகமும் சர்வதேச ஜூடோ சம்மேளனமும் அங்கீகாரம் வழங்கியது.
ஹிஜாப் சர்ச்சை அழுத்தங்களாலும் எச்சரிக்கைகளாலும் தீர்க்கப்பட்ட நிலையில் முஸ்லிம் போட்டியாளர்கள் நோன்பு நோற்பதிலும், அதனோடு போட்டிகளில் கலந்து கொள்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார்கள் எனலாம்.
இங்கிலாந்தைப் பொருத்தவரை கடந்த ரமழான் மாதத்தில் சுபஹ் தொழுகைக்கான அதான் ஒலிக்கும்நேரம் சுமார் மு.ப. 2.44 ஆகவும் சூரிய அஸ்தமன நேரம் பி.ப. 8.53 ஆகவும் இருந்தது. எனவே முஸ்லிம் போட்டியாளர்களும் குழுவினரும் சுமார் 18 மணித்தியாலயங்களுக்கு மேல் நோன்பு இருக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது. அத்துடன் இந்த 18 மணித்தியாலயங்களுக்குள்ளேயே பெரும்பாலான பயிற்சி நடவடிக்கைகளும் போட்டிகளும் இடம்பெற்றதால் அதற்குரிய சத்துக்களையும் சேகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
நோன்பு பிடித்துக் கொண்டு போட்டிகளில் பங்குகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் முஸ்லிம் போட்டியாளர்கள் ஸஹர் செய்வதிலும் இப்தாரின் போதும் பல தடங்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஏனெனில் போட்டி மற்றும் பயிற்சிகளுக்குரிய ஊட்டச் சத்தினை பெற்றுக் கொள்ளும் வகையில் ஹலாலான உணவுகள் தொடர்பில் ஒலிம்பிக் கிராமத்துக்குள் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமையே இதற்குரிய காரணமாகும். லண்டன் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி ஆரம்ப ஓரிரு நாட்களில் இது தொடர்பில் அச்சநிலை காணப்படடதாகவும் பின்னர் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதனோடு பல்வேறு சுவாரஷ்யங்களும் மன நெகிழ்வு அம்சங்களையும் இம்முறை லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் எமக்கு விட்டுச் சென்றுள்ளன என்றால் அதனை மறுப்பதற்கில்லை.
உடை, உணவு கலாசார விடயங்களில் முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தை எடுத்தியம்பி முன்மாதிரியாக போட்டியாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஒரு குழுவினர் ஈடுபட்டமையானது முஸ்லிம் உலகைப் பொருத்தவரை ஒரு பாரிய வெற்றியே!
ஐநுசுயு என்ற இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையம் ஒலிம்பிக் கிராமத்துக்குள் மேற்கொண்ட அழைப்புப் பணிகளும் இம்முறை ஒலிம்பிக் போட்டிகளின் சுவாரஷ்யத்தை முஸ்லிம்கள் மத்தியிலும் பிறரிடத்திலும் மேலும் அதிகரித்தது எனலாம். ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்து செல்பவர்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களை கருத்திற்கெண்டு இந்த அழைப்புப் பணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாழ்க்கை விளையாட்டு மட்டுமா (ஐள டுகைந தரளவ ய பயஅந) என்ற வாசகத்தோடு ஒலிம்பிக் கிராமத்தில் அழைப்புப் பணிகளில் ஈடுபட்ட இவர்களுக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் மிகவும் உயர்வானது.
இதற்கு முன்னர் பல்வேறு விவாதங்கள் மற்றும் பொது நிகழ்வுகள் மூலம் அழைப்புப் பணிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ள ஐநுசுயு வுக்கு ஒலிம்பிக் கிராமம் ஒரு புதிய அனுபவமே.
ஏனெனில் அழைப்புப் பணி ஆரம்பிக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே சுமார் 10- 15 பேர்வரையில் இஸ்லாத்தில் நுழைந்துள்ளதாக ஒலிம்பிக் கிராம தகவல்களை ஆதாரம் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் இக்குழு இம்முறை தனது பெண்கள் பிரிவை பாதுகாப்பு நிமித்தம் அழைப்புப் பணியில் ஈடுபடுத்தவில்லையென தெரியவருகிறது. இஸ்லாத்தில் புதிதாக இனைந்தவர்களில் நடத்திச் செல்லப்படும் குறித்த இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு மையமானது இம்முறை ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை முஸ்லிம்கள் மனதில் ஒரு மிகப்பெரும் பதிவே.
பதக்கங்கள் பல கைமாற்றப்பட்டபோதும் சர்ச்சைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்ட போதும் அழைப்புப் பணியாலும் நோன்பு தொடர்பிலான புதிய அனுபவத்தினாலும் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள்' முஸ்லிம்களுக்கு பல பாடங்களையும் பதிவுகளையும் விட்டுச் சென்றுள்ளன.
இந்த பதிவுகள் ஏனைய போட்டிகளிலும் குறிப்பாக 2022 கட்டாரில் இடம்பெறவுள்ள பீபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளிலும் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தும் என்ற விளையாட்டு விமர்சகர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில் 'இஸ்லாம் ஒரு சிறந்த வாழ்க்கை நெறி' என்பதை உணர்த்தும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
كلمةالله هي العليا(ALLAHWIN WAAKKU ATHUTHAAN UYARWAANATHU.) ENRA IRA WASANAM NROOPIKKAPPADDULLATHU.MAASHA ALLAH.
ReplyDelete