நகரம் முதல் கிராமம் வரை அதிகாரப் பகிர்வு அமுல்படுத்த்பபட வேண்டும் - திஸ்ஸ விதாரண
மொஹமட் ஹபீஸ்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு, கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் இன்று நடாத்திய சர்வதேச மாநாடு ஒன்றில் வைத்து சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன அவர்களிடம் 'யுத்தத்தால் பாதிக்கப்ட்ட பெண்களது சமாதானம் பாதுகாப்பு அபிவிருத்தி தொடர்பாக இலங்கை பெண்களுக்கான நிகழ்ச்சி திட்டம்' என்ற ஓர் அறிக்கையை கையளிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றி சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரன தெரிவித்ததாவது,
இவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள விடயங்கள் மிக பொருத்தமாக உள்ளன. இதனை அமுல் படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக நகரம் முதல் கிராமம் வரை அதிகாரப் பகிர்வு முழுமையா அமுல் படுத்த்பபட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்படுதல் வேண்டும்.
அடுத்ததாக, பல் இன சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடiயிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பினால் மட்டுமே பெண்களது அபிவிருத்தயை பூரணமாக முன்னெடுக்க முடியும்.
உலகில் எந்த நாட்டில் யுத்தம் நடந்தாலும் எக் காலத்தில் நடந்தாலும் அதனால் கூடுதல் பாதிக்கப்படுவோர் பெண்களே. எனவே தீர்மானம் எடுக்கும் அமைப்புக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். எனது கருத்தின் படி ஆகக் குறைந்தது தேர்தல்களில் 30 சத வீதமான பெண்களுக்காவது சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
இச் சல்வதேச மஹா நாட்டில் அமைச்சர் திருமதி சுமேதா டீ. ஜயசேன பாராளுமன்ற அங்கத்தவர் ரோஸீ சேனாநாயக்க சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்ற லைபீரியவை சேர்ந்த லெமா கோபி, டிஸ்னி நிறுவனத்தை சேர்ந்த அல்பியன் டிஸ்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் சுமித்திரா ரத்நாயகக் தலைவி விசாகா தர்மதாச மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் உறபட பலர் இதில் கலந்து கொண்டனர். 2012 08 17
Post a Comment